Sunday, September 11, 2011

மனிதா சிந்தனையை மாற்று ...!

மனிதா சிந்தனையை மாற்று ...!
வாழ்த்துவதும் இலகே அவ்வகை வாழ்தலே
வையகத்தில் வலிது மிக வலிது
பிறர் குறை பேசும் மூடனே உன் புறமுதுகு
நீ அறியாதது ஏனோ விந்தைதான்
யாரேனும் காதலித்தால் கதை பேசும் நீ
உன் பிள்ளைஎன்றால் ஊமையாய் போவதேனோ ?
குருக்கள் கூடினால் குற்றம் இல்லையோ ?
ஒருவனை காதலித்து அவனையே கைப்பிடித்தலில்
எங்கு கண்டாய் அவர் வாழ்வில் இழுக்கு ?
பலரோடு கூடி உன்பிள்ளை திளைப்பதில்
இங்கு என்ன பெருமை கொண்டாய் ?
சாதி சொல்வாய் மதம் சொல்வாய் இனம் மாறியதாய்
இழிவு சொல்வாய் மதி கெட்டாய் மடையனே
மனித மனம் ஒன்று இருப்பதை ஏன் மறந்தாய் ?
வண்டி மட்டுமல்ல வண்டிக்காரனும் இங்கு ஓடத்தில்
ஏறும் காலமிது உன்னை உன் உளுத்தல் சிந்தனையை மாற்று
இல்லையேல் இந்த உலகத்தில் ஆவாய் நீ தீட்டு ...

No comments:

Post a Comment