Monday, October 24, 2011

ஏ. ஆர். ரஹ்மானுக்கு ப்பளிக்சாய்ஸ் விருது



பெல்ஜியம் நாட்டில் நடந்த உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் 2011 நிகழச்சியில் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு ப்பளிக்சாய்ஸ் விருது கிடைத்துள்ளது.
இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஒஸ்கர் விருதுகள், இரண்டு கிராமிய விருதுகள் வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
127 அவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு சிறப்பான முறையில் ஒரிஜினல் இசையை கம்போஸ் செய்துள்ளமைக்காக ஏ. ஆர். ரஹ்மானின் பெயர் மறுபடியும் ஓஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் அவருக்கு ஓஸ்கர் கிடைக்காமல் போனது, இந்நிலையில் பெல்ஜியம் நாட்டில் உலக சவுண்டுடிராக் அகாடமி விருதுகள் நிகழ்ச்சி நடந்தது, இதில் 127 அவர்ஸ் படத்தில் சிறப்பாக இசையமைத்தற்காக ஏ. ஆர். ரஹ்மானுக்கு பப்ளிக்சாய்ஸ் விருது வழங்கப்பட்டது.
127 அவர்ஸ் படத்திற்காக எனக்கு பப்ளிக்சாய்ஸ் விருது கிடைத்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் உலக சவுண்டு டிராக் அகாடமிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரஹ்மான்  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment