![]() காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 273 ஓட்டங்களையும் இலங்கை அணி 105 ஓட்டங்களையும் பெற்றன. 3 ஆவது நாளான இன்று அவுஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 210 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மைக்கல் கிளார்க் 60 ஓட்டங்களைப் பெற்றார். ரங்கன ஹேரத் 79 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு 379 ஓட்டங்கள் தேiயான நிலையில் இன்று பிற்பகல் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. ஆட்டமுடிவின்போது அவ்வணி 5 விக்கெட் இழப்பிற்கு 120 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மஹேல ஜயவர்தன 57 ஓட்டங்களுடனும் ஏஞ்சலோ மத்தியூஸ் 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். ரியான் ஹரிஸ் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இப்போட்டிகளில் இன்னும் இரு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் இலங்கை அணி மேலும் 259 ஓட்டங்களைப் பெறவேண்டிய நெருக்கடியில் உள்ளது. |
Friday, September 2, 2011
ஆஸியுடனான முதல் டெஸ்ட்: நெருக்கடியில் இலங்கை அணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment