Sunday, October 16, 2011

15 வயது சிறுமி அண்ணனால் கர்ப்பம்! சந்தேக நபர் விளக்க மறியலில்!!




களுவாஞ்சிக்குடிப் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிவுக்குட்பட்ட எருவில் பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் எருவில் பிரதேசத்தை சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் அவரது அக்காவின் வீட்டில் இருந்தவேளையில் திடீர் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், அந்தப் பெண் கர்ப்பம் தரித்துள்ளது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு வைத்தியசாலையினரால் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சம்பவம் தொடர்பில் சிறுமிக்கு அண்ணா உறவான ஒருவரை கைது செய்தனர்.

குறித்த நபர் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் வினோபா இந்திரன் முன்னிலையில் ஆஜர்செய்தபோது குறித்த நபரை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தர விட்டார்.

சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment