யாழ்.வண்ணார் பண்னையைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் முன்பு அறிமுகம் இல்லாதவர் ஒருவரை யாழ்.நல்லூர் உற்சவத்தின் போது சந்தித்து இருக்கிறார்.
அந்த இளம் பெண்ணை தனது தொலைபேசியின் மூலம் காதல் லீலையால் வசப்படுத்தி இருக்கிறார் முன்னர் தனது மனைவியைத் தீயிட்டுக் கொழுத்திய கிளிநொச்சி பென்னகர் மத்தியைச் சேந்த உ. உதயகுமார் (வயது 25) ஒரு பிள்ளையின் தகப்பன்.
இவர் அந்தப் பெண்ணுடன் தொலைபேசியில் (இலக்கம் 0773287219) ஆபாசமாக கதைத்து காதலிக்குமாறு வற்புறுத்தி, ஏமாற்றி அந்தப் பெண்ணை ஒரு மாதகாலமாக கிளிநொச்சி முறிகண்டிப்பகுதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்திய பின்னர் வீதியில் விட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
நேற்று (07.10.2011) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தனது தாயார் மற்றும் பேத்தியாருடன் வந்து தனக்கு நடந்த அவலத்தை விபரித்து கண்ணீர் வடித்துள்ளார். தனக்கு நீதிவேண்டும் என அவர் வாதிடுகிறார்.
தன்னை ஏமாற்றி கட்டாயப்படுத்தி காதலிப்பதாக நடித்து ஒரு மாதமாக தனது பாலியல் இச்சையை நிறைவு செய்து விட்டு தன்னை வீதியில் விட்டுச் சென்றதாக அவர் கூறுகின்றார். அவனுடைய தாயரையும் அவரது சகோதரியையும் பலிவாங்கியே தீருவேன் என அப் பெண் கூறுகிறார்.
இவரின் இந்த பரிதாப நிலமையைக் கண்ட யாழ்.தமிழ் பொலிஸ் உயரதிகாரி நீங்கள் கிளிநொச்சியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு திருப்பி அனுப்பிவைத்தள்ளார்.
இந்த 18 வயதான இளம் பெண் தற்போது கருத்தரித்துள்ளார். அவரின் அந்த குழந்தைக்கு தகப்பனின் பெயர் வேண்டும் என அவர் ஆணித்தனமாக இருக்கிறார்.
செல்போனில் வந்த காதலால் வயிற்றில் குழந்தையுடன் அழுது புலம்பும் வாழ்க்கையாக அந்த பெண்ணின் வாழ்க்கை அமைந்துள்ளது. அவனுக்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்த பெண் தன்னை ஏமாற்றியவரின் கைபேசி இலக்கங்களைத் தந்துள்ளார்.
இதேவேளை இவரது முன்னாள் மனைவியை வீட்டில் அடைத்து வைத்து மனநோய் ஆக்கிப் பின்னர் அவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்து விட்டார்கள் என்றும் மேற்படி பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment