மத்திய பிரதேசத்தில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு மத்திய பிரதேச மாநிலம் பொட்னா என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் இன்று மதியம் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனைக் கேட்ட விவசாயி அங்கு ஒரு பச்சிளம் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அக்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அக்குழந்தை பிறந்து 48 மணி நேரமே ஆகியுள்ளதாகவும், தற்பொழுது நலமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த கல்வித்துறை அமைச்சர் அர்ச்சனா சிட்னி குழந்தையின் உடல்நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ள மருத்துவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி குழந்தையின் பெற்றோரை தேடிவருகின்றனர். 2009-ம் ஆண்டில் பெண் சிசு கொலையில் அதிக எண்ணிக்கை உள்ள மாநிலமாக மத்திய பிரேதசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment