Tuesday, September 27, 2011

அதிவேக வீதி அமைக்க வந்த சீனப்பிரஜை 16 வயது சிறுவன் மீது பாலியல் வல்லுறவு!!


அத்துறுகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அதிவேக வீதி அமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சீன நாட்டுப் பிரஜை ஒருவர் 16 வயது சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

அதிவேக வீதியின் வடக்குப் பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டவராவார்.

சம்பவம் தொடர்பில் மாலபே பகுதியில் வசித்து வரும் 46 வயதான சீன நாட்டுப் பிரஜை அத்துறுகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்றைய தினம் கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments:

Post a Comment