
டம்ளர் கணக்கில் தண்ணீர் குடியுங்கள் என்று கூறப்படுகிறது. எப்படிக் குடிக்க வேண்டும் ?
தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.
டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.
தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது, மூக்கு, தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன. ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.
ஒருவர் குடித்த டம்ளரில் மற்றொருவர் குடிப்பது சுகாதாரக் கேடு என நீங்கள் கூறலாம்.
இதற்கும் மாற்று வழி உண்டு. ஒவ்வொருவருக்கும் டூத் பிரஷ் இருப்பதுபோல தனித்தனியே டம்ளர் வைத்துக் கொள்ள வேண்டும். விருந்தினர்க்குக் கொடுக்கப்பட்ட டம்ளரை உடனுக்குடன் அலசிக் கழுவி வைத்துக் கொள்ளலாமே !
No comments:
Post a Comment