Wednesday, October 5, 2011

13 வயது சிறுமியை 35 பேர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கொடூரச் சம்பவம்



13 வயது சிறுமியொருவர் 35 நபர்களால் பல தடவைகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டமை தொடர்பான தகவல் அவிசாவலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இச் சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 8 சந்தேக நபர்கள்  இதுவரையிலும் அவிசாவலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுமிக்கு பொலிஸார் தகுந்த பாதுகாப்பு வழங்கியுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தார்.

அவிசாவலையில் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் ஏழைக் குடும்பத்தில் வசிக்கும் இச் சிறுமி, சிறுவயதிலிருந்தே பல நபர்களால் பலவந்தமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இச் சிறுமியின் பாட்டியின் பண ஆசைக்காகவே,  காமவெறியர்களின் பாலியல் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடிமைப்படுத்தப்பட்டார்.

இவ்வாறு இச்சிறுமி பாலியல் வன்முறைக்கு பலியாகும் போது நடந்த கொலைச் சம்பவமொன்று தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணையொன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment