Sunday, October 2, 2011

நீ அருகில் இல்லை.......



உன்னை காதலிக்க துவங்கிய அந்த நொடிகள் தான்,
    எத்தனை அழகானவை, அற்புதமானவை...
என் மனதில் சிறு சிறு கனவின் விதைகளை
    நீ நட்டுச் சென்ற அந்த ஆழமான பொழுதுகள்...
இன்று அந்த கனவுகள் மலராய் பூத்து
   குலுங்கும் நேரத்தில் நீ அருகில் இல்லை...
மனதில் மலர்ந்த மலர்களை
   ரசிக்கவும் இயலாமல், களையென பிடுங்கி எறியவும்
முடியாமல் என் கண்ணீர்த்துளிகளை
   அவற்றின் வேர்களில் பாய்ச்சுகிறேன்....
நீயும் நானும் கொண்ட நேசம் ரம்மியமானது...
     அதிகாலை பொழுதைப்போல,
முழு நிலவின் பிரகாசத்தைப் போல,
     மெல்லிய மழையின் தீண்டலைப்போல
நீ எனக்குள் நிறைந்திருக்கிறாய்
  அருவி எனப் பெருகி, எப்படிச் சொல்லப் போகிறேன்.
நதியைப் போல் நீளுமோ, கடலைப் போல் ஆழமாகவோ...
   என் கவிதைகளில் கிறுக்கிக் கொண்டா?
பின் அடையாளம் எதுவென்பாய்?
   இதோ என் உறக்கம் தொலைத்த விழிகளும்,
தத்தளிக்கும் கனவுகளும்,...
   வார்த்தைகள் அற்றுக் கிடக்கும் கவிதைகளும்,
காரணமின்றி கண் நிறைக்கும் நீரும்....
   இவை இன்றி வேறென்ன சொல்லிவிட முடியும்
நம் நேசத்தைப் பற்றி...

No comments:

Post a Comment