Sunday, October 9, 2011

அதிசய இரட்டையர்கள்(படங்கள் இணைப்பு)

கேய்டனும் லேய்ரனும் மக்களால் வியந்து பார்க்கப்படுபவர்களாக ஆகிவிட்டனர். ஒரேமாதிரியான உடைகளை அணிந்து காணப்படும் இருவரையும் பார்த்தால் இவர்களை சகோதரர்கள் என்று மட்டுமல்ல இரட்டையர்கள் என்று கூறப்படுவதை பார்த்தால் கூட நம்பமுடியாது. ஏனெனில் இவர்களில் ஒருவர் கறுப்பாகவும், மற்றவர் வெள்ளையாகவும் பிறந்ததே இதற்கு காரணமாகும்.



வருடத்திற்கு பிரித்தானியாவில் 12,000 இரட்டையர்கள் பிறக்கின்றனர். இதில் 385 பேர் கறுப்பர்களாகவும் அல்லது கலப்பினத்தவராகவும் காணப்படுகின்றனர். ஆனால் இவர்களைப் போன்ற அரிதான ஒருவர் கறுப்பாகவும், ஒருவர் வெள்ளையானவராகவும் பிறப்பது வருடத்தில் ஒரு சோடியாகத்தான் இருக்கும்.இவர்களைப் போன்ற கதையொன்றைத் திரைப்படமாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.



இந்த நிறமாற்றப் பிறப்பிற்குக் காரணமான விடயங்களையும் இவர்கள் ஆராய்ச்சியில் தற்போது பத்தில் ஒரு பிள்ளை கலப்பினத்தைச் சேர்ந்ததாக உள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால் இனியும் இவ்வாறான பிறப்புக்கள் பொதுவில் காணப்படலாமென்கின்றனர் ஆய்வாளர்கள்.



இதற்கு காரணம் தந்தை நைஜீரியராகவும், தாயார் வெள்ளையினத்தவராகவும் இருந்தார். இவர்களின் தந்தையார் வெள்ளையினத்தவராவார். இதனால் தாயிலிருந்தே இவர்களது பாட்டனாரின் உயிரணுக்கள் தொடர்ந்திருப்பதாகக் கூறப்படுகின்றது

No comments:

Post a Comment