பிரிவின் துயரம்....!!!!
![]() | |
உன் நினைவுகளால் என்னை உயிர்ப்பிக்கின்றாய்
உன்னுடன் பேசிப்பழகிய அந்த அழகிய
தருணங்களை என் மனம் எண்ணிப் பார்க்கின்றது
முடியவில்லையடா என்னால் ..!!
உன்னிடம் மட்டுமே தோற்றுக்கொண்டே போகின்றேன்..
கண்ணீர் சிந்தும் என் கண்களை விட
உன்னை மறக்க நினைத்தும் மறக்க முடியாமல்
தவிக்கும் என் இதயதிற்கே வலி அதிகமடா..
உன்னை பிரிந்திருக்கும் ஒவ்வொரு நொடியும்
என் அத்தனை நரம்புகளிலும் வலியை உணர்கிறேன்..
உன் பிரிவு சொல்லும் இந்த வலியை விட
மரணத்தின் வலி கூட பெரிதில்லடா..!!
நாட்கள் நகர தொடங்கி விட்டன ஆனாலும்
உனக்கான தேடல்களும் எனக்குள்
அதிகரிக்க தொடங்கி விட்டன..
ஒரு நிலையில் உன் நினைவுகளால்
என் சுயநிலையை இழந்திடுவேனோ
என்கிற பயமும் என்னுள் அதிகரித்து விட்டது..
சத்தமின்றி என் மனதோடு- உன்னை மறப்பேன்
என்று செய்து கொண்ட சத்தியமும்..-ஏனோ உன் நினைவுகளால் ..
இன்று செயல் இழந்து போய் விட்டது...!!!!!
No comments:
Post a Comment