Wednesday, September 21, 2011
50 பிள்ளைகளின் தந்தையான 90 வயது நபர்
பிரேஸிலை சேர்ந்த 90 வயதான நபர் ஒருவர் 50 பிள்ளைகளுக்கு தந்தையாக விளங்குகிறார்.
தனது பிள்ளைகளில் பலரின் பெயர் இதுவரை தனக்கு தெரியாதென்று கூறும் அவர் தனது பிள்ளைகள் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
விவசாயியான லூயிஸ் கொஸ்டா டீ ஒலிவேரியா எனும் இந்நபர் 4 மனைவிகள் மூலம் 50 பிள்ளகைளைப் பெற்றுள்ளார். இப்பெண்;களில் சகோதர்கள் இருவரும் அவர்களின் தாயும் அடங்குகின்றனர்.
'கடவுள் உலகில் படைத்த மிகச் சிறந்த விடயமென்றால் அது பெண்கள்தான்' என ஒலிவேரியா தெரிவித்துள்ளார்.
லூயிஸின் முதல் மனைவியான பிரான்ஸிகோவிற்கு 17 பிள்ளைகள். அவர் இறந்த பின் மரியா பிரான்ஸிகா டா சில்வா எனும் பெண் மூலம் மேலும் 17 பிள்ளைகள் பிறந்தனர். தற்போது பிரான்சிஸ்காவுக்கு 64 வயதாகிறது.
மரியா தனது பிள்ளைகளை பராமரிப்பதற்காக தனது சகோதரியான ஒசெலிடாவை வீட்டிற்கு அழைத்துவந்தார். ஆனால் ஒசெலிடாவுக்கும் லூயிஸ்க்கும் காதல் ஏற்படவே அவருக்கு லூயிஸ் மூலம் 15 பிள்ளைகள் பிறந்தன. பிரான்ஸிகா மரியா (தற்போது வயது 89) மற்றுமொரு குழந்தையை பெற்றெடுத்தார்.
இச்சகோதரிகளின் தாய் பிரான்சிஸ்கா மரியாவும் ஒலிவேரியாவிடமிருந்து தப்பவில்லை. அவருக்கு ஒலிவேரியா மூலம் ஒரு குழந்தை பிறந்தது. தற்போது பிரான்சிஸ்காவுக்கு 89 வயதாகிறது.
வறுமையின் காரணமாக ஒலிவேரியாவின் சில பிள்ளைகள் உயிரழந்தன. ஏனைய பிள்ளைகள் மூலமாக லூயிஸுக்கு 100 பேரப்பிள்ளைகளும் 30 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
'எனது பிள்ளைகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும். ஏனெனில் எப்போதும் நான் பெண்களுடன் உறவுகொள்வதில் விருப்பம் கொண்டேன். அவர்கள் அனைவரின் பெயரும் எனக்குத் தெரியாது.
நான் இப்போது உடல் ஆரோக்கியத்துடன் உள்ளபோதிலும் அரிதாகவே உறவுகொள்கிறேன் என்று லூயிஸ் தெரிவித்துள்ளார்.
லூயிஸின் இரண்டாவது மனைவியான மரியா தெரிவிக்கையில் லூயிஸுக்கு எப்போதும் உறவுகொள்வதுதான் பொழுதுபோக்கு. ஆனால் அவர் ஒருபோதும் தவறாக நடத்தியதில்லை. அவர் எப்போதும் அவரது பிள்ளைகளை நன்றாக பார்த்துக்கொண்டார். எங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை' என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment