Saturday, October 22, 2011

கணவன் வெளிநாடு சென்று 14 மாதங்களின் பின் குழந்தை பெற்ற பெண் கணவனால் விவாகரத்து

!


பிரான்ஸில் தற்போது வசிக்கும் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும் வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த வருடம் ஆவணி மாதம் இந்தியாவில் திருமணம் நடைபெற்றதாக தெரியவருகின்றது.

அதன் பின்னர் மணமகன் இருவாரங்கள் மணப்பெண்ணுடன் தங்கி நின்று பின்னர் பிரான்சிற்கு பயணமானார். இலங்கை திரும்பி தனது சகோதரியுடன் இருந்து வந்த மணப்பெண் கடந்த வாரம் ஆண் குழந்தையைப் பெற்றதாக தெரியவருகின்றது. இதனை அறிந்த கணவனின் சகோதரர் வெளிநாட்டில் உள்ள கணவனுக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து இரு வீட்டாருக்கும் இடையே கடும் சண்டை மூண்டுள்ளது.

தற்போது மணமகன் இந்தியா வந்துள்ளதாகவும் இருவரது திருமணத்தையும் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணப்பெண் பிரபல தொலைத் தொடர்பு வலையமைப்பின் ஊழியர் என்பபதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment