Tuesday, September 27, 2011

பாலியல் வீடியோக்களை வைத்துள்ள தென்மராட்சிப் பாடசாலை அதிபர்!!


தென்மராட்சிப் பாடசாலை அதிபர் ஒருவர் தனது 'லப்டொப்' கணனி மூலம் ஆசிரியைகள் சிலரை தன்னுடைய தவறான நடவடிக்கைக்கு பயன்படுத்த முற்பட்டுள்ளார்.

இவ் அதிபர் அண்மையில் சனல் 4 என்ற தொலைக் காட்சி மூலம் வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக் களம் என்ற காணொளியை தனது கணனியில் பதிவு செய்து வைத்திருக்கின்றார்.

இவற்றை சில ஆசிரியைகளுக்கு போட்டுக் காட்டுவதாகவும் நிர்வாண நிலையில் இறந்து கிடந்த பெண் போராளிகளின் காணொளிகள் மற்றும் படையினரால் பாலியல் வல்லுறவு செய்யப்படும் காணொளிகள் போன்றன தன்னிடம் உள்ளதாகக் கூறி சில ஆசிரியைகளுக்கு தனித் தனியே தனது அலுவலகத்தில் வைத்து காட்டுகின்றாராம்.

ஆனால் அந்தக் காட்சளில் ஒன்று கூட இலங்கை தொடர்பானது அல்ல என்றும் அக் காட்சிகள் அனைத்தும் ஆபாச வீடியோக்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இக் காட்சிகளை குறிப்பிட்ட ஆசிரியை ஒருவருக்கு காட்டிய போது காட்சிகளின் உண்மைத் தன்மையை பார்த்த அவ் ஆசிரியை அது பற்றி அதிபரை எச்சரித்து வெளியேறியதாகவும் இது தொடர்பாக அவ் ஆசிரியை அங்கு கற்பிக்கும் சில ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தவே அதிபரின் உண்மை நிலை விளங்கி உள்ளது.


இவ் அதிபர் இது தொடர்பான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால் அதிபர் எந்தப் பாடசாலையில் கடமையாற்றுகின்றார் மற்றும் அவரது பெயர் விபரங்கள் அனைத்தும எமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களுடன் இனி வருங்காலங்களில் தெரிவிப்போம்.

No comments:

Post a Comment