Sunday, October 16, 2011

யாழ்.பல்கலையின் மாணவ ஒன்றியத்தலைவர் மீது தாக்குதல்! (படங்கள் இணைப்பு)




யாழ் திருநெல்வேலிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த யாழ் பல்கலைக்களகத்தின் மாணவ ஒன்றியத்தலைவர் மீது இனம்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம்பற்றித்தெரியவருவதாவது

யாழ்ப்பாணத்தில் யாழ் பல்கலையின் மாணவ ஒன்றியத் தலைவர் தவபாலன் (வயது 25) தனது வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்த போது திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அண்மித்த பகுதியில் வைத்து மதியம் 1 மணியளவில் இனம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பலின் தாக்குதலுக்குள்ளானார். இதை சினிமாப்பாணியில் நடைபெற்ற தாக்குதல் என்று சொல்லலாம்.

மக்கள் பலரும் பார்த்தக் கொண்டிருக்க மாணவ ஒன்றியத் தலைவரை மோட்டார் சைக்கிளில் விரட்டி விரட்டி கடுமையாக தாக்கினார். தாக்குதலுக்குள்ளா தவபாலன் தனது உயிர்ப்பாதுகாப்பிற்காக மோட்டார் சைக்கிளையும் விட்டு ஒடித்தப்பி விட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


யாழ்.பல்கலையின் மாணவ ஒன்றியத்தலைவர் மீது தாக்குதல்

No comments:

Post a Comment