எது காதல்!
![]() | |
காமத்தை உணர்ந்து
கனவுகளை கசக்கி
புரிந்துணர்வை புதைத்து
உணர்வுகளை உருக்கி
கானல் உறவுகளில் கலந்து
காலம் கழிந்த பின்
பிரிவு எனும் கல்லறைக்குள்
மண்ணாகிப்போவது காதலா?
இல்லை!
இதயத்தின் பார்வையில் இழுத்து
இன்பத்திலே நனைந்து
கனவுகளை கலைக்காமல்
காமம் என்பதை நினைக்காமல்
உண்மை உறவை வெறுக்காமல்
உடலதுவை மறந்து
உயிரணுவில் கலந்து
உலகமே உருண்டு உடைந்த போதும்
உயிர் வாழும் ஒரு உணர்வே
உணமைக் காதல்
No comments:
Post a Comment