Friday, October 7, 2011

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்!




30 வருடங்களாக மூடப்பட்டிருந்த யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க திட்டங்கள் வகுத்துள்ளதாக அரச வளங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் அபிவிருத்தி அமைச்சர் தயாஸ்ரீத திசேரா தெரிவித்துள்ளார்.

எந்த நிறுவனங்களுடனும் கூட்டு சேராது அரசாங்கமே இந்த சீமெந்து நிறுவனத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக 6 முதல் 7 பில்லியன் ரூபா வரை செலவாகும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில், 250 முதல் 500 மெற்றித் தொன் சீமெந்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் சீமெந்து தயாரிப்பதற்காக இயந்திரங்களை இறக்குமதி செய்யப்பட உள்ளன.

சீமெந்து தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்பட உள்ளதால், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் அமைச்சர் திசேரா குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment