Friday, September 2, 2011

லிபியாவில் வன்முறை: மிருக காட்சி சாலையில் விலங்குகள் தண்ணீர் இல்லாமல் தவிப்பு

  மிருக காட்சி சாலையில் உள்ள விலங்குகள் லிபியாவில் நடைபெற்ற போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
கடந்த 10 நாட்களாக தலைநகர் திரிபோலியில் உள்ள மிருக சாட்சி சாலையில் மிருகங்களுக்கு உணவோ அல்லது தண்ணீரோ கிடைக்கவில்லை. அங்குள்ள மிருகங்கள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தன.
திரிபோலி மிருக காட்சி சாலைக்கு சென்ற போது அதில் பராமரிப்பு பணி நடைபெறுவதாக கூறப்பட்டு மூடப்பட்டு இருந்தது. அங்கு வெளிப்பார்வைக்கு மிருகங்களும் தெரியவில்லை. ஆனால் கொஞ்ச தூரத்தில் சிங்கம், மான், முயல், கரடி, ஆமைகள், குரங்குகள் ஆகியவை உரிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் பரிதாபமான நிலையில் இருந்தன.
திரிபோலியில் கடாபி ராணுவத்தினருக்கும் புரட்சிப்படையினருக்கும் கடந்த ஒரு வாரமாக கடுமையான சண்டை நடந்துவந்தது. இந்த நிலையில் மிருக காட்சி சாலை ஊழியர்கள் 200 பேர் பணிக்கு வரவில்லை. இதனால் மிருக காட்சி சாலை மூடப்பட்டு இருந்தது.
200 ஊழியர்களில் 10 பேர் மட்டும் மிருகங்களின் பரிதாப நிலையை பார்த்து பணிக்கு திரும்பி ஓய்வு இல்லாமல் மிருகங்களுக்கு உணவு அளித்து வருவதாக மிருக சாட்சி சாலை பாதுகாப்பாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment