Friday, September 2, 2011

ஆண்களுக்கு இணையாக பெண்கள் வருமானம் ஈட்ட 100 ஆண்டுகள் ஆகும்: ஆய்வில் தகவல்

 பிரிட்டனில் ஆண்களுக்கு இணையாக பெண் நிர்வாகிகள் சம்பளம் பெறுவதற்கு ஏறக்குறைய 100 ஆண்டுகள் ஆகும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனில் தற்போது ஆண்டு ஒன்றிற்கு பெண் நிர்வாகிகளுக்கு 31 ஆயிரத்து 895 பவுண்ட் ஊதியம் அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆண்கள் வருடத்திற்கு 42 ஆயிரத்து 441 பவுண்ட் ஊதியம் பெறுகிறார்கள்.
ஒரே வேலையை பார்க்கும் இரு பால் ஊழியர்கள் இடையே இந்த சம்பள வேறுபாடு காணப்படுகிறது. சார்டர்ட் மானேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
2001ஆம் ஆண்டில் ஆண்களை காட்டிலும் பெண்கள் சம்பள விகிதம் அதிகரித்த போதும் மொத்த சம்பளம் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு குறைவாகவே உள்ளது. தற்போது ஆண்களை காட்டிலும் இளம் பெண் நிர்வாகிகள் அதிக வருமானம் ஈட்டுவதாக சார்ட்டர்டு மானேஜ்மென்ட் ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த ஆய்வின் படி தற்போது இளம் பெண் நிர்வாகிகள் 21 ஆயிரத்து 969 பவுண்ட் வருமானம் பெறுகிறார்கள். அவர்கள் இள நிலையில் உள்ள ஆண்கள் பெறும் சம்பளத்தை காட்டிலும் 602 பவுண்ட் கூடுதலாக பெறுகிறார்கள். இருப்பினும் 2010ஆம் ஆண்டை காட்டிலும் 2011ஆம் ஆண்டின் பெண் சம்பள வேறுபாடு பெரிய அளவில் உள்ளது.
எனவே ஆண் பெண் இரு பாலரும் ஒரே நிலையில் உள்ள பணிக்கு சமமான சம்பளம் பெறுவதற்கு இன்னும் 57 ஆண்டுகள் முதல் 98 ஆண்டுகள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment