Saturday, October 8, 2011

பெண்புலிகளுக்குக் கருக்கலைப்புப் பாடம் நடத்திய இமெல்டா சுகுமார்!

 கருக்கலைப்பு செய்யும் இளம் பெண்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதாகவும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்முறைகளும் அதிகதித்துக் காணப்படுவதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் முன்னாள் பெண்புலிகளுக்கு முன்பள்ளிப் பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

பெண்கள் மீதான வன்முறை யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் பெண்கள் தங்களுககு நடைபெறும் வன்முறைகள் குறித்து வெளியில் சொல்வதில்லை. இதனால் அவர்கள் அவலங்களை எதிர் கொள்கின்றார்கள்.

இந்த வன்முறைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக பெண்கள் அபிவிருத்தி அமைப்புக்களுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment