Tuesday, September 6, 2011

ரூ.1.07 லட்சத்தில் புதிய பைக்கை அறிமுகப்படுத்தியது யமஹா

ஸ்போர்ட்ஸ் பைக்கை யமஹா அறிமுகம் செய்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட யமஹா ஆர்-15 ஸ்போர்ட்ஸ் பைக்குகள் இந்திய இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.

சீறும் எஞ்சின், மிரட்டும் தோற்றம் என இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததால், இந்த பைக்குகள் விற்பனையிலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.

இந்த நிலையில், காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் கூடிய புதிய ஆர்-15 ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்திய சந்தையில் யமஹா களமிறக்கியுள்ளது.

ஆர்-15 வெர்ஷன் 2.0 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பைக் அடுத்த தலைமுறைக்கான வெளிப்புற வடிவமைப்புடன் களமிறக்கப்பட்டுள்ளது.

பின்பக்க சேஸிஸ் மேலும் அதிக உயரம் கொண்டதாகவும், ஸ்டெப்டு இருக்கைகள் கொண்டதாகவும் புதிய ஆர்-15 வி.2.0 வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆர்-15பைக்கின் ஸ்போர்ட்ஸ் பைக் லுக்கை மேலும் அதிகரிப்பதாக இருக்கிறது.

கூடுதல் அகலம் கொண்ட டயர்களும் புதிய ஆர்-15 ஸ்போர்ட்ஸ் பைக்குக்கு ரோடு கிரிப்பை அதிகப்படுத்துவதோடு மட்டுமின்றி அசத்தும் புறத்தோற்ற வடிவத்தை கொடுக்கிறது.

எஞ்சினில் கறுப்பு வண்ண கோட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆர்-15 வி2.0க்கு அழகுக்கு அழகு சேர்க்கிறது.

பின்பக்க சக்கரத்திற்கு மேலே நம்பர் பிளேட்டுகள் மற்றும் இண்டிகேட்டர்கள் தொங்குவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது மனதிற்குள் ஆர்-15 வாங்கும் ஆசையை அதிகரிக்கிறது. மேலும், டேஞ்சர் விளக்கில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதும் கூடுதல் பொலிவு கொடுக்கிறது.

புதிய ஆர்-15 வி2.0 பைக் லிக்யூடு கூல்டு 150சிசி எஞ்சினுடன் வந்துள்ளது. இது 17 பிஎச்பி ஆற்றலையும், அதிகப்பட்சம் 15 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். எனவே, பிக்கப்புக்கு கியாரண்டி கூறலாம். இந்த புதிய ஆர்-15 வெர்ஷன் 2.0 ஸ்போர்ட்ஸ் பைக் ரூ.1.07 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment