மழையோடு வந்து -என்
மனதோரம் நின்றவள் நீயோ !
மார்கழி குளிரோடு -என்
மனதை களவாடி சென்றவள் நீயோ !
கனவோடு நடந்த -என்
நிழலோடு நடந்தவள் நீயோ!
கண்ணோரம் வந்த-என்
கண்ணீர் துளியை துடைத்தவள் நீயோ!
காற்றோடு கலந்து -என்
மனதோடு கலந்தவள் நீயோ
கடலலையோடு விளையாட -என்
கைகோர்த்து நடந்தவள் நீயோ
நிலவோடு வந்து நித்தம் -என்
நித்திரை தொலைய வைத்தவள் நீயோ!
நீக்கத அன்போடு -என்னை
நிலை தடுமாற செய்தவள் நீயோ !
கண் மூடும் வேளையில்-என்
கனவோடு வருபவள் நீயோ !
கவலைகள் மறக்க-என்
காதோரம் கதை சொன்னவள் நீயோ!
வானோடு உறவாடும் முகில்போல-என்
வாழ்வோடு உறவாட வந்தவள் நீயோ !
வாடாத மனதோடு என்றும்
வாழ்வேன் உன் நினைவோடு .......
No comments:
Post a Comment