தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள இளம் பெண்கள் பாலியல் தொழில் நோக்கில் யாழ்ப்பாணத்தை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அவ்வாறு மகரகமவில இருந்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்ட சிங்கள இளம் பெண் ஒருவiர் நேற்று முன்தினம் தாவடி மானிப்பாய் வீதிப் பகுதியில் சுன்னாகம் பொலிசார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் பிரஸ்தாப சிங்கள யுவதி தாவடி மானிப்பாய் வீதிப் பகுதியில் இரு இளைஞர்களுடன் கருத்து முரண்பாடு ஏற்பட்ட நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதனையடுத்து அப் பகுதியில் பொதுமக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து அப்பகுதிக்கு இராணுவத்தின் உதவியுடன் வருகை தந்த சுன்னாகம் பொலிசார் குறித்த சிங்கள யுவதியை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட யுவதியிடம் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்த காரணம், யார் அழைத்து வந்தனர் போன்ற விபரங்கள் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் யுவதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த குறித்த இரு இளைஞர்களும் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் தொடர்பிலும் பொலிசார் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment