Tuesday, September 6, 2011

புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டை அறிமுகப்படுத்துகிறது ஏஸர்

Acer Iconia A501
எங்கு பார்த்தாலும்
ஆண்ட்ராய்டு டாப்லட் மயமாக இருக்கிறது. விண்டோஸ் தளத்தில் இயங்கும்
மொபைல்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்ளை
ஆண்ட்ராய்டு டேப்லெட் பக்கம் திருப்புவதற்காக ஏஸர் நிறுவனம் ஒரு புதிய
உத்தியை வைத்திருக்கிறது.

அதற்காக விரைவில் புதிய ஆண்ட்ராய்டு
டேப்லெட் ஒன்றை அறிமுகப்படுத்தப்போவதாக கடந்த மே மாதம்
அறிவித்திருக்கின்றனர். அந்த புதிய மொபைலின் பெயர் ஏஸர் ஐகோனியா ஏ-501
ஆகும். அதாவது அந்த மொபைல் நிப்டி எ500 அடுத்ததாக வரவிருக்கிறது.

ஏஸர்
ஐகோனியா எ501 10.0இன்ச் எல்சிடி தொடுதிரையுடன் கூடிய டிஸ்ப்ளேயுடன் 800 x
1280 பிக்ஸல் ரிசலூசனைக் கொண்டிருக்கும். வந்திருக்கும தகவல்களின் படி
எ500 போல் அல்லாமல் எ501 3ஜி வசதி மற்றும் 2ஜி ஜிஎஸ் எம் நெட்வொர்க்குகளான
850/ 900 / 1800 போன்ற ப்ரீக்வன்சிகளை சப்போர்ட செய்வதாக இருக்கும். இதன்
எடை 730 கிராம்களாக இருக்கும்.

மேலும் இந்த மொபைல் என்விஐடிஐஎ
மூலம் டேக்ரா 2 டூவல் கோர் 1 ஜிஹச்ஸட் ஓஆர்எம் கோர்ட்டெக்ஸ் - எ9 தளத்தில்
இயங்கும். மேலும் இது 1ஜிபி அளவில் டிடிஆர்2 ராமைக் கொண்டிருக்கும்.
மற்றும் என்விஐடிஐஎ ஜிபியு பெற்றிருக்கும். ஆனால் இதை விரிவுபடுத்த
முடியாது.

ஐகோனியா எ501 லகுவான யூசர் இன்டர்பேசுக்கான ஜிரோ
சென்சார் மற்றும் தற்சுழற்சிக்காக அக்ஸ்லிரோமீட்டரும் கொண்டிருக்கிறது.
மற்ற டாப்லட்டுகளைப் போலவே தரமான 3.5எம்எம் ஆடியோ ஜாக்குடன் வெளிப்புற
ஒலிப்பெருக்கிகளும் கொண்டிருக்கின்றது.

மேலும் 32ஜிபி வரை
விரிவுபடுத்தக்கூடிய மைக்ரோ எஸ்டி ஸ்டாட்டும் பெற்றுள்ளது. அடுத்ததாக
தொடர்பு வசதிக்காக 802.11பி/ஜி/என் வைபையும் மற்றும் சிறந்த எ2டிபி
ப்ளூடூத் 2.0 மற்றும் தகவல் பரிமாற்றத்துக்காக மைக்ரோ யுஎஸ்பி
போர்ட்டுகளும் உள்ளன. இதன் 5 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா ஆட்டோ போக்கஸ்
மற்றும் எல்இடி ப்ளாஷ் பெற்றுள்ளது. இதன் ரியர் கேமரா 2 மெகா பிக்ஸலாகும்.

மேலும்
ஏஸர் ஐகோனியா எ501 ஆண்ட்ராய்டு 3.2 ஹணிகோம்பில் இயங்குவதால் ஆண்ட்ராய்டு
அப்ளிகேஷன்களை முழுவதுமாக அனுபவிக்க முடியும். ஹச்டிஎம்எல் ப்ரவுஸர்
சாதாரணமாக இருந்தாலும் அதை குறைவாக மதிப்பிட முடியாது.

நமது புதிய
மொபைல் ஹச்டிஎம்எல்லின் அப்ளிகேஷன்களான விளையாட்டுகள், சோஷியல்
நெட்வொர்க்குகள் அனைத்தையும் நமக்கு வழங்குகிறது. இதன் ஜாவா சப்போர்ட்
கூகுள் டாக், ஜிமெயில், யுடியூப், பிக்காஸா மென்பொருள்கள் ஆகியவற்றை
எளிதாக நமக்குத் தரும்.

ஏஸர் ஐகோனியா எ501ன் மின்திறனை எடுத்துக்
கொண்டால் அது லை-போ-யன் 3250எம்எஹச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. அதனால்
அதிக நேரம் இந்த மொபைலில் நாம் பேச முடியும். மேலும் இதன் மீடியா
ப்ளேயர்கள் எம்பி3, டபுள்யுஎவி, டபுள்யுஎம்எ, இஎஎசி போன்ற ஆடியோ
பைல்களையும் எக்ஸ்விஐடி போன்ற வீடியோ பைல்களையும் ஹச்.264/ஹச்263 தரத்தில்
இயக்கும் திறன் வாய்ந்தது.

மேலும் குறுஞ்செய்திகள் புஷ்மெயில்கள்/இமெயில் போன்ற வசதிகளையும் எளிதாக இதில் அனுபவிக்கலாம். இந்

No comments:

Post a Comment