![]() மூளையின் செயல்பாடுகளை கண்டறியும் சாதனங்கள் உள்பட பல்வேறு எலக்ட்ரானிக் கருவிகளை ஜப்பானை சேர்ந்த நியூரோவேர் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இவர்கள் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ள கருவி “நெகோமிமி”. அதாவது நியூரோ கம்யூனிகேஷன் மிமி. மிமி என்றால் ஜப்பானிய மொழியில் பூனையின் காதுகளை குறிக்கும். இடுப்பு பெல்ட் போல இருக்கும். இதை தலையில் அணிந்து கொள்ள வேண்டும். அதனுடன் பூனைக் காதுகள் போல 2 காதுகள் நீட்டிக் கொண்டிருக்கும். மூளையில் ஏற்படும் அதிர்வுகள், மாற்றங்களை பெல்ட்டில் இருக்கும் மினி கருவி பதிவு செய்யும். அதற்கு ஏற்ப காது போன்ற பகுதி செயல்படும். நாம் சுறுசுறுப்பாக இருந்தால் நெகோமிமி காது விரைப்பாக இருக்கும். நமக்கு தூக்கம் வந்தாலோ, சோர்வு அடைந்தாலோ அந்த காது தொங்கிவிடும். இதுபற்றி நியூரோவேர் நிறுவனத்தின் ஆய்வுக்குழு உறுப்பினர் கனா நகானோ கூறுகையில், பள்ளியில் பாடம் நடக்கும்போதே சில மாணவர்கள் தூங்குவார்கள். ஆபீஸ் மீட்டிங்குகளில் தூங்குபவர்களும் உண்டு. சிலரது கண் திறந்திருக்கும். ஆனால் தூங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களை நெகோமிமி மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். சுவாரஸ்யத்துக்காக இதை உருவாக்கியுள்ளோம். மருத்துவம் உள்பட பல துறைகளில் இந்த வசதியை பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்றார். |
Wednesday, October 5, 2011
மூளையின் செயல்பாட்டுக்கு ஏற்ப அசையும் செயற்கை காதுகள் கண்டுபிடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment