Wednesday, October 5, 2011

8 கை கால்களுடன் பிறந்த சிறுவனின் அறுவைச்சிகிச்சைக்கு பின்னர்

 வெளியாகிய படங்கள் தீபக் பஸ்வான் என்ற குறித்த சிறுவன் இயல்பாக காணப்படும் படங்களையே நீங்கள் காண்கிறீர்கள். அறுவைச் சிகிச்சை செய்ய முன்னர் தேவையில்லாமல் வளர்ந்த கை கால்களுடன் பெரிய அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தான்.

அவனுடைய நெஞ்சுப் பகுதியில் வளர்ந்திருந்த கை கால்கள் நுட்பமான அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது
இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயதான தீபக் என்ற குறித்த சிறுவனை அறுவைச் சிகிச்சைக்கு முன்னர் கடவுளின் அவதாரம் என மக்கள் கருதினர். அவனை குறித்த கிராம மக்கள் வணங்கினர்.

குறித்த சிறுவனுக்கு 50000 ஸ்டேர்லிங் பவுண்கள் பெறுமதியான அறுவைச் சிகிச்சை பெங்களூர் மருத்துவமனை ஒன்றினால் இலவசமாக அளிக்கப்பட்டது.

அறுவைச் சிகிச்சையின் பின்னர் குறித்த சிறுவன் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது என்னால் எனது மூத்த சகோதரர்களை விட வேகமாக ஓட முடிகிறது. முன்னர் அப்படி முடியவில்லை...

தற்போது புதிய உடல் எனக்கு கிடைத்ததாக உணர்கிறேன். நான் நல்ல சந்தோசமாகவும் இருக்கிறேன்.



No comments:

Post a Comment