Wednesday, October 12, 2011

பெற்றெடுத்த 5 நாள் குழந்தையை வீதியில் வீசிச் சென்ற கல்நெஞ்சத் தாய்!!



பிறந்து 5 நாட்களேயான பிஞ்சுக் குழந்தை ஒன்று அநாதையாக வீதியில் போடப்பட்டு சென்றிருந்த நிலையில் அக்குழந்தையை பேருவளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பேருவளை - வதகாஹவெல காலி வீதி இலக்கம் 242/03. என்ற முகவரியுடைய வீட்டின் முன்புறத்தில் இக்குழந்தை கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

நேற்றிரவு 8 மணியளவில் இக்குழந்தையை மீட்ட பொலிஸார் அதனை பெண் குழந்தை என அடையாளம் கண்டதோடு சிகிச்சைகளுக்கென நாகொட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குழந்தையை வீதியில் அநாதையாக விட்டுச் சென்ற கல்நெஞ்சத் தாய் உள்ளிட்ட பெற்றோர் யார் என பேருவளை பொலிஸார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment