![]() | 1 |
ரெக்கை கட்டி பறந்தது
பள்ளி பருவத்து
துள்ளி திரிந்த காலம்
வட்ட பொட்டு
வகிடு பிரித்த கூந்தல்
குட்டை பாவாடை -அவள்
குமரியான நாட்பொழுது..
அரும்பு மீசை
ஆசைகள் ஆயிரம் சொல்ல
விரும்பதா -அவள்
இதயமென ஏங்கிய நாட்கள்
அர்த்தம் இன்றி
அவள் பாதங்களின்
சுவடுகளாய் பதிந்து
நீண்டுபோன நினைவலைகள்...
கொலுசு சத்தங்கள் வைத்து
குறி சொன்ன காலம்
குமரிகளுக்காக -குழுவாக
மோதிக்கொண்ட வேதனைகள்
என்னதான்
ஏங்கி தவித்தாலும்
திரும்புமா அந்த
மத்தாப்பு வீசிய காலம்....
No comments:
Post a Comment