Monday, September 5, 2011

ஏழையின் கூக்குரல்


ஏழையின் கூக்குரல்


கண்கள் கண்ட காட்சி மீது,
மனம் பதைபதைத்தது.
அன்பு கொண்ட மாந்தர்,
தன்னை உலகம் மறந்து போனது.
ஏழை என்றும், ஜாதி என்றும்
வையமெங்கும் பேதம் பிறந்தது.
பட்டழுக்கும், பகட்டு சிரிப்பும்
சமுகம் தன்னில் நிலையும் பெற்றது.
செய்யும் செயல்கள் யாவும்
அறம் தவிர்த்து பாதை மாறி போனது.
அதை கண்டு கொண்டு,
தர்மம் தன்னில் செயலிழந்து ஊமை ஆனது.
விதி விட்ட வழியென்று
காலதேவன் கடமை கொண்டு
காத்து நின்றது.
கொடுமை தன்னை தடுத்து நிறுத்த
நீதி கரம் கொண்டு எழுந்து நின்றது.
அது அமைதி கொண்டு, ஊமையாகி
கண்கள் கட்டி கொண்டது.
வருங்காலம் எப்படி இருக்குமென்று தெரியாமல்
மனதில்  வலி மட்டுமே சுமக்கிறோம்.
தாமரை இல்லை தண்ணீர் போல
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் !!
கொடுமை தன்னை தடுத்து நிறுத்த
நீதி கரம் கொண்டு எழுந்து நின்றது.
அது அமைதி கொண்டு, ஊமையாகி
கண்கள் கட்டி கொண்டது.
வருங்காலம் எப்படி இருக்குமென்று தெரியாமல்
மனதில்  வலி மட்டுமே சுமக்கிறோம்.
தாமரை இல்லை தண்ணீர் போல
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் !!

No comments:

Post a Comment