Friday, October 28, 2011

7 பில்லியன் மக்கள் தொகையில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிந்துகொள்வதற்கு

உலக மக்கள்தொகையானது ஏழு பில்லியனை நெருங்குகிறது. இந்நிலையில் 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது. பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது இந்த இணைப்பு.



ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்கிறார்கள். மேலும் Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டதாம்.

http://www.bbc.co.uk/news/world-15391515

Tuesday, October 25, 2011

மனைவியை காதலிப்பது எப்படி?

Husband and Wife
கணவனின் பாதி தான் மனைவி. அப்படிப்பட்ட மனைவியைக் காதலிப்பது எப்படி என்று பார்ப்போமா.

தினமும்
காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கப் போவதற்கு முன்பு வரை பம்பரமாய்
சுழலும் மனைவிக்கு ஒரு நாள் ஓய்வு கொடுங்கள். வீட்டு வேலைகளை நீங்கள்
செய்து அசத்துங்கள். நீங்கள் அவ்வாறு பெயருக்கு சொன்னால் கூட வேணாமுங்க,
வாரம் முழுவதும் ஓயாது உழைக்கிறீங்க. சனி, ஞாயிறு நிம்மதியா ஓய்வு எடுங்க,
வீட்டு வேலைகளை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி உங்களை வேலை
செய்யவிடமாட்டார்.

அது தான் மனைவியே சொல்லியாச்சுல நாம் போய் கால்
மேல காலப்போட்டு டிவி பார்ப்போம் என்று சென்றுவிடாதீர்கள். நீயும் தான
கண்ணு தினமும் உழைக்கிற இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடு என்று சொல்லி
வீட்டு வேலைகளைச் செய்யுங்கள். மனைவி உச்சி குளிர்ந்து போவார்.

எதிர்பாராத
நேரத்தில் கட்டித் தழுவி அன்பாக ஒரு முத்தம் கொடுங்கள். ஆஹா, என்
புருஷனுக்கு என் மேல் எவ்வளவு பாசம் என்று பூரித்துப் போய்விடுவார்.
திடீர் என்று ஏதாவது ஒரு பரிசு கொடுத்து அசத்துங்கள். மனைவி வேலைக்கு
செல்பவரா? அவரை ஊக்குவியுங்கள். அதனால் அவர் இன்னும் திறமையாக
பணிபுரிவார். அலுவலகப் பிரச்சனைகளைக் கூறினால் முடிந்தால் தீர்வு காண
உதவுங்கள்.

மனைவியை மனதாரப் பாராட்டுங்கள். அது அவரின்
தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு
அழைத்துச் செல்லுங்கள். அங்கு சிலு, சிலுவென்று காற்று வீசுகையில்
மனைவியின் காதருகில் சென்று ஐ லவ் யூ என்று சொல்லுங்கள். அவர் பதில்
சொல்லாமல் புன்னகை புரிந்தால். ஐ லவ் யூ சொன்னால் லவ் யூ டூ என்று சொல்ல
வேண்டும் என்று கூறுங்கள்.

டிவி பார்க்கையில் எப்பொழுதுமே
உங்களுக்கு பிடித்த சேனல்களை மட்டும் பார்க்காதீர்கள். உங்கள் மனைவிக்கு
பிடித்த சேனலை வைத்து இருவரும் சேர்ந்து பாருங்கள். (நாங்க எங்க
எங்களுக்கு பிடித்த சேனல் பார்க்கிறோம், எப்ப பார்த்தாலும் சீரியல் தான்
ஓடுகிறது என்று நீங்கள் சொல்வது கேட்கிறது)

இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் மொட்டை மாடியில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள்.

நீங்கள் எப்பொழுது அவரை முதன்முதலாகப் பார்த்தீர்கள். நிச்சயதார்த்தத்தில் எப்படி ஓரக்கண்ணால் பார்த்தீர்கள், திருமணத்தில் உங்கள் மனைவி எப்படி வெட்கப்பட்டு தலைகுனிந்தபடி நின்றார், குழந்தை பிறந்தபோது எப்படி உணர்ந்தீர்கள் என்பது போன்று பேசுங்கள். இதெல்லாம் எத்தனை தடவை பேசினாலும் அலுக்காத ஆனந்த விஷயங்கள்.

Monday, October 24, 2011

ஏ. ஆர். ரஹ்மானுக்கு ப்பளிக்சாய்ஸ் விருது



பெல்ஜியம் நாட்டில் நடந்த உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் 2011 நிகழச்சியில் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு ப்பளிக்சாய்ஸ் விருது கிடைத்துள்ளது.
இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஒஸ்கர் விருதுகள், இரண்டு கிராமிய விருதுகள் வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
127 அவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு சிறப்பான முறையில் ஒரிஜினல் இசையை கம்போஸ் செய்துள்ளமைக்காக ஏ. ஆர். ரஹ்மானின் பெயர் மறுபடியும் ஓஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் அவருக்கு ஓஸ்கர் கிடைக்காமல் போனது, இந்நிலையில் பெல்ஜியம் நாட்டில் உலக சவுண்டுடிராக் அகாடமி விருதுகள் நிகழ்ச்சி நடந்தது, இதில் 127 அவர்ஸ் படத்தில் சிறப்பாக இசையமைத்தற்காக ஏ. ஆர். ரஹ்மானுக்கு பப்ளிக்சாய்ஸ் விருது வழங்கப்பட்டது.
127 அவர்ஸ் படத்திற்காக எனக்கு பப்ளிக்சாய்ஸ் விருது கிடைத்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் உலக சவுண்டு டிராக் அகாடமிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரஹ்மான்  தெரிவித்துள்ளார்.

மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள்



குழந்தையின்மை, டென்ஷன், தவறான உணவு முறை, ரசாயன உரம் உள்ள உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களை தாக்கும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது.இதனை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதை தடுத்து உயிரை பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். பெண்களைப் பொறுத்தவரை 40 வயதில் இருந்து மார்பகப் புற்றுநோய் தாக்க வாய்ப்புகள் உள்ளது.
இதனால் 35 வயது முதல் பெண்கள் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த வயதில் பெண்களின் மார்பகத்தில் திடீர் சுருக்கம் அல்லது வீக்கம், காம்பில் நீர்வடிதல் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மார்பகத்தில் சதைக் கோளங்கள் போன்ற வளர்ச்சியின் காரணமாக மார்பகம் பெரிதாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதில் 80 சதவீதக் கட்டிகள் புற்றுநோய் கட்டிகள் இல்லை என்பதும் உண்மை.
இருப்பினும் அறிகுறிகள் ஏதும் தோன்றினால் பெண்கள் புற்றுநோய்க்கான வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். மார்பகத்தில் கட்டிகள் ஏதும் இருக்கிறதா என்பதை பெண்கள் சுயபரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
அழுத்தினால் கட்டிகள் இருப்பது போன்று தோன்றினாலோ, கட்டிகளில் வலி இருப்பது போல உணர்ந்தாலோ, வலி இல்லாவிட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
அடுத்தகட்டமாக மார்பகப் புற்றுநோய் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள மெமோகிராபி எனப்படும் எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த சோதனை மூலம் புற்றுநோயை உறுதி செய்ய முடியும்.
மேலும் நுண்ணிய ஊசியின் வழியாக கட்டியின் திசுக்களை சேகரித்து ஆய்வுக்கூடத்தில் சோதித்து அதனை உறுதி செய்து கொள்ளலாம். புற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதிகளவில் ஹார்மோன் மாத்திரை உட்கொள்பவர்கள், மாதவிலக்கு காலத்தில் மார்பில் வரும் மாற்றத்துக்கு சரியாக சிகிச்சை எடுக்காதவர்கள், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், குறைந்த வயதில் கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியவர்கள், எப்போதும் மன வருத்தத்தில் இருப்பவர்கள், அதிக உதிரப்போக்கு, அதிக வெள்ளைப் போக்கு போன்ற பிரச்னையை முறையாக கவனிக்காமல் விட்டவர்கள், தைராய்டு பிரச்னைக்கு சிகிச்சை எடுக்காதவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பரம்பரை காரணங்களாலும் வரலாம்.
பாதுகாப்பு முறை: பெண்கள் எப்போதும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். தாய்மைக் காலத்தில் பெண்கள் தாய்ப்பால் தருவது மிக முக்கியமானது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் தவறாமல் செய்ய வேண்டும். குறிப்பாக மாதவிலக்கு நிற்கும் நாட்களில் செய்வது சிறப்பானது. மார்பகப் புற்றுநோயில் வலி பெரும்பாலும் தோன்றுவதில்லை.
இதனால் வலியில்லை என்று அலட்சியம் செய்யக்கூடாது. நாள்பட்ட கேன்சருக்கு அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி மற்றும் ஹீமோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
ஆரம்பத்தில் கேன்சர் கட்டிகள் கண்டறியப்பட்டால் ஹோமியோபதியில் கட்டியை கரைப்பதற்கான மருந்துகள் உள்ளன. மேலும் புற்றுநோய் பாதிப்பை அடுத்த உறுப்புகளுக்கு பரவாமல் தடுக்க முடியும்.
கெமிக்கல் கலப்புள்ள உணவு வகைகளை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தினமும் வெறும் வயிற்றில் இரண்டு பல் பூண்டு அல்லது வெங்காயம் சாப்பிடுவதன் மூலம்  புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
முளை கட்டிய பயறு, நெல்லிக்காய் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது சிறந்தது. சுகாதாரமான குடிநீரும் அவசியம். மேலும் ரசாயனக் கலப்பில்லாத காய்கறி, பழங்கள், உணவுப் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தவிர்க்க முடியும்.

அதி நவீன கதைகளை உருவாக்குவதற்கு




ஒரு காலத்தில் ஒரு ராஜா இருந்தானாம் என்ற கதை சொல்லும் பாணியில் இருந்து இலக்கியம் எப்போதோ எங்கேயோ முன்னேறி வந்துவிட்டது.சிறுகதைகளிலும் நாவல்களிலும் நேரத்தியான கதை சொல்லும் முறைகள் பின்பற்றப்பட்டு நவீன கதை சொல்லும் முறை செழுமையாகி இருக்கிறது.
என்ன தான் நேர்த்தியாக நடையில் எழுதப்பட்டிருந்தாலும் தீவிர இலக்கியம் உட்பட தற்போதைய கதை சொல்லும் முறையே காலாவதியாகிவிட்டது என வாதிடும் நவீன இலக்கிய விமர்சகர்களும் இருக்கின்றனர்.
நமக்கு பழக்கப்பட்ட இந்த ஒற்றை கோட்டிலான(லீனியர்)கதை சொல்லலில் இருந்து விலகி நான் லீனியர் முறையில் கதை சொல்ல முன்னேற வேண்டும் என்கின்றனர்.
நான் லீனியர் என்றால் வழக்கமான ஆரம்பம், முடிவு என்றெல்லாம் இல்லாமல் புதிய உத்திகளை பயன்படுத்தி முற்றிலும் புதிய பாணியில் கதை சொல்வது. அப்படியே புதிய அனுபவத்தை ஏற்படுத்தி புதிய புரிதலையும் தரவல்லது.
இது சரியா தேவையா என்ற விவாதம் இலக்கிய உலகில் நடைபெற்று வருவது ஒரு புறம் இருக்க, இந்த பதிவு இலக்கிய விவாதம் தொடர்பானது அல்ல! ஆனால் கதை சொல்லல் தொடர்பானது. இணையத்தை பயன்படுத்தி சும்மா புதுசாக கதை சொல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் அழகான இணையசேவைகளை அறிமுகம் செய்யவே இந்த பதிவு.
இணையத்தில் கதை எழுதுவது சுலபமானது தான். ஒன்றுமே வேண்டாம், ஒரு வலைப்பதிவை துவக்கி கதை எழுத துவங்கிவிடலாம். இவ்வளவு ஏன் கூட்டு முயற்சியாக சக இணையவாசிகளோடு இணைந்து கதை எழுதும் கிரவுட் சோர்சிங் வகை தளங்களும் இருக்கின்ற‌ன. ஆனால் அவை எல்லாமே பழைய பாணியிலான கதை சொல்லல் தான்.
கதை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்றில்லாமல், ஒரு சில டிவீட்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், பேஸ்புக் பதிவுகளை ஒரு பொது சாட்டில் இணைத்து அழகாக கதை சொல்ல முடிந்தால் எப்படி இருக்கும்?
அதாவது இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் குறும்பதிவுகள்(டிவீட்கள்), பேஸ்புக் பதிவுகள், யூடியூப் வீடியோக்கள், பிளிக்கர் புகைப்படங்கள் இவற்றை எல்லாம் கொண்டே ஒரு அழகான கதை சொல்ல முடிந்தால் எப்படி இருக்கும்?
வரிகளின் விவரிப்பாக இல்லாமல் டிவீட்டாக, புகைப்படங்களாக, வீடியோக்களாக விரியும் இந்த கதை அற்புதமாக தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் ஸ்பாடிபை தளம் அதை தான் சாத்தியமாக்குகிறது.
அடிப்படையில் இந்த தளம் சமூக ஊடகம் என்று சொல்லப்படும் டிவிட்டர், பேஸ்புக் போன்ற தளங்களில் சக இணையவாசிகளால் பகிரப்படும் தகவல்களை கதையாக தொகுத்து அளிக்க உதவுகிற‌து.
பொருத்தமான கதை பாகங்களை நீங்கள் சமூக ஊடக தளங்களில் இருந்து இந்த தளத்தின் வாயிலாகவே தேடி எடுத்து கோர்த்து கொள்ளலாம். இப்படி ஒரு கதையை சொல்லிப் பாருங்கள் அல்லது ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள கதையை படித்தும் பார்த்தும் கண்டும் பாருங்கள். புதுமையான உணர்வு ஏற்படும்.
இந்த இணைய கலவையை ஆர்வம் இருந்தால் நீங்களே கூட தேடி எடுத்து கதையை உருவாக்கலாம் தான். ஆனால் பல இடங்களில் இருந்து தேடி எடுத்து அதை ஒன்று சேர்ப்பதில் உள்ள சுமைகளை இந்த தளம் இல்லாமல் செய்து அந்த பணியை சுலபமாக்குகிற‌து.
பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் ஒவ்வொரு நொடியிலும் எத்தனையோ தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பகிர்வுகளும் பதிவுகளும் இணைய மகா கடலில் காணாமல் போய் வீணாவதை தவிர்க்கும் வகையில் அவற்றில் சிற‌ந்தவற்றை தெர்வு செய்து கதையாக பகிர்ந்து கொள்வது நல்லது தானே என்று ஸ்டோரிபை கேட்கிற‌து.
இப்படி சமுக ஊடக‌ பகிர்வுகளை கொண்டு உருவாக்கப்படும் கதைகளை சுட்டிக்காட்டும் வலைப்பதிவு பகுதி ஒன்றும் இந்த தளத்திலேயே இருக்கிறது. அழகான காதல் கதை உள்ளிட்ட சுவாரஸ்ய உதாராங்களும் தரப்பட்டுள்ளது.
அதே நேர‌த‌தில் சிரியா மக்கள் எழுச்சி போன்றவையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இத்தகைய மக்கள் எழுச்சி சார்ந்த கதைகள் டிவீட்டாகவும் யூடியுப் வீடியோவாகவும் சொல்லப்படும் போது அது ஒரு சரித்திர ஆவணமாக கூட திகழலாம்.
இதே போலவே யாகி எனும் தளமும் உருவாக்ப்பட்டுள்ளது. இணையத்தை கொண்டு புதிய கதையை சொல்லுங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம், பகிரப்பட்ட கதைகளை பொழுதுபோக்கு, செய்தி, கலாச்சாரம் என பல தலைப்புகளின் கீழ வகைப்படுத்தி தருகிற‌து. அதோடு பயனாளிகள் ஒருவரை ஒருவர் பின்தொடரும் வசதியும் இருக்கிறது.
http://www.yahki.com/
http://storify.com/

மூளையை பாதிக்கும் விடயங்கள்



காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும்.இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.
அதிகளவாகச் சாப்பிடுவதனால் மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
புகை பிடிப்பதனால் மூளை சுருங்கவும், அல்ரஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. நிறைய இனிப்புச் சாப்பிடுவதனால் புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதனால் நமக்குத் தேவையான ஆக்சிஜனை பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்சிஜன் செல்லா விட்டால் மூளை பாதிப்படையும்.
நல்ல உறக்கம் இல்லாமையால் மூளைக்கு ஓய்வு இல்லாமல் போகின்றது. தேவையான அளவு தூங்காமலிருப்பது நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
தலையை மூடிக்கொண்டு நித்திரை செய்வதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறைக்கிறது.
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பிற்பாடு மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால் மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

பூமியைப் போன்ற குளிர்ச்சியான கிரகம் கண்டுபிடிப்பு



எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும் நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன் மேற்பகுதியானது பூமியின் கோடைகாலத்தைப் போன்று உள்ளது.இதன் பெயரானது WD 0806 – 661B ஆகும். இது ஒரு கோள் அல்ல, சிறிய நட்சத்திரம். இந்த நட்சத்திரம் 6 முதல் 9 தடவை பெரிய கோளான வியாழனை சுற்றி வருகிறது.
பென் நாட்டை சேர்ந்த வானியல் வல்லுநரான கெவின் லுக்மன் குறிப்பிடுகையில், இது சிறிய நட்சத்திரம், இதன் வெப்பநிலை பூமியைக் காட்டிலும் குளிர்ச்சியாக இருக்கும் என்றார்.
வானியல் வல்லுநர்கள் நாசா ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மூலம் இந்த குளிர் நட்சத்திரத்தை கண்டுபிடித்தனர். அகச்சிவப்பு கதிர்களால் செயல்படும் தொலைநோக்கி மூலம் இந்த நட்சத்திரத்தை பொருட்களின் மீது மின்னச் செய்யலாம்.
இந்த நட்சத்திரமானது பூமியையும், அதன் வட்டப்பாதையையும் கடக்க 63 பில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகிறது. ப்ரவுன் டுவார்ப் நட்சத்திரமானது மற்ற நட்சத்திரங்களைப் போன்றது.
அதனுள் மேகத்தூசுகளும், வாயுவும் உள்ளன. இந்த நட்சத்திரம் தன்னுள்ளே போதுமான அளவு மேகத் தூசுகளை வைத்து கொள்ள தவறினால், தெர்மோ நியூக்ளியார் வினை புரிந்து தீப்பற்றி எரிந்து விடும்.
இந்த நட்சத்திரத்தின் மேற்பகுதி வெப்பநிலை 27 முதல் 80 டிகிரி சென்டிகிரேடு ஆகும். இந்த வெப்பநிலை மனிதர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. 1995ல் வானியல் வல்லுநர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்நட்சத்திரத்தின் வெப்பநிலை பூமியைப் போன்று இருக்கும்.
இந்த நட்சத்திரம் மிகப்பெரிய வட்டப்பாதையை கொண்டது. அந்த வட்டப்பாறையானது பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தூரத்தைப் போன்று 2,500 ஆண்டுகள் கொண்டது.
முகப்பு

டிவிட்டரில் உங்களின் தன்மைகளை தெரிந்து கொள்வதற்கு



என்ன பேசுகிறோம் என்று தெரியாமாலேயே பேசுவது முட்டாள் தனம் என்றால், நாம் பேசுவது பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்று தெரியாமாலேயே இருப்பது அதைவிட மடத்தனம்.அதாவது நம்முடைய டிவிட்டர் பதிவுகள் பயனுள்ளதாகவோ சுவாரஸ்யமானதாகவோ இருக்கின்றனவா அல்லது அலுப்பூட்டிக்கூடியதாக அமைந்துள்ளனாவா என்பதை தெரிந்து கொள்ளாமல் இருந்தால் டிவிட்டரில் பெரிய அளவில் செல்வாக்கை பெறுவது சாத்தியமில்லை.
அதோடு ஏற்கனவே பெற்றுள்ள பின்தொடர்பாளர்களையும் இழக்க நேரலாம். கூட்டத்தில் பேசும் போது கைத்தட்டல்களை கொண்டு பேச்சின் வரவேற்பை புரிந்து கொள்ளலாம்.
ஆனால் தம் முன் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களை கவனிப்பதன் மூலமே பேச்சின் தாக்கம் அவர்களிடத்தே எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிவதை நல்ல பேச்சாளருக்கான இலக்கணமாக சொல்லலாம்.
சரி டிவிட்டரில் செயல்படும் போது அதற்கான வரவேற்பை கணிப்பது எப்படி? பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கை, மறுபதிவுகள் ஆகியவற்றை கொண்டு ஓரளவுக்கு டிவிட்டர் செல்வாக்கை ஊகிக்கலாம் என்றாலும் ஒருவரது டிவிட்டர் பதிவுகள் சுவாரஸ்யமாக அமைந்துள்ளனவா என்று எப்படி தெரிந்து கொள்வது?
இந்த கேள்வியும் மற்றவர்கள் நம்முடைய குறும்பதிவுகளை சலிப்பு தருவதாக நினைத்துவிடக்கூடாது என்ற கவலையும் உள்ள டிவிட்டராளர்களுக்கு உதவுவதற்காக என்றே அமெரிக்க ஆய்வாளர்கள் மூவர் ஒன்று சேர்ந்து ஒரு டிவிட்டர் பதிவுகள் குறித்து சக டிவிட்டராளர்களும் முன் பின் தெரியாதவர்களும் என்ன நினைக்கின்றனர் என்னும் அறிவதற்கான இணையதளத்தை அமைத்துள்ளனர்.
ஹூ கிவ்ஸ் ஏ டிவீட் என்னும் பெயரில் அமைந்துள்ள இந்த தளம் எப்போதாவது உங்கள் டிவிட்டர் பதிவுகள் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்று நினைத்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பி உங்கள் பின்தொடர்பாளர்கள் மற்றும் இண்டெர்நெட்டிடம் இருந்து கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கல் என்று அழைப்பு விடுக்கிறது.
மிக எளிதாகவும் அதைவிட முக்கியமாக சுவார்ஸ்யமாகவும் இதனை சாத்தியமாக்குகிறது இந்த தளம். டிவிட்டர் பதிவுகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகின்றன என்பதை அறிய விரும்பும் டிவிட்டர் பயனாளிகள் இந்த தளத்தில் பதிவு செய்து கொண்டவுடன் முதலில் தங்கள் பங்கிற்கு பின்தொடர்பாளர்களின் டிவிட்டர் பதிவுகள் பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.
அதன் பிறகு நண்பர்களும் அறிமுக இல்லாதவர்களும் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பார்கள். இதன் மூலம் டிவிட்டர் பதிவுகள் எப்படி பார்க்கப்படுகின்றன என தெரிந்து கொள்ளலாம். இந்த கருத்துக்கள் டிவிட்டர் கருத்துக்கு நேரடி செய்தியாக வந்து சேரும்.
உங்களைப்போலவே உங்கள் நண்பர்களும் இந்த தளத்திற்கு வருகை த‌ரும் போது அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்ப‌தையும் தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி

Sunday, October 23, 2011

உயிரையே அதிர வைக்கும் நடனம்(வீடியோ இணைப்பு)

பொதுவாக நடனத்தை நாம் ரசிப்போம் ஆனால் இந்த நடனத்தை பார்த்தால் நாம் மிகவும் அலற வேண்டியதாக இருகின்றது. இன்றைய இளைஞர் மத்தியில் உயிர் எனபது ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதில்லை என்பதற்கு இந்த காணொளியே ஒரு உதாரணம்.

ஒரு தனியார் தொலை காட்சியில் நடத்தப்பட்ட நடனப் போட்டியில் இந்தியாவின் பஞ்சாபை சேர்ந்த கலைஞர்கள் எப்படி தங்கள் உயிரையே பணயம் வைத்து நடுவர்கள் முதல் பார்ப்பவர் அனைவரயும் அலற வைக்கிறார்கள். தலை மீதும் உடம்பு மீதும் வாகனங்களை ஏற்றுவதும் சுத்தியல் கொண்டு தன்னுடைய மார்பில் அடித்துக் கொள்வதும் கண்ணாடியில் விழுவதும் முள் படுக்கையில் அடுக்கடுக்காக படுப்பதும் என்று பார்க்கவே ஏதோ ஒரு த்ரில்லர் படத்தை பார்த்து போல் இருகின்றது

Saturday, October 22, 2011

கணவன் வெளிநாடு சென்று 14 மாதங்களின் பின் குழந்தை பெற்ற பெண் கணவனால் விவாகரத்து

!


பிரான்ஸில் தற்போது வசிக்கும் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும் வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த வருடம் ஆவணி மாதம் இந்தியாவில் திருமணம் நடைபெற்றதாக தெரியவருகின்றது.

அதன் பின்னர் மணமகன் இருவாரங்கள் மணப்பெண்ணுடன் தங்கி நின்று பின்னர் பிரான்சிற்கு பயணமானார். இலங்கை திரும்பி தனது சகோதரியுடன் இருந்து வந்த மணப்பெண் கடந்த வாரம் ஆண் குழந்தையைப் பெற்றதாக தெரியவருகின்றது. இதனை அறிந்த கணவனின் சகோதரர் வெளிநாட்டில் உள்ள கணவனுக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து இரு வீட்டாருக்கும் இடையே கடும் சண்டை மூண்டுள்ளது.

தற்போது மணமகன் இந்தியா வந்துள்ளதாகவும் இருவரது திருமணத்தையும் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணப்பெண் பிரபல தொலைத் தொடர்பு வலையமைப்பின் ஊழியர் என்பபதும் குறிப்பிடத்தக்கது.

Friday, October 21, 2011

இரும்பு உடல் மனிதர்கள் இதைக்கொஞ்சம் பாருங்கோ! (வீடியோ இணைப்பு)





நீங்கள் இதுவரை எத்தனையோ விதமான சாதனையாளர்களை பார்த்திருப்பீர்கள். 

அனிமேசனுடன் கூடிய வாழ்த்து அட்டைகளை உருவாக்குவதற்கு



வாழ்த்து செய்தியை அனிமேசனுடன் கூடிய அழகான வாழ்த்து அட்டையாக ஓன்லைன் மூலம் நமக்கு தேவையான வடிவில் இருந்து எளிதாக உருவாக்கி அனுப்பலாம்.நாளுக்கு நாள் வாழ்த்துச் செய்திகளை புதுமையாக சொல்லும் தளம் வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இந்தத்தளம் மூலம் மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஓன்லைன் மூலம் எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம்.
இணையதளப் பெயரே Easy Hi என்று எளிதான முகவரியுடன் இருக்கிறது. இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் Get Started Now என்ற பொத்தானை சொடுக்கி வாழ்த்து அட்டை உருவாக்க ஆரம்பிக்கலாம்.
வாழ்த்து சொல்ல வசதியாக பல தரப்பட்ட அழகான படங்கள், அழகான எழுத்துருக்கள், கண்ணைக்கவரும் அனிமேசன் என அனைத்துமே சிறப்பாக இருக்கிறது.
விரும்பிய படங்களையும் அனிமேசனையும் சேர்த்து அழகான வாழ்த்து அட்டை நாமே உருவாக்கி விரும்பிய நபர்களுடன் அதை பகிர்ந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி

ஓன்லைனிலேயே இலவசமாக ஸ்கேன் செய்வதற்கு



எத்தனையோ ஆன்டி வைரஸ் மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும் ஒரு குறிப்பிட கால எல்லைக்குள் அதன் காலக்கெடு முடிந்து விடுகிறது.மீண்டும் ஒரு நல்ல ஆன்டி வைரஸ் மென்பொருள் கிடைக்காதா? என்று மீண்டும் தேடுவோம். சில சமயம் பணம் கொடுத்து வாங்கிய ஆன்டி வைரஸ் மென்பொருளை கூட ஏமாற்றிவிட்டு நம்முடைய கணணியில் புதிய வைரஸ்கள் வந்துவிடக்கூடிய அபாயம் கூட இருக்கிறது.
இந்த பிரச்னைகளை சரி செய்ய ஓன்லைனிலேயே நமது கணணியை ஸ்கேன்(Scan) செய்யலாம்.
சுட்டியை கிளிக் செய்து அங்கு சென்று ஸ்டார்ட் ஸ்கேன்(start scan)கொடுத்து உங்கள் கணணியில் வைரஸ் தாக்கம் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
இணையதள முகவரி

பல் சொத்தையால் குடல் புற்றுநோய் ஏற்படும்: ஆய்வில் தகவல்



பொதுவாக மனிதர்களை மார்பக மற்றும் நுரையீரல் புற்று நோய் தாக்கி வருகிறது. அதற்கு அடுத்த நிலையில் குடல் புற்று நோய் உள்ளது.இந்த குடல் புற்று நோய் எப்படி உருவாகிறது என கண்டறிய முடியவில்லை. எனவே ஆராய்ச்சி நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.
பல் சொத்தை மற்றும் தோலில் புண் போன்றவற்றை ஒரு வித பாக்டீரியாக்கள் ஏற்படுத்துகின்றன. அந்த கிருமிகளுக்கும், குடல் புற்று நோய்க்கும் சம்பந்தம் இருக்கலாம் என கண்டு பிடித்துள்ளனர். இந்த புற்று நோய் வருவதை முன் எச்சரிக்கையுடன் தடுக்க முடியும்.
உடல் எடை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளுதல், இறைச்சியை குறைந்த அளவு சாப்பிடுதல், நார்சத்து உணவை அதிக அளவு உட்கொள்ளுதல் போன்றவற்றால் குடல் புற்று நோய் வராமல் தடுக்கலாம். இந்த தகவலை இங்கிலாந்தை சேர்ந்த புற்று நோய் ஆராய்ச்சி நிபுணர் சாரா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

கண் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு



உடலில் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்புகளில் கண் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.அதிகம் வெயிலில் அலைவது, சரியான உணவு முறையைப் பின்பற்றாமல் இருப்பது, கண்பாதுகாப்பில் கவனக்குறைவு, இடைவிடாமல் தொலைக்காட்சி, கணணி பார்ப்பது, கிருமித் தொற்று ஆகிய காரணங்களால் பல கண் நோய்கள் ஏற்படுகிறது.
கண்களைப் பாதுகாப்பதில் இமைகளுக்கு பெரும் பங்கு உண்டு. கண் இமைகளில் அடிக்கடி தோன்றுவது கட்டிகள். இவை இமைப்பகுதியில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் அடைப்புகளின் காரணமாக உருவாகிறது.
திரவங்கள் தேங்கி, கிருமிகள் தாக்கி இப்பகுதியில் சீழ் பிடிக்கிறது. இமை முடிகள் முளைக்கும் இடங்களில் உள்ள ஜீஸ் கிளேண்ட் எனும் சுரப்பியில் ஏற்படுவது வெளிக்கட்டி ஆகும். இதுவே கண் இமையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மெய்போமியன் கிளாண்ட்ஸில் ஏற்பட்டால் அது உள்கட்டி எனப்படுகிறது. வெளிக்கட்டியில் அதிக வலி ஏற்படும்.
உள் கட்டியோ நாள்பட்ட கட்டியாக இருப்பதால் வலி குறைவாக இருக்கும். இதற்கு சிலர் சுயமாக வைத்தியம் செய்ய முயற்சிப்பது வழக்கம். கண்களைப் பொறுத்தவரை எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் கட்டி ஏற்பட்டால் களிம்பு, சொட்டு மருந்து, மாத்திரைகள் பயன்படுத்துவதன் மூலம் கட்டிக்கு தீர்வு காணலாம். வலி இருப்பின் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். சுடு தண்ணீரில் கர்சீப் அல்லது பஞ்சை நனைத்து கையின் தோல் உள்ள பகுதியில், உள்ளங்கைக்கு பின் பகுதியில் வைத்துப் பார்க்க வேண்டும்.
கை பொறுக்கும் சூட்டில் இந்த ஒத்தடத்தை காலை, மாலை இரண்டு வேளையும் 5 நிமிடத்துக்கு கண்களுக்கும் தரலாம். இது போல் கண்கட்டி அடிக்கடி ஏற்பட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சோதிக்க வேண்டியது அவசியம்.
கண்ணின் உள்புறத்தில் நாள்பட்ட கட்டி ஏற்படுதல் மற்றும் அடிக்கடி கட்டி வருதல் போன்ற பிரச்னைகள் இருப்பின் கட்டியை பயாப்சி சோதனை செய்து காரணத்தை கண்டறிய வேண்டும். சில சமயங்களில் அது புற்றுநோய்க் கட்டியாகவும் இருக்கவும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக சர்க்கரை வியாதி அதிகமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவும் இருப்பவர்களுக்கு கண் கட்டியாக துவங்கி முகத்திலும் பரவ வாய்ப்புள்ளது. இதன் அடுத்தகட்டமாக உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
கண் இமையில் தோன்றும் இன்னொரு பிரச்னை கண் இமை துடிப்பது ஆகும். வலது, இடது கண்ணில் ஏற்படும் துடிப்புக்கு ஏற்ப பலன் சொல்லும் ஆட்கள் இன்னும் உள்ளனர்.
எப்போதாவது இமை துடித்தால் பயப்படத் தேவையில்லை. சிலருக்கு டென்ஷன் அதிகமாக இருக்கும் போது கண்ணில் துடிப்பு ஏற்படும். இன்னும் சிலருக்கு காரணம் இன்றி எப்போது பார்த்தாலும் இமை துடித்துக் கொண்டே இருக்கும்.
மற்றவர்களைப் பார்த்து பேசவே சிரமப்படுவார்கள். இது போல் கண் இமை தொடர்ந்து துடிக்கும்போது மருத்துவ சிகிச்சை அவசியம்.
வயதான பின்னர் கீழ் இமைகளில் உள்ள கொழுப்பு சத்து குறைந்து இமை உள்புறமாகவோ, வெளிப்புறமாகவோ திரும்பிவிட வாய்ப்புள்ளது. இதனால் கண் உறுத்துதல் மற்றும் பூளை கட்டுதல் பிரச்னை இருக்கும்.
வெளிப்புறமாகத் திரும்பினால் கண்ணில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கும். இதற்கு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். கண் இமைகளில் வீக்கம் ஏற்படும் போது பார்ப்பதற்கே பயமாக இருக்கும்.
கண்களை மூடுவதில் சிரமம் ஏற்படும். கண்கட்டி, பூச்சிக்கடி, எறும்புக்கடி, கண்நீர்ப்பைக் கட்டி போன்ற காரணங்கள் மற்றும் சளி, சைனஸ் போன்ற உடல் நோய்கள், சிறுநீரகம், இதய நோய்களாலும், உடலில் ஏற்படும் ஒவ்வாமையின் காரணமாகவும் கண் இமைகளில் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கண் வலி, கண்மை அலர்ஜி, கண் சொட்டுமருந்து அலர்ஜி ஆகியவற்றாலும் இமையில் வீக்கம் ஏற்படும். கண் இமை ஓரங்களில் அரிப்பு ஏற்படுதல், இமை முடிகள் கொட்டிப் போதல், தூங்கும்போது பூளை கட்டுதல், இமை ஓரங்கள் தடித்து வீங்குதல் போன்ற பிரச்னைகள் கிருமித் தொற்றால் ஏற்படும்.
இமை முடிகளில் தலையில் உள்ள பொடுகு போல் ஒட்டிக் கொண்டு அரிப்பை ஏற்படுத்தும். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் தினமும் இரண்டு வேளை காலையில் குளிப்பதற்கு முன்பாகவும், இரவு தூங்குவதற்கு முன்பாகவும் இமைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். மருத்துவர் ஆலோசனைப்படி களிம்பு பயன்படுத்தி இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.

உலகிலேயே மிக பயங்கரமான பாதைகள்(படங்கள் இணைப்பு)

உலகில் உள்ள மிகவும் ஆபத்தும் மிகவும் பயங்கரமான பாதைகள் ஏனென்றால் இந்தப்பாதைகள் ஒவ்வொரு ஆண்டுகளும் 300பேருக்கு மேர்ப்பட்டவர்களைப் பலிவாங்குகின்றது.

Dades Gorge Road, Morocco




Passo dello Stelvio, Italy


Guoliang Tunnel, China




Yungas Road (Road of Death), Bolivia


Atlanterhavsveien (Atlantic Ocean Road), Norway




இந்தப்பாலமானது எதோ ஒன்று மனிதர்களை உள்ளெடுக்கின்றது. நீங்கள் இந்தப்படங்களைப் பார்த்தால் தெரியும் எப்படியான பாதைகள் என்று இங்கு போக்குவரத்துகள் மிகவும் கடினம் ஏனென்றால் இவை வளைவும் நெளிவுமாகக் காணப்படுவதால்.

இவர்கள் மனிதர்களா இல்லை குரங்குகளா? (வீடியோ இணைப்பு)

பாகம் 2 குரங்கினத்தில் இருந்துதான் மனிதன் உருவாகினான் என நம்பப்பட்டு வருகின்றது. அந்த நம்பிக்கையை வீண்போகாமல் காப்பாற்றும் முயற்சியில்தான் இந்த மனிதர்கள் இறங்கியுள்ளனர்.

அதாவது கட்டங்களுக்கு மேல் தாவித் திரிந்து தாங்கள் குரங்கில் இருந்துதான் வந்தோம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இருந்தாலும் இவ்வாறான சாகசங்களைப் போற்றாமலும் இருக்க முடியாது. ஏன் தெரியுமா? எங்களால் இதனைச் செய்ய முடியாதல்லவா…? முடியும் என நினைத்து முயற்சி செய்து மூக்கு உடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல…

உடலைக் கிழித்தும் உயிர்போகாத பெண்(வீடியோ இணைப்பு)

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கட்டிப்போடும் வித்தைகளில் ஒன்று தான் மாயாஜாலம். இல்லாததை இருப்பது போலவும் இருப்பதை இல்லாதது போலவும் மாற்றும் சக்தி உள்ள கலை இது.




அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த இளம் மாயாஜால வித்தைக்காரர் ஒருவர். பெண் ஒருவரின் உடலினை கிளித்துக் கொண்டு நடந்து செல்கின்றார். அவரை தொடர்ந்து இன்னும் இருவர் செல்கின்றனர். ஆனால் குறித்த பெண்னிற்கு எதுவுமே ஆகவில்லை. இது எப்படி சாத்தியம் என்று நினைக்காமல் இந்த காணொளியை காண்போம்.

Thursday, October 20, 2011

வரலாற்றில் கேணல் கடாபியின் சரித்திரம் � ஒரு பார்வை! (வீடியோ இணைப்பு)

இளம் வயதிலேயே பல வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் வகையில் தனக்கு இணையான தலைவர் எவரும் இருக்க முடியாது. எவ்வாறான வல்லரசுகள் வந்தாலும் அதற்கு இணையாக எனது நாட்டை வழி நடத்திச் செல்வேன் என்ற மன உறுதியுடன் நான்கு தசாப்த காலமாக லிபியாவை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சர்வாதிகாரி முவம்மர் கடாபி மட்டுமா? அவரது இராச்சியமும் இன்றுடன் வீழ்ந்தது. பயம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்வென்று தெரியாமல் பல நாடுகளை கதிகலங்க வைக்கும் வகையில் தனது நாட்டு மக்களை தன் பிடியில் வைத்து ஆட்சி நடத்தி வந்த கடாபியின் வரலாற்றை சற்று பின்நோக்குவோம்…

1942ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி பிறந்த முஅம்மர் கடாபி சிறு வயது முதல் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வந்துள்ளார். இளம் வயதிலேயே லிபிய இராணுவத்தில் வீரராக இருந்த இவர் 1965ஆம் ஆண்டு பெங்காசி இராணுவ பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார். 1966ஆம் ஆண்டு பிரிட்டன் ரோயல் மிலிட்டரி பயிற்சிக்குச் சென்றார்.

மீண்டும் படைக்குத் திரும்பிய அவர், தனக்கென ஆதரவாளர்களைத் திரட்டியதுடன் தனி இராச்சியம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற மன உறுதியை வளர்த்துக்கொண்டார். இச் சந்தர்ப்பத்தின்போதே லிபிய மன்னர் இத்ரீஸ் சிகிச்சை ஒன்றுக்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில் இரத்தம் சிந்தாத இராணுவப் புரட்சி மூலம் தனது 29 ஆவது வயதிலேயே ஆட்சியைக் கைப்பற்றினார்.


1969ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஆட்சியைக் கைப்பற்றி லிபிய அரபுக் குடியரசு என்று அறிவித்தார். 41 வருடங்களாக தொடர்ந்து ஆட்சியைத் தன் இரும்புப் பிடிக்குள் வைத்து ஆட்சி செய்துள்ளார். கடாபி முப்படைத் தளபதியாகவும், ஆளும் கவுன்சில் தலைவராகவும் ஆனார். 1970 ஆண்டு முதல் 1972 பிரதமராகவும், இராணுவ அமைச்சராகவும் இருந்தார். மன்னராட்சி முறையை ஒழிப்பதாகக் கூறியவர், தொடர்ந்து அதிபராக தானே நீடித்தார். ஏழைகளுக்கு அடிப்படை வாழ்க்கை வசதிகளை அளிப்பதாகக் கூறிய அவரது குடும்பம் கடந்த 41 ஆண்டுகளில் ஏராளமான சொத்துக்களை சேர்த்ததாகக்கூட குற்றச்சாட்டு எழுந்தது.

தன் உயிர் உள்ள வரை தனது உயிர் நாடியாக லிபியா இருக்க வேண்டும் என்பதே கடாபியின் கனவாக இருந்தது. ஆனால், இது முழுமையான அளவு நிறைவு பெறாமல் முற்றுப்புள்ளியை நோக்கிச் செல்லும் என்று கடாபி கொஞ்சம் கூட நினைத்திருக்க மாட்டார். ஆம், முஅம்மர் கடாபி…ஆட்சியை தன் கையில் எடுத்த ஆரம்பத்தில் அவருக்கு அதிகளவு ஆதரவு இருந்தது. ஆனால், நாள் செல்லச்செல்ல கடாபிக்கான மக்களின் ஆதரவு வலுவிழந்தது.

ஆபிரிக்காவின் வட எல்லையில் மத்திய தரைக்கடல் பகுதிக்கு அண்மையில் சூடானுக்கும் எகிப்துக்கும் இடையில் அமைந்திருப்பது தான் லிபியா. இவ்வாறான புரட்சி வெடிக்கும் நாடாகவே லிபியாவும் இருந்து வந்தது. இந்நாட்டின் அதிபதியாக, தலைவனாக மக்களை தன் வசம் வைத்திருந்தவர் தான் முஅம்மர் கடாபி… அரபு தேசியம் என்றும், இஸ்லாமிய சோசலிசம் என்றும், மக்களின் நேரடிக் குடியரசு என்றும், பலவிதமாக தன் அரசை சித்திரித்துக் கொண்டிருக்கிறார். நவீன குடியரசு என்று சொல்லிக்கொண்டே 41 ஆண்டுகளாக சர்வாதிகாரம் செய்துகொண்டிருந்தவர் தான் கடாபி. இவருக்கு இரண்டு மனைவிகளும் எட்டுப் பிள்ளைகளும் (7 ஆண் பிள்ளைகள், 1 பெண்) உள்ளனர்.

மூத்த மகன் முஹம்மது அல் கடாபி � இவர் லிபியா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருந்து வந்தவராவார். இரண்டாவது மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி � இவர் அரசாங்கத் தரப்பில் ஒரு பெரிய தர்ம ஸ்தாபனத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது மகன் சாதி கடாபி � தேசிய உதைபந்தாட்டக் கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார். நான்காவது மகன் முடாசிம் கடாபி � லிபிய இராணுவத்தில் உயர்ந்த பதவியை வகிக்கிறார்.

நாட்டின் மிக உயர்ந்த பதவியான � தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி இவருடையதாகவே இருந்து வந்துள்ளது. ஐந்தாவது மகன் ஹன்னிபால் கடாபி � நாட்டின் எண்ணெய் வளம் முழுவதையும் மேற்கொண்டிருக்கும் நிறுவனத்தை நிர்வகித்து வந்துள்ளார். ஆறாவது மகனான சைப் அலி கடாபியும், ஏழாவது மகனான காமிஸ் கடாபியும் நாட்டின் பொலிஸ் நிர்வாத்தைக் கவனிக்கிறார்கள். அவரது ஒரே மகளான � ஆயிஸா அல் கடாபி ஒரு சட்டத்தரணியாவார். நாட்டின் நீதி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிப்பவராவார்.

கடாபி புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். அதை எழுதியது தான் என்றும் சொல்கிறார் ! தனக்கென சொந்தப் பாதுகாப்பு படையைக் கொண்டு சர்வ வல்லமை மிக்கவராகவும் விளங்கிய கடாபி 40 உறுப்பினர்களைக் கொண்ட முற்றிலும் திருமணமாகாத இளம்பெண்களைக் கொண்ட படையொன்றை அமைத்து வைத்திருந்தார். லிபியாவின் எண்ணெய் வளம்தான் கடாபியின் பலமும், பலவீனமுமாக இருந்து வந்தது.

கடாபியின் அராஜக ஆட்சியில் அதிருப்தி அடைந்த இளைஞர்கள் தலைமையில் புரட்சிப் படை அமைந்தது. கடந்த பெப்ரவரி மாதம் கடாபிக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியது. அதனை ஒடுக்குவதற்கு இராணுவத்தை ஏவினார் கடாபி. இரு தரப்புக்கும் பயங்கர மோதல் நீடித்தது. புரட்சிப் படைக்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தலையிட்டு கடாபியை பதவி விலக வலியுறுத்தினர். மறுத்த அவர், கடைசி லிபியா இருக்கும் வரை அந்நியப் படைகளையும், எதிரிகளையும் எதிர்த்துப் போராடுவேன் என்றார்.

இதையடுத்து, ஐ.நா. அனுமதி பெற்று புரட்சிப் படைக்கு ஆதரவாக நேட்டோ படைகளும் கடாபி ஆதரவு இராணுவம் மீது தாக்குதல் நடத்தின. இந்நிலையில், கடந்த 9 மாதங்களாக நீடித்த சண்டையில் தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றினர். கடும் தாக்குதலுக்கு மத்தியில் மேற்படி நகரம் கைப்பற்றப்பட்டதுடன் கடாபி தலைமறைவானார். இதையடுத்து, கடாபியின் மாளிகையை புரட்சிப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொடி நாட்டினர். இந்த வெற்றியை லிபியா முழுவதும் கொண்டாடினார்கள்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உடன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘லிபியா சர்வாதிகாரியின் பிடியில் இருந்து விடுபட்டு விட்டது” என்று அந்த அறிக்கையில் அறிவித்தார். லிபியாவின் எதிர்காலம் இனி அந்த நாட்டின் மக்கள் கைகளில் இருக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னரே தொடர் போராட்டம் இடம்பெற்று வந்த நிலையில் இன்று சிர்தே நகரை அந்நாட்டு இடைக்கால அரச படையினர் கைப்பற்றியதையடுத்து கடாபி கைது செய்யப்பட்டு, காயம் காரணமாக அவர் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்படடுள்ளது.

Sunday, October 16, 2011

வாருங்கள் கூகிளுடன் கொஞ்சம் விளையாடாலம் !!




இணையத்தில் பல வகையான தகவல்கள் இருக்கிறது ஆனால் அவற்றை நாம் ஒவ்வொன்றாக தேடி தேடித் தான் படிக்கவேண்டும். இதற்க்கு தான் நமக்கு தேடுபொறிகள் பயன்படுகிறது.

தேடுபொறி என்ற உடனே நமக்கு ஞாபகம் வருவது கூகிள் தான். கூகுளின் தேடுபொறி பற்றி நான் சொல்லி தெரிவதில்லை இணையத்தை யார் பயன்படுத்தினாலும் ஒரு தடவையாவது கூகிள்க்கு சென்று விடுவார்கள் அந்த அளவுக்கு இல்லோரும் அதனை விரும்புகின்றனர் மற்றும் பயன்படுத்துகின்றனர். இந்த கூகிள் பற்றி நிறைய விஷயங்கள் புதிதாக பலரும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.





சரி கூகிளுடன் எப்படி விளையாடுவது அதை பற்றி பார்ப்போம்
  • கூகுளை முதலில் திறந்து அதில் GOOGLE GRAVITY என தட்டாசு செய்யுங்கள் .
  • பின்னர் அதன் கீழே உள்ள I'M FEELING LUCKY பொத்தானை அழுத்துங்கள்.
  • ஒரு தளத்திற்கு செல்லும் அங்கே பாருங்கள் கூகிள் தேடுபொறி எப்படி இருக்கிறது என்று.
  • சிறந்த விஷயம் என்னவென்றால் நாம் இதிலும் குறிச்சொல்லை கொடுத்து தேடலாம் .
  • அதுமட்டுமல்ல நீங்கள் உங்கள் சுட்டியை பயன்படுத்தி அதில் உள்ள சொற்கள் மட்டும் பெட்டிகளை இழுத்து விளையாடலாம்.
இந்த தளத்திற்க்கு செல்ல : இங்கே சொடுக்கவும்

10,14 வயது சிறுவர்களுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 23 வயது இளைஞன் !!




10 மற்றும் 14 வய
து ஆண் சிறுவர்களை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு ஆபாச வீடியோ காட்சிகளை ஔிபரப்பிக் காட்டி அவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த இளைஞன் ஒருவர் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கிரவுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாகல - போபிட்டிய பகுதி வீடொன்றில் வைத்து 10 மற்றும் 14 வயது சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவர்களை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற 23 வயதுடைய இளைஞன் 

அவர்களுக்கு ஆபாச வீடியோக்களை ஒளிபரப்பிக் காட்டி இக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.

இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக கிரியெல்ல

பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டு குறித்த சந்தேகநபரான 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார்.பின்னர் சந்தேகநபர் குளியாபிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கிரியுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

15 வயது சிறுமி அண்ணனால் கர்ப்பம்! சந்தேக நபர் விளக்க மறியலில்!!




களுவாஞ்சிக்குடிப் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிவுக்குட்பட்ட எருவில் பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் எருவில் பிரதேசத்தை சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் அவரது அக்காவின் வீட்டில் இருந்தவேளையில் திடீர் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், அந்தப் பெண் கர்ப்பம் தரித்துள்ளது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு வைத்தியசாலையினரால் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சம்பவம் தொடர்பில் சிறுமிக்கு அண்ணா உறவான ஒருவரை கைது செய்தனர்.

குறித்த நபர் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் வினோபா இந்திரன் முன்னிலையில் ஆஜர்செய்தபோது குறித்த நபரை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தர விட்டார்.

சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

யாழ்.பல்கலையின் மாணவ ஒன்றியத்தலைவர் மீது தாக்குதல்! (படங்கள் இணைப்பு)




யாழ் திருநெல்வேலிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த யாழ் பல்கலைக்களகத்தின் மாணவ ஒன்றியத்தலைவர் மீது இனம்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம்பற்றித்தெரியவருவதாவது

யாழ்ப்பாணத்தில் யாழ் பல்கலையின் மாணவ ஒன்றியத் தலைவர் தவபாலன் (வயது 25) தனது வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்த போது திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அண்மித்த பகுதியில் வைத்து மதியம் 1 மணியளவில் இனம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பலின் தாக்குதலுக்குள்ளானார். இதை சினிமாப்பாணியில் நடைபெற்ற தாக்குதல் என்று சொல்லலாம்.

மக்கள் பலரும் பார்த்தக் கொண்டிருக்க மாணவ ஒன்றியத் தலைவரை மோட்டார் சைக்கிளில் விரட்டி விரட்டி கடுமையாக தாக்கினார். தாக்குதலுக்குள்ளா தவபாலன் தனது உயிர்ப்பாதுகாப்பிற்காக மோட்டார் சைக்கிளையும் விட்டு ஒடித்தப்பி விட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


யாழ்.பல்கலையின் மாணவ ஒன்றியத்தலைவர் மீது தாக்குதல்

பேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபருக்கு 50 ஆண்டு சிறை.





தென் ஆபிரிக்காவை சேர்ந்தவரான 22 வயதுடைய தாபோ பெஸ்டர் பேஸ்புக் இணையதளத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டான்.

பேஸ்புக் இணையத்தளத்தில் தனது பெயர் தாபோ பெல்டர் என்றும் அழகிய இளம் பெண்களுக்கு மொடலிங் வேலை தருவதாக கூறியிருந்தான்.

அதை நம்பி பல பெண்கள் அவனை சந்திக்க ஹோட்டல்கள் மற்றும் தனி இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியிருந்தான்.

மேலும், பெண்களை அடித்து உதைத்து சித்ரவதை செய்ததுடன் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் உடைமைகளை கொள்ளையடித்து சென்றுள்ளான்.

இது குறித்த குற்றச்சாட்டின் பிரகாரம் கைது செய்யப்பட்ட இந்த நபர் மீது டர்லன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட தாபோ பெல்டருக்கு 50 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

அதில் இவன் சமுதாயத்தில் ஒரு ஆபத்தானவன் என தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஆண்டுக்கு 56 ஆயிரம் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்.

எனவே அதை தடுக்க அங்கு இதுபோன்று கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது

Friday, October 14, 2011

பேஸ்புக் / டிவிட்டர் / மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமா??

நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ?? அப்படியாயின் இது உங்களுக்கானது தான் வாங்க தொடர்ந்து படிக்கலாம் ...

பொதுவாக சமூக வலைதளங்களில் செய்திகள் / வீடியோ போட்ரவற்றை பகிரும் போது சில இணையத்தளங்களின் முகவரி மிக நீண்டதாக இருப்பின் அதனை சில இணையத் தளம் மூலம் சுருக்கி பதிவர்.   

உதராணமாக http://newyarl.com/index.php  என்ற முகவரியை சுருக்கி http://adf.ly/39wNh அமைத்துள்ளேன் . முகவரி சிறிதாக சுருக்கப் பட்டு இருந்தாலும் அதனை சொடுக்கும் போது தானாக
http://newyarl.com/index.ph  முகவரிக்கே வந்து விடும் .

இப்போது நாம் இது போன்ற சுருக்கி வெளியிடும் முகவரிகளுக்கு பணம் குடுக்க ஆரம்பித்து விட்டன குறிப்பிட்ட இணையதளங்கள் . ஆம் நாம் விருப்பபட்டால் நாம் சுருக்கி வெளியிடும் முகவரிகள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் . அதற்கு பதிலாக 5 வினாடிகள் ஓர் விளம்பரத்தை நாம் பார்வையிட வேண்டும் .

உதாரணமாக http://newyarl.com/fullview.php?id=NTI1Mg==l என்ற இந்த முகவரியை http://adf.ly/39wNh இவ்வாறு சுருக்கி உள்ளேன் இதனை கிளிக் செய்தால் முதல் 5 வினாடிகள் வேறொரு தளத்தின் பக்கம் தோன்றும் , 5 வினாடிகள் முடிந்த பின்பு மேலே வலது பக்க ஓரத்தில் உள்ள skip ad என்னும் option ஐ அழுத்தி விட்டால் போதும் நாம் பார்க்க வேண்டிய உண்மையான தளத்திற்குச் செல்லும் .

http://adf.ly/39wNh இந்த முகவரியை அழுத்தி சோதித்துப் பார்க்கவும்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் மாதம் வெளியீடு!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் பாடசாலை விடுமுறைக்கு முன்னதாக வெளியிடவுள்ளன.

கடந்த 2001ஆம் ஆண்டின் பின்னர் இம்முறை புதிய மற்றும் பழைய பாடவிதானங்களின் அடிப்படையில் பரீட்சை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்களுக்குரிய விடைத்தாள் மதிப்பீடுகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் தோற்றியிருந்த பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

23இஞ்ச் மானிட்டருடன் புதிய சாம்சங் கம்ப்யூட்டர்

Samsung 23inch
மின்னனு தயாரிப்பில் எப்போதுமே சாம்சங் நிறுவனம் உச்சத்தில் இருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்களை திறமையாக திருப்திபடுத்தும் சக்தியை சாம்சங் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் அவற்றின் தரமான படைப்புகளும் அதன் நியாயமான விலையும் ஆகும்.

குறிப்பாக தற்போது சாம்சங் புதிதாக சீரிஸ் 1 ஆல் இன் ஒன் என்ற பெயரில் புதிய கம்ப்யூட்டரை மார்க்கெட்டிற்கு கொண்டு வருகிறது. முதலில் அமெரிக்காவில் இதனை அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளது. பின்னர் மற்ற நாடுகளிலும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். சீரிஸ் 1 ஆல் இன் ஒன் பிசி சாம்சங்கின் இணையற்ற படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

சீரிஸ் 1 ஆல் இன் ஒன் பிசியின் டிசைனைப் பார்த்தால் அது அலுமினிய பேனலைக் கொண்டிருக்கிறது. இதன் கருப்பு திரை பார்ப்பதற்கு மிக பக்காவாக இருக்கிறது. இதன் 23 இன்ச் டிஸ்ப்ளே மிகவும் மெல்லியதாகும். இதன் ரிசலூசன் 1920X1080 ஆகும். மேலும் இது எல்எடி பேக்லிட் வசதியும் கொண்டிருக்கிறுது. மேலும் இதன் திரை தொடு வசதியும் கொண்டது.

சீரிஸ் 1 ஆல் இன் ஒன் பிசி இண்டல் கோர் ஐ5 ப்ராசஸர் கொண்டிருப்பதால் இதன் செயல் திரன் மிக பக்காவாக இருக்கும். மேலும் இது 8ஜபி ரேம் கொண்டிருப்பதால் இதன் வேகமும் சீராக இருக்கும். இதன் ஓஎஸ் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் ஆகும். மேலும் ப்ளூடூத் மற்றும் வைபை வசதியும் இதில் சிறப்பாக உள்ளது.

சீரிஸ் 1 ஆல் இன் ஒன் பிசி ஆப்டிக்கல் ட்ரைவ் மற்றும் 1டிடிபி ஹார்ட் ட்ரைவும் கொண்டுள்ளது. இது 4 வாட்ஸ் கொண்ட 2 ஹர்மான் ஸ்பீக்கர்களைக் கொண்டிருப்பதால் இதில் இசை கேட்பதும் ஒரு புதிய அனுபவத்தைத் தரும். மேலும் இது யுஎஸ்பி 2.0 மற்றும் யுஎஸ்பி 3.0 போர்ட்டுகளையும் கொண்டுள்ளன.

அதுபோல் இதன் 1.3 மெகா பிக்சல் கேமரா தரமான படங்களையும் வழங்குகிறது. இந்த புதிய படைப்புக்கு 1 வருட உத்திரவாதமும் வழங்கப்படுகிறது. மேலும் இதில் சேண்டி பிரிட்ஜ் பவர் தொழில் நுட்பமும் உள்ளது.

சீரிஸ் 1 ஆல் இன் ஒன் பிசியின் விலையைப் பார்த்தால் ரூ.40,000ஆகும். ஆனால் இதன் டாப் என்ட் மாடல் ரூ.49,000க்கு விற்கப்படும். இந்த புதிய டிவைஸ் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதிக்கு பின் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Wednesday, October 12, 2011

பெற்றெடுத்த 5 நாள் குழந்தையை வீதியில் வீசிச் சென்ற கல்நெஞ்சத் தாய்!!



பிறந்து 5 நாட்களேயான பிஞ்சுக் குழந்தை ஒன்று அநாதையாக வீதியில் போடப்பட்டு சென்றிருந்த நிலையில் அக்குழந்தையை பேருவளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பேருவளை - வதகாஹவெல காலி வீதி இலக்கம் 242/03. என்ற முகவரியுடைய வீட்டின் முன்புறத்தில் இக்குழந்தை கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

நேற்றிரவு 8 மணியளவில் இக்குழந்தையை மீட்ட பொலிஸார் அதனை பெண் குழந்தை என அடையாளம் கண்டதோடு சிகிச்சைகளுக்கென நாகொட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குழந்தையை வீதியில் அநாதையாக விட்டுச் சென்ற கல்நெஞ்சத் தாய் உள்ளிட்ட பெற்றோர் யார் என பேருவளை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அதிபரால் தாக்கப்பட்ட ஆசிரியை மயக்கம்! யாழ்ப்பாணப் பாடசாலையில் சம்பவம்!!



நாவலர் பாடசாலை அதிபர் ஒருவரால் தாக்கப்பட்ட ஆசிரியை ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 04ம் திகதி இச்சம்பவம் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. தாக்கப்பட்ட ஆசிரியை இசை ஆசிரியையாவார்.சம்பவ தினத்தன்று இரண்டு ஆசிரியர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போதே மேற்படி ஆசிரியை மீது அதிபரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு ஆசிரியர்களுக்கிடையில் வாய்தர்க்கம் இடம்பெற்ற போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த பாடசாலையின் அதிபர் மேற்குறித்த ஆசிரியையின் செவிப்பறையின் பக்கமாக ஒரு கன்னத்தில் பலமாக  தாக்கியுள்ளார்.

இதன் போது அதிபரின் தாக்குதலால் ஆசிரியை நிலை குலைந்து நிலத்தில் விழுந்தாக  தெரியவருகின்றது. இதனைத் தொடர்ந்து அதிபரின் மிரட்டில் காரணமாக ஆசிரியர் இவ்விடயத்தை பெரிதுபடுத்தாது விட்டுவிட்டார்.

ஆயினும் பின்னர் காதுப்பகுதியில் ஏற்ப்பட்ட வலி காரணமாக ஆசியர் கடந்த 07ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

சிகிச்சைக்காக சென்ற ஆசிரியையை உடனடியாக வைத்தியசாலையில் மேலதிக பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்காக வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதன் படிநேற்று முன்தினம் மதியம் வரையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் குறித்த ஆசிரியை தங்கியிருந்து சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

ஆயினும் நேற்று மதியம் சிகிச்சைகளின் பின்னர் ஆசிரியை தனது வீட்டிற்கு அனுப்பி வைப்பட்டுள்ளார். அத்தோடு இதற்கு முதலும் ஒரு முறை அதிபர் மேற்படி ஆசிரியரை கல்லால் தாக்கியதாக தெரியவருகின்றது.

அத்தோடு மேற்படி ஆசிரியை வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவனின் நெருங்கிய உறவினராவார் என்பதும் குறிப்பிடத்தக்து.

Sunday, October 9, 2011

யாழ்ப்பாண புகையிரத நிலைத்துக்குள் இருளில் அரங்கேறும் விபச்சாரம்!! (படங்கள் இணைப்பு)




ஆர்ப்பரிப்புகள் எதுவுமின்றி அமைதியாய் காட்சியளிக்கிறது யாழ்ப்பாண புகையிரத நிலையம். பாழடைந்துபோய் பல வருடங்களைக் கடந்தும் திருத்தப்படாமல் கவனிப்பரற்ற நிலையில் காணப்படுகிறது.

தண்ணீர் நிறைந்த நிலகீழ் பாதை, புதர்கள் நிறைந்த தண்டவாளங்களைக் கூட யாரும் கண்டுகொள்வதில்லை. உடைந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடத்தின் ஒரு சில பகுதிகளை மரத்தின் வேர்கள் தாங்கிக்கொண்டிருக்கின்றன.

அந்த வேர் வழியாக வழிந்து சொட்டு சொட்டாய் கொட்டிக்கொண்டிருக்கும் தண்ணீர்த் துளிகளைத் தவிர வேறெந்த சத்தமும் அங்கில்லை.

மாலையும் இரவும் சந்தித்துக்கொண்ட பொழுதில் மணி ஆறைத் தாண்டிக்கொண்டிருந்தது. மூளை வளர்ச்சி குன்றிய பிச்சைக்காரர் ஒருவர் மாத்திரமே எப்போதும் அங்கு நடமாடிக்கொண்டிருப்பார். அவரையும் காணவில்லை.

யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைந்து தண்டவாளங்களையும் தாண்டி ஒதுக்குப் புறமாக புதரொன்றுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டோம்.

யாழ்ப்பாண புகையிரத நிலைத்துக்குள் இருளில்  அரங்கேறும் விபச்சாரம்

பாம்பு இருக்கும். கவனம் என எப்போதோ, யாரோ சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. எல்லை மீறிய பயத்திலும் அங்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அறியும் ஆவல் மேலிட்டுக்கொண்டிருந்தது.

சலசலப்புச் சத்தம் கேட்கிறது. ச்சீ…ச்சீ…. என 15 வயது மதிக்கத்தக்க சிறுவனின் குரல். புதர்களுக்குள் மறைந்துகொண்டிருந்தவன் தலை மட்டும் வெளியில் காட்டி மீண்டும் ச்சீ….ச்சீ என்று கல்லெறிந்தான்.

ஆம்..! தூரத்தே நாய் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்தச் சிறுவனுக்கு இங்கே என்ன வேலை ? எதற்காக இந்த நேரத்தில் இங்கிருக்க வேண்டும் ? மனதில் அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

                                         இருளில் எடுக்கப்பட்ட புகைப்படம்

யாழ்ப்பாண புகையிரத நிலைத்துக்குள் இருளில்  அரங்கேறும் விபச்சாரம்

                                       இந்த புகைப்படம் Photoshop ஒளியூட்டப்பட்டது.

யாழ்ப்பாண புகையிரத நிலைத்துக்குள் இருளில்  அரங்கேறும் விபச்சாரம்


கொஞ்ச நேரம் மௌனமாகக் கழிகிறது. வெள்ளை வான் ஒன்று வேகத்தைக் குறைத்து புகையிரத நிலைய வாசலுக்கு அருகில் நிற்கிறது. அவசர அவசரமாக ஒருவர் இறங்கி வருகிறார். சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர். அவர் வருவதைக் கண்ட சிறுவன் எழுந்து முன்னோக்கி நடக்கத் தொடங்கினான்.

‘எங்கேயடா அவள்?’

‘எவ்வளவு நேரம் அண்ணை?’

‘கொஞ்சம் லேட்டாப்போட்டதடா. எல்லாம் யுகே பார்ட்டிகள். சுமாளிச்சு வந்தன்’

‘அப்படியே இடப்பக்கமாக நடவுங்கோ. நான் கிளம்புறன்’

சிறுவனின் கையில் கொடுத்தது பணமாகத்தான் இருக்கும் என ஊகித்துக்கொண்டோம். ஏதோ வாங்கிக்கொண்ட சிறுவன் சினிமாப் பாடலொன்றை முனுமுணுத்தவண்ணம் சிட்டாய் பறந்து மறைந்தான். சிறுவன் காட்டிய பக்கம் வேகமான நடையுடன் விரைகிறார் அந்த நபர்.

நாம் மறைந்திருந்த இடத்தை விட அதிக தூரம் நடந்து சென்றுவிட்டார். அங்கு ஓர் இளம்பெண் நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
                                            இருளில் எடுக்கப்பட்ட புகைப்படம்

யாழ்ப்பாண புகையிரத நிலைத்துக்குள் இருளில்  அரங்கேறும் விபச்சாரம்

                                      இந்த புகைப்படம் Photoshop ஒளியூட்டப்பட்டது.
யாழ்ப்பாண புகையிரத நிலைத்துக்குள் இருளில்  அரங்கேறும் விபச்சாரம்

இரவு வேளையாதலால் சரியாக முகத்தைக் கண்டுகொள்ள முடியவில்லை. ஆயினும் அங்கு ஏதோ நடக்கப்போகிறது என்பது மட்டும் தெரிந்தது. சுமார் 45 நிமிட நேரம் அவர்கள் தங்களை மறந்திருந்ததை நாம் அவதானித்தோம்.

இவ்வாறு தினமும் நடக்கிறதா அல்லது ஒரு சில நாட்களில் மாத்திரம் நடக்கிறதா என்பதை சரியாகக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

எப்படியாவது முழுமையான தகவல்களைத் திரட்டி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. அதற்காகப் பொறுமையாய் அமர்ந்திருந்தோம்.

அவர்களுடைய வேலை முடிவடைந்ததும் இருவருமாக நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணைப் பார்க்கும்போது சுமார் 23 வயது மதிப்பிடலாம்.

தமிழில் பேசிக்கொண்டு வந்தார்கள். அந்த நபரின் ஆதிக்கமே பேச்சில் அதிகமாகக் காணப்பட்டது. லண்டன் கதைகளைப் பற்றியும் அங்குள்ள அனுபவங்களையும் பேசிக்கொண்டு வந்துகொண்டிருந்தார்.

‘எனக்கு நிறைய பணம் இருக்கிறது. அனுபவிக்க வேணும் எண்டுதான் ஸ்ரீலங்காவுக்கு வந்தேன்’ எமது காதுகளில் அழுத்தமாய் விழுந்த வசனங்கள் இவை.

வெளிநாடுகளிலிருந்து வரும் இளைஞர்கள் பலர் நல்ல காரியங்களுக்காக தமது நேரத்தை செலவு செய்கிறார்கள். ஆனால் ஒருசிலர் செய்யும் தவறுகளால் சமூதாயம் இழிநிலைக்கு இட்டுச் செல்லப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து வரும் இளைஞர்கள் சிலர் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோ. பற்குணராசா ஏற்றுக்கொள்கிறார்.

நல்லூர்க் கந்தன் தேர்த்திருவிழா நேரத்தில் தமிழ் இளைஞர்கள் கொழும்பிலிருந்து இளம் யுவதிகளை அழைத்து வந்து யாழில் விடுதிகளில் தங்கியிருந்து சல்லாபம் புரிந்ததை அவர் உறுதிப்படுத்துகிறார்.

எது எவ்வாறாயினும் சமுதாயத்தின் எதிர்காலம் கருதி நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

இருளுக்குள் அரங்கேறிக்கொண்டிருக்கும் இவ்வாறான குற்றச்செயல்கள் குறித்து அறிந்து ஏற்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் அனைவரும் முன்வருவோம்.

தினசரி 13 முறை செக்ஸ் பற்றி நினைக்கும் ஆண்கள்!


13 முறை செக்ஸ் குறித்து நினைப்பதாக ஒரு சர்வே செய்து தெரிவித்துள்ளனர்.

ஒன்போல்.காம் என்ற இணையதளம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. 3000 ஆண்களிடம் கருத்துக் கேட்டு இந்த முடிவை அது அறிவித்துள்ளது.

பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து முறை செக்ஸ் குறித்து நினைக்கிறார்களாம். ஆனால் ஆண்களோ 13 முறை நினைக்கிறார்களாம்.

நினைப்பில்தான் ஆண்கள் படு வேகம். செயல்பாட்டில் மந்தம்தானாம். வாரத்திற்கு 2 முறை அல்லது வருடத்திற்கு 104 முறைதான் தாங்கள் நினைப்பதை செயலில் காட்டுகிறார்களாம் ஆண்கள்.

செக்ஸில் ஈடுபடுவதை விட அதுகுறித்து நினைப்பதில்தான் ஆண்கள் அதிக நாட்டம் காட்டுவதாகவும் அந்த சர்வே கூறுகிறது.

ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு தாங்கள் எதிர்பார்த்த செக்ஸ் உறவு பூரணமாக கிடைப்பதாக திருப்தி தெரிவித்துள்ளனர்.

யாகூ இணையதளத்தை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட்



யாகூ இணையதள நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.கடந்த 2008ம் ஆண்டே யாகூ நிறுவனத்தை வாங்க மைக்ரோசாப்ட் முயற்சி செய்தது. ஆனால் அப்போது மைக்ரோசாட் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
இந்நிலையில் யாகூவை வாங்குவதற்கான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அதனால் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் யாகூவின் மதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதால் சில நிர்வாகிகள் நிறுவனத்தை விற்பதே சிறந்தது என்று நினைப்பதாகவும் கூறப்படுகிறது.

குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படும்: ஆய்வில் தகவல்



குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே குறை பிரசவத்தில்(ப்ரி மெச்சூர்) பிறக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்த பாதிப்பு அதிகம் உள்ளது என்று பச்சிளம் குழந்தைகள் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.வாஷிங்டன் பல்கலைக்கழக பச்சிளம் குழந்தைகள் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு முடிவுகள் விவரம்: பிரசவ காலத்துக்கு முன்னரே குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்த பாதிப்பு மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும் போது மிக அதிகமாக உள்ளது.
இத்தகைய குழந்தைகள் பிறந்தவுடன் தனி கவனம் செலுத்தப்பட்டு இன்குபேட்டர் உள்ளிட்ட சாதனங்களின் உதவியுடன் பேணப்படுகிறது. இது “நியோ நேட்டல் இன்டன்சிவ் கேர்”(என்ஐசியு) எனப்படுகிறது.
குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும் போது குறைவாகவே இருக்கிறது. இதனால் அவர்களுக்கு மன அழுத்த பாதிப்பு அதிகமாகிறது.
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் உடலின் வெப்பநிலை குறைதல் அல்லது மாறுபடுதல், ரத்த சர்க்கரை அளவில் அடிக்கடி மாற்றம், தொற்று நோய் பாதிப்பு, உடலில் ஆக்ஸிஜன் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளும் இருக்கின்றன.
போதிய ஆக்ஸிஜன் மூளைக்கு கிடைக்காவிட்டால் அதன் திசுக்கள் மற்றும் புதிய செல் வளர்ச்சி பாதிக்கப்படும். இது மூளையின் ஒட்டுமொத்த செயல்பாட்டை பாதிக்கும். இதுவே மன அழுத்த பாதிப்புக்கு காரணமாகிறது.
கர்ப்ப காலத்தில் உரிய மருத்துவ அறிவுரை மற்றும் சிகிச்சையால் கர்ப்பிணிகள் குறை பிரசவத்தை தவிர்க்க முடியும். குழந்தைகளின் எதிர்கால நலனை முன்னிட்டு இத்தகைய நடவடிக்கைகளில் கர்ப்பிணிகள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

ஆசிரியர்களுக்கு உதவும் இணையதளம்



இணையதளங்கள் மூலமாக பல்வேறுபட்ட பணிகளை இன்று சுலபமாக செய்யலாம். அத்தனை வசதிகளையும் இன்று இணையங்கள் தருகின்றன.NYABAG: உங்களின் பணி, திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளை பதிந்து கொள்ளவும், உங்களின் நாளந்த தனிப்பட்ட செயல்பாடுகளை குறித்து கொள்ளவும் இந்த தளம் உதவுகிறது.
இந்த தளத்தில் நீங்கள் திட்டமிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள குறித்த காலத்தில் இந்த தளம் உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ நினைவுபடுத்தும். அத்துடன் இந்த தளத்தில் மிக இலகுவாக கையாளலாம்.
http://www.nyabag.com/
ENGRADE: இந்த தளம் முற்றிலும் ஆசிரியர்களுக்கு தங்கள் பணியினை சுலபமாக்க வடிவமைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் மாணவர்களை வகுப்பு வாரியாக பதிவு செய்து அவர்கள் தொடர்பான மதிப்பீடுகளையும் தரத்தினையும் பேண முடியும்.
இந்த தளத்தில் மாணவர்கள் வரவு, மாணவர்களின் விபரங்கள் அவர்களின் முன்னேற்ற அறிக்கைகளை பேண முடியும். இதில் உங்களுக்கென தனியான பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.
http://www.engrade.com/

அதிசய இரட்டையர்கள்(படங்கள் இணைப்பு)

கேய்டனும் லேய்ரனும் மக்களால் வியந்து பார்க்கப்படுபவர்களாக ஆகிவிட்டனர். ஒரேமாதிரியான உடைகளை அணிந்து காணப்படும் இருவரையும் பார்த்தால் இவர்களை சகோதரர்கள் என்று மட்டுமல்ல இரட்டையர்கள் என்று கூறப்படுவதை பார்த்தால் கூட நம்பமுடியாது. ஏனெனில் இவர்களில் ஒருவர் கறுப்பாகவும், மற்றவர் வெள்ளையாகவும் பிறந்ததே இதற்கு காரணமாகும்.



வருடத்திற்கு பிரித்தானியாவில் 12,000 இரட்டையர்கள் பிறக்கின்றனர். இதில் 385 பேர் கறுப்பர்களாகவும் அல்லது கலப்பினத்தவராகவும் காணப்படுகின்றனர். ஆனால் இவர்களைப் போன்ற அரிதான ஒருவர் கறுப்பாகவும், ஒருவர் வெள்ளையானவராகவும் பிறப்பது வருடத்தில் ஒரு சோடியாகத்தான் இருக்கும்.இவர்களைப் போன்ற கதையொன்றைத் திரைப்படமாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.



இந்த நிறமாற்றப் பிறப்பிற்குக் காரணமான விடயங்களையும் இவர்கள் ஆராய்ச்சியில் தற்போது பத்தில் ஒரு பிள்ளை கலப்பினத்தைச் சேர்ந்ததாக உள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால் இனியும் இவ்வாறான பிறப்புக்கள் பொதுவில் காணப்படலாமென்கின்றனர் ஆய்வாளர்கள்.



இதற்கு காரணம் தந்தை நைஜீரியராகவும், தாயார் வெள்ளையினத்தவராகவும் இருந்தார். இவர்களின் தந்தையார் வெள்ளையினத்தவராவார். இதனால் தாயிலிருந்தே இவர்களது பாட்டனாரின் உயிரணுக்கள் தொடர்ந்திருப்பதாகக் கூறப்படுகின்றது