
21வயதுப் பிரிவுப்பெண்களுக்கான கோல் ஊன்றிப் பாய்தலில் 2009 ஆம் ஆண்டு தென்பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 2.95 மீற்றர் உயரத்தைக்கடந்து புரிந்த சாதனையை 2 வருடங்களின் பின்னர் (2011 ஆம் ஆண்டு) அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவி தனுஷா 3.10 மீற்றர் உயரத்தைக்கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
தங்கப்பதக்கத்தைப்பெற்றுள்ள இவர் 21 வயதுப் பிரிவு பெண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 149 சென்றிமீற்றர் உயரம் பாய்ந்து இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
19 வயதுப் பிரிவுப்பெண்களுக்கான கோல் ஊன்றிப் பாய்தலில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அளவெட்டி அருணோதயக்கல்லூரி மாணவி எஸ்.தனுஷா 2.81 மீற்றர் உயரத்தைப்பாய்ந்து புரிந்த சாதனையை ஒரு வருடத்தின் பின்னர் (2011ஆம் ஆண்டு) அதே கல்லூரி மாணவியான பவித்திரா 3 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய சாதனை படைத்து தங்கப்பதக்கதைப் பெற்றுள்ளார்.
21 வயதுப் பிரிவு பெண்களுக்கான கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவி காவேரி 2.90 மீற்றர் உயரம் பாய்ந்து இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
17 வயதுப்பிரிவு ஆண்களுக்கான கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவன் லவணன் 3.71 மீற்றர் உயரம் பாய்ந்து முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
17 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கோல் ஊன்றிப் பாய்தல் நிகழ்வில் குளமங்கால் ஆர்.சி. வித்தியாலய மாணவன் அன்ரனி பிரசாந்த் 3.71 மீற்றர் உயரம் பாய்ந்து இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
19 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கோல் ஊன்றிப் பாய்தல் நிகழ்வில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவன் றொசானன் 3.65 மீற்றர் உயரம் பாய்ந்து மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
19 வயதுப் பிரிவு ஆண்களுக்கான தட் எறிதல் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவன் பானுப்பிரியன் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
17 வயதுப் பிரிவு பெண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் மாதகல் சென்.ஜோசப் வித்தியாலய மாணவி அனற் 1 நிமிடம் 10.61 செக்கனில் ஓடி முடித்து வர்ண விருதைப் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment