யாழ். வட்டுக்கோட்டையிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவி மீது அதே பாடசாலையைச் சேர்ந்த தரம் 10இல் கல்வி பயிலும் மாணவனொருவன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் சுழிபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ தினத்தன்று குறித்த மாணவி பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பியபோதே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் மாணவி சத்தமிட்டபோது குறித்த மாணவன் அம்மாணவியின் வாயில் துணியை திணித்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக விசாரணை மூலம் தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
குறித்த மாணவி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, குறித்த மாணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளான்.
No comments:
Post a Comment