Wednesday, September 21, 2011

17 வயது பள்ளி மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த 10 பெண்கள்

17 வயது பள்ளி மாணவனை, 10 பெண்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பெண்களைக் கடத்திச் சென்று கற்பழிப்பதுதான் பெரும்பாலும் நடைபெறும் சம்பவமாகும். ஆனால் பப்புவா நியூ கினியா நாட்டில் மாணவனை, பெண்கள் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்து அந்த நாட்டின் தெற்கு பிராந்திய போலீஸ் கமாண்டர் டெட்டி டெய் கூறியதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை மென்டியில் ஒரு பள்ளி மாணவனை பெண்கள் கும்பல் ஒன்று கத்தியால் தாக்கி கடத்திச் சென்றது.

இந்த செயலைச் செய்தவர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மாணவனை கத்தியால் தாக்கியுள்ளனர். மேலும், 4 பெண்கள் அவனுடன் பலவந்தமாக உடல் உறவு கொண்டுள்ளனர். மேலும் 6 பெண்கள், அவனை பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அவனுக்கு எய்ட்ஸ் தாக்கி விடுமோ என்று அஞ்சுகிறோம்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.

No comments:

Post a Comment