Saturday, October 8, 2011

இளைப்பாறுவதற்கு 130 அடி பள்ளத்தில் குளியல் தொட்டி(படங்கள் இணைப்பு)

 ஒரு குளியல் தொட்டியில் இளைப்பாறுவது என்பது எல்லோருக்கும் பிடித்ததுதான். இவர்கள் இப்படி பாலத்திலிருந்து 130 அடி ஆழத்தில் கயிற்றைக் கட்டி இளைப்பாறுகிறார்கள்.



சுவிட்சர்லாந்திலுள்ள Gueuroz என்ற பாலத்திலிருந்து ஒரு குளியல் தொட்டியைப் பலகையில் வைத்துக் கயிறுகளால் கட்டி, கீழே இறக்கி அதனுள்ளே குளிக்கத் தீர்மானித்திருக்கிறார்கள் இவர்கள். இந்த குளியல் தொட்டி தரையிலிருந்து 500 அடியாகவும் பாலத்திலிருந்து 120 அடியிலும் தொங்கவிடப்பட்டு இருக்கிறது.



இதில் இருப்பவர்கள் 6 மணித்தியாலங்கள் இவ்வாறு செலவழித்தனர். இந்த 6 மணித்தியாலத் துணிகரச் செயலைச் செய்வதற்காக இவர்கள் 2500 மணித்தியாலங்கள் திட்டமிட்டதாகத் தெரிவித்தனர்.

2007 ஆம் ஆண்டு இதே குழுவினர் ஐரேப்பாவின் பெரிய மலையுச்சியான மொன்ற் பிளாங் இல் 15000 அடி உயரத்திற்கு பெட்டிகள், குழாய்கள் மற்றும் வாயு உருளைகளைக் வாயில் வைத்துக்கொண்டு எந்தவிதமான உலங்குவானூர்தியின் உதவியோ வெளியுதவியோ இன்றி ஏறிச் சாதனை படைத்திருந்தனர்.

No comments:

Post a Comment