தென்மராட்சிப் பாடசாலை அதிபர் ஒருவர் தனது 'லப்டொப்' கணனி மூலம் ஆசிரியைகள் சிலரை தன்னுடைய தவறான நடவடிக்கைக்கு பயன்படுத்த முற்பட்டுள்ளார்.
இவ் அதிபர் அண்மையில் சனல் 4 என்ற தொலைக் காட்சி மூலம் வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக் களம் என்ற காணொளியை தனது கணனியில் பதிவு செய்து வைத்திருக்கின்றார்.
இவற்றை சில ஆசிரியைகளுக்கு போட்டுக் காட்டுவதாகவும் நிர்வாண நிலையில் இறந்து கிடந்த பெண் போராளிகளின் காணொளிகள் மற்றும் படையினரால் பாலியல் வல்லுறவு செய்யப்படும் காணொளிகள் போன்றன தன்னிடம் உள்ளதாகக் கூறி சில ஆசிரியைகளுக்கு தனித் தனியே தனது அலுவலகத்தில் வைத்து காட்டுகின்றாராம்.
ஆனால் அந்தக் காட்சளில் ஒன்று கூட இலங்கை தொடர்பானது அல்ல என்றும் அக் காட்சிகள் அனைத்தும் ஆபாச வீடியோக்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இக் காட்சிகளை குறிப்பிட்ட ஆசிரியை ஒருவருக்கு காட்டிய போது காட்சிகளின் உண்மைத் தன்மையை பார்த்த அவ் ஆசிரியை அது பற்றி அதிபரை எச்சரித்து வெளியேறியதாகவும் இது தொடர்பாக அவ் ஆசிரியை அங்கு கற்பிக்கும் சில ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தவே அதிபரின் உண்மை நிலை விளங்கி உள்ளது.
இவ் அதிபர் இது தொடர்பான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால் அதிபர் எந்தப் பாடசாலையில் கடமையாற்றுகின்றார் மற்றும் அவரது பெயர் விபரங்கள் அனைத்தும எமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களுடன் இனி வருங்காலங்களில் தெரிவிப்போம்.
அத்துறுகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அதிவேக வீதி அமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சீன நாட்டுப் பிரஜை ஒருவர் 16 வயது சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
அதிவேக வீதியின் வடக்குப் பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டவராவார்.
சம்பவம் தொடர்பில் மாலபே பகுதியில் வசித்து வரும் 46 வயதான சீன நாட்டுப் பிரஜை அத்துறுகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்றைய தினம் கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
விண்வெளியில் பருவ நிலை குறித்து ஆய்வு செய்ய கடந்த 1991-ம் ஆண்டு அமெரிக்கா “யூ.ஏ.ஆர்.எஸ்.” என்ற ஒரு செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்பியது. அதன் ஆயுட்காலம் கடந்த 2005-ம் ஆண்டில் முடிவடைந்தது
இதற்கிடையே என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த செயற்கைகோள் பூமியை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வருகிறது. பூமியில் மோதி 200 துண்டுகளாக சிதறி வரும். அந்த செயற்கைகோள் 700 கி.மீட்டர் தூரத்துக்கு பூமியில் விழும் என “நாசா” விண்வெளி மையம் அறிவித்தது.
நேற்று இரவு 10.30 மணியில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு அது பூமியில் மோதும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் அது பூமியில் விழவில்லை. இருந்தாலும் அது பூமியை நெருங்கி விட்டது. இன்றுக்குள் பூமியை மோதும் என “நாசா” விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் கனடாவின் ஓகோடோக்ஸ் மாகனத்தில் முற்பகலில் செயற்கைகோள் துண்டுகள் விழுந்துள்ளதாக ட்விட்டரில் “நாசா” விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள இளம் பெண்கள் பாலியல் தொழில் நோக்கில் யாழ்ப்பாணத்தை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அவ்வாறு மகரகமவில இருந்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்ட சிங்கள இளம் பெண் ஒருவiர் நேற்று முன்தினம் தாவடி மானிப்பாய் வீதிப் பகுதியில் சுன்னாகம் பொலிசார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் பிரஸ்தாப சிங்கள யுவதி தாவடி மானிப்பாய் வீதிப் பகுதியில் இரு இளைஞர்களுடன் கருத்து முரண்பாடு ஏற்பட்ட நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதனையடுத்து அப் பகுதியில் பொதுமக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து அப்பகுதிக்கு இராணுவத்தின் உதவியுடன் வருகை தந்த சுன்னாகம் பொலிசார் குறித்த சிங்கள யுவதியை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட யுவதியிடம் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்த காரணம், யார் அழைத்து வந்தனர் போன்ற விபரங்கள் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் யுவதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த குறித்த இரு இளைஞர்களும் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் தொடர்பிலும் பொலிசார் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கின்றனர்.
பேஸ்புக் நிறுவனமானது பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒன்று தான் timeline எனப்படும் பேஸ்புக்கின் புதிய தோற்றம்.இந்த புதிய தோற்றம் கண்டிப்பாக அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதியை இப்பொழுது Developer மட்டும் வழங்கி உள்ளது. அதை உங்கள் கணக்கிலும் அந்த புதிய மாற்றத்தை, தோற்றத்தை கொண்டு வரலாம்.
இதற்கு முதலில் Facebook Developer இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு ஒரு விண்டோ வந்தால் அதில் உள்ள Allow கொடுத்து உள்ளே செல்லவும்.
இனி ஒவ்வொரு படத்திலும் குறிப்பிட்டு காட்டி இருக்கும் படி செய்யுங்கள்.
உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் App Display Name, App namespace போன்ற இரு பகுதி இருக்கும்.
அதில் உங்களுக்கு தோன்றிய பெயரை கொடுக்கவும். அதில் App Namespace என்ற இடத்தில் நீங்கள் கொடுக்கும் பெயர் Available என்று பச்சை நிறத்தில் வரவேண்டும்.
அடுத்து Security Check என்ற பகுதியில் verification code நிரப்ப சொல்லும் அதை சரியாக கொடுத்து submit பட்டனை அழுத்தவும். அடுத்து உங்களுடையை App ரெடியாகி விடும். அந்த விண்டோவில் உள்ள Open Graph என்ற லிங்கை அழுத்தவும்.
அதில் உள்ள சிறு கட்டங்களில் ஏதோ ஒன்றை கொடுத்து Get Started என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் கடைசியில் உள்ள Save Changes என்ற பட்டனை அழுத்தவும்.
இதற்கு அடுத்து ஓபன் ஆகும் இரண்டு விண்டோக்களிலும் இதே பட்டனை அழுத்தவும். முடிவில் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
இந்த விண்டோ வந்தால் இதுவரை நீங்கள் செய்த அனைத்தும் சரியே. இப்பொழுது உங்கள் பேஸ்புக்கின் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள்.
உங்கள் பேஸ்புக்கின் புரொபைல் பக்கத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு ஒரு அறிவிப்பு செய்தி இருப்பதை காண்பீர்கள்.
அந்த பட்டனை அழுத்திய அடுத்த வினாடியே உங்களின் பேஸ்புக் கணக்கு புதிய தோற்றத்தில் மாறிவிடும். சில கூடுதல் வசதிகளையும் பெறலாம்.
இந்த புதிய தோற்றம் Developer பிரிவில் சேர்ந்துள்ளவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்களுக்கு பழைய தோற்றம் தான் தெரியும்.
இருபது ஆண்டுகளுக்கு முன் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய செயற்கைக்கோள், நாளை (23) பூமியைத் தாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், 1991ம் ஆண்டு 3,525 கோடி இந்திய ரூபா செலவில், உயர் வளிமண்டல ஆராய்ச்சி செயற்கைக்கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.) ஏவியது. இது பூமியின் வளிமண்டலம் குறித்த தகவல்களை திரட்டித் தந்து கொண்டிருந்தது.
14 ஆண்டுகள் தகவல்களை அனுப்பிய யு.ஏ.ஆர்.எஸ்., 2005ம் ஆண்டு செயலிழந்தது. ஒரு பஸ் அளவுள்ள இந்த செயற்கைக்கோளின் எடை 5670 கிலோ. விண்வெளியில் சுற்றி வந்த இந்த செயற்கைக்கோள் தற்போது பூமியின் வளிமண்டலத்தில் நுழையவுள்ளது.
அப்போது அது 1,006 துண்டுகளாக வெடித்துச் சிதறும். இதில் பெரும்பகுதி வளிமண்டலத்தில் நுழையும்போது எரிந்து சாம்பலாகிவிடும். இருப்பினும் 26 துண்டுகள் பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வெடித்து சிதறும் பாகங்கள் 150 கிலோ வரை எடை கொண்டவையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்போது விண்வெளியிலிருந்து கிளம்பும் என சரியாக ஆராய்ச்சியாளர்களால் கணிக்க முடியவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் பூமியில் விழும் என தெரிவிக்கின்றனர்.
செயல் இழந்த பல செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுற்றி வருகின்றன. இவை பூமியில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மீறி வளிமண்டலத்தில் நுழையும் செயற்கைக்கோள்கள் எரிந்து சாம்பலாகிவிடுகின்றன. அதையும் மீறி பூமிக்கு வரும் செயற்கைக்கோள்களை கடலுக்குள் விழச் செய்வது வழக்கம். ஆனால் யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோளில் எரிபொருள் இல்லை. இதனால் இதன்செயல்பாட்டைகட்டுப்படுத்த முடியாது என தெரிவிக்கின்றனர்.
யு.ஏ.ஆர்.எஸ்., செயற்கைக்கோளின் உடைந்த பாகங்கள் கடலில் விழ வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றால் வடக்கு கனடாவில் அல்லது தென் அமெரிக்காவின் தென்பகுதியிலும் விழ வாய்ப்புள்ளது. இதில் 3200ல் ஒரு பங்கு, மனிதர்கள் மீது விழும் அபாயமும் இருக்கிறது. இது விழும்போது 750 கி.மீ., சுற்றளவு வரை இதன் பாகங்கள் பூமியில் பரவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கம்ப்யூட்டர் மூலம் வடிவமைக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை வீசி தாக்கி விட்டு மீண்டும் திரும்புகின்றன. அதே போன்று டிரைவர் இல்லாமல் “ரிமோட் கண்ட்ரோல்” மூலம் இயங்கும் கார்களை தயாரிப்பதில் ஜெர்மனி விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரூ. 25 கோடி செலவில் கடந்த 4 ஆண்டுகளாக இந்த கார்களை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இதில் பல்வேறு குழுக்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து சிக்னல்களை கண் காணித்து இயங்கும் வகையில் கம்ப்யூட்டர் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் காரின் முன் பகுதியில் காமிரா மற்றும் லேசர் ஸ்கேனிங் கருவிகள் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன.
சோதனை ஓட்டத்தின் மூலம் இந்த காரின் செயல்பாடு பெர்லின் நகர வீதியில் நடத்தப்பட்டது. எதிர் காலத்தில் இக்கார் வீதிகளில் உலாவரும் என பெர்லின் பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு தலைவர் ராவுல் ரொஜாஸ் தெரிவித்தார். 1 1
இனி நீங்கள் தனியே முடிவெடுக்க வேண்டியதில்லை, மாறாக உங்கள் கூட்டத்திடம் ஆலோசனை கேட்டு கூட்டு முடிவெடுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது என்கிறது ஆஸ்க் மை மாப்.இதுவும் டிரைசைடர் போல முடிவெடுக்க ஆலோசனை கேட்கும் இணையதளம் தான். வடிவமைப்பு தவிர நோக்கத்திலும் உள்ளடக்கத்திலும் டிரைசைடருக்கு இதற்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடில்லை.
டிரைசைடர் போல இதிலும் ஆலோசனை தேவைப்படும் கேள்வியை டைப் செய்து பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நண்பர்களை கருத்து சொல்ல அழைக்கலாம். கேள்விகள் சிறு தடுமாற்றத்திலிருந்து மாபெரும் குழப்பம் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
என்ன புத்தகம் படிக்கலாம் என்பதில் துவங்கி யாரை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்னும் வாழ்க்கையை தீர்மானிக்கும் கேள்வியாகவும் இருக்கலாம்.
உண்மையிலேயே குழப்பத்தில் தடுமாறி யாராவது சரியான யோசனை சொல்லி வழிகாட்ட மாட்டார்களா என்னும் கேள்வியையும் கேட்கலாம். இல்லை மற்றவர்கள் என்ன தான நினைக்கின்றனர் பார்க்கலாம் என்னும் நோக்கத்திலான கேள்வியையும் கேட்கலாம்.
கேள்வியை கேட்டவுடன் அதற்கு நீங்கள் தீர்வாக கருதும் எண்ணங்களையும்(முடிவுகள்)குறிப்பிடலாம். நண்பர்கள் இந்த கேள்வியை படித்து விட்டு தங்களுக்கு எது சரியென படுகிறதோ அதில் வாக்களிப்பார்கள். எந்த முடிவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அதனை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
நண்பர்கள் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு தங்கள் யோசனைகளையும் தெரிவிக்கலாம். இந்த யோசனைகள் திறந்த மனதோடு நண்பர்களோடு ஒரு விஷயம் குறித்து கலந்துரையாடி தெளிவு பெறுவது போலவும் அமையலாம்.
சில நேரங்களில் நண்பர்களின் கருத்து முற்றிலும் புதிய கோணத்தை சுட்டிக்காட்டலாம்.புதிய வாசலை திறந்து விடலாம்.
ஆனால் நண்பர்களை ஒன்று திரட்டி ஆலோசனை நடத்துவது நடைமுறையில் மிகவும் சிக்கலானது. ஆஸ்க் மை மாப் சேவையோ இருந்த இடத்திலிருந்தே நண்பர்களுடன் கலந்தாலோசனை செய்ய உதவுகிறது.
இதுவா அதுவா என முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் போது, நடுநிலையான கருத்துக்கள் தேவைப்படும் போது, நேர்மையான யோசனைகள் உடனடியாக தேவைப்படும் போது என எப்போது வேண்டுமானாலும் இங்கு ஆலோசனை கேட்கலாம்.
டிரைசைடரில் பதிவு செய்யாமலேயே ஆலோசனை கேட்கலாம். இதில் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து கொண்ட பின் அவருக்கென்று தனி பக்கம் ஒதுக்கப்படும். அதில் கேள்விகளுக்கான ஆலோசனைகளை பார்க்கலாம். வாக்குகளை தெரிந்து கொள்ளலாம்.
நண்பர்களிடம் ஆலோசனை கேட்பது போலவே நீங்களும் நண்பர்களின் தடுமாற்றத்திற்கு யோசனை சொல்லலாம். டிவிட்டரில் செய்வது போல உங்களுக்கு ஆர்வம் உள்ள கேள்விகளை பின்தொடரலாம். பின்தொடரப்படும் கேள்விகளுக்கான சமீபத்திய யோசனைகளை உங்கள் பக்கத்திலேயே தெரிந்து கொள்ள முடியும்.
உண்மையிலேயே இந்த பின்தொடரல் சுவாரஸ்யமான விஷயம். உங்களை பாதித்த ஒரு கேள்விக்கு மற்றவர்கள் என்ன பதில் சொல்கின்றனர் என்று அறிய முடிவதும், ஈடுப்பாட்டை ஏற்படுத்தும் பிரச்ச்னை எப்படி முடிவுக்கு வருகீறது என்று தெரிந்து கொள்வதும் உயிரோட்டமானது தான்.
ஆர்வத்தை உண்டாக்கிய ஒரு கேள்வி எத்தகைய விவாத்தை உண்டாக்கி அதற்கான் தீர்வு எப்படி கருக்கொள்கிறது என்பது புதிய வெளிச்சத்தை பாய்ச்சலாம்.
ஆனால் இப்போதைக்கு இத்தகைய தீவிர விவாதம் நடப்பதாக தெரியவில்லை. ஆஸ்க் மை மாபில் கேட்கப்படும் கேள்விகளில் பல விளையாட்டுத்தனமாக இருக்கின்றன. சில வில்லங்கமாகவும் இருக்கின்றன. கேள்விகளை சுற்றி இதயபூர்வமான விவாதம் நடப்பதாகவும் தெரியவில்லை.
அறிமுக நிலையில் இருப்பதால் இவ்வாறு இருப்பாதாக கொள்ளலாம். இந்த தளத்திற்கு என்று மனம் திறந்து கேட்கவும் உள்ளன்போடு பதில் சொல்லக்கூடிய ஒரு துடிப்புள்ள சமூகமும் உருவானால் பல அற்புதங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
அதற்கான ஈர்ப்பு இந்த தளத்திடம் உள்ளது.ஆனால் அத்தகைய ஆதரவு கிடைக்கும் வரை இந்த தளம் தாக்குபிடிக்க வேண்டும். இணையதள வடிவில் மட்டும் அல்லாது செல்போன் செயலி வழி வழியிலும் இந்த சேவையை அணுகலாம். இணையதள முகவரி
17 வயது பள்ளி மாணவனை, 10 பெண்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பெண்களைக் கடத்திச் சென்று கற்பழிப்பதுதான் பெரும்பாலும் நடைபெறும் சம்பவமாகும். ஆனால் பப்புவா நியூ கினியா நாட்டில் மாணவனை, பெண்கள் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.
இது குறித்து அந்த நாட்டின் தெற்கு பிராந்திய போலீஸ் கமாண்டர் டெட்டி டெய் கூறியதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை மென்டியில் ஒரு பள்ளி மாணவனை பெண்கள் கும்பல் ஒன்று கத்தியால் தாக்கி கடத்திச் சென்றது.
இந்த செயலைச் செய்தவர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மாணவனை கத்தியால் தாக்கியுள்ளனர். மேலும், 4 பெண்கள் அவனுடன் பலவந்தமாக உடல் உறவு கொண்டுள்ளனர். மேலும் 6 பெண்கள், அவனை பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அவனுக்கு எய்ட்ஸ் தாக்கி விடுமோ என்று அஞ்சுகிறோம்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.
பிரித்தானியாவை சேர்ந்த மூதாட்டிகளில் ஒருவர் சாரா நெல் ஜோன்ஸ். இவருக்கு வயது 76. கின்னஸ் சாதனை ஒன்றுக்கு கடந்த வருடம் சொந்தக்காரி ஆனார். என்ன சாதனை தெரியுமா? உலகில் மிக வயது கூடிய சல்சா நடனக் கலைஞர் இவர்தான்.
பிரேஸிலை சேர்ந்த 90 வயதான நபர் ஒருவர் 50 பிள்ளைகளுக்கு தந்தையாக விளங்குகிறார்.
தனது பிள்ளைகளில் பலரின் பெயர் இதுவரை தனக்கு தெரியாதென்று கூறும் அவர் தனது பிள்ளைகள் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
விவசாயியான லூயிஸ் கொஸ்டா டீ ஒலிவேரியா எனும் இந்நபர் 4 மனைவிகள் மூலம் 50 பிள்ளகைளைப் பெற்றுள்ளார். இப்பெண்;களில் சகோதர்கள் இருவரும் அவர்களின் தாயும் அடங்குகின்றனர்.
'கடவுள் உலகில் படைத்த மிகச் சிறந்த விடயமென்றால் அது பெண்கள்தான்' என ஒலிவேரியா தெரிவித்துள்ளார்.
லூயிஸின் முதல் மனைவியான பிரான்ஸிகோவிற்கு 17 பிள்ளைகள். அவர் இறந்த பின் மரியா பிரான்ஸிகா டா சில்வா எனும் பெண் மூலம் மேலும் 17 பிள்ளைகள் பிறந்தனர். தற்போது பிரான்சிஸ்காவுக்கு 64 வயதாகிறது.
மரியா தனது பிள்ளைகளை பராமரிப்பதற்காக தனது சகோதரியான ஒசெலிடாவை வீட்டிற்கு அழைத்துவந்தார். ஆனால் ஒசெலிடாவுக்கும் லூயிஸ்க்கும் காதல் ஏற்படவே அவருக்கு லூயிஸ் மூலம் 15 பிள்ளைகள் பிறந்தன. பிரான்ஸிகா மரியா (தற்போது வயது 89) மற்றுமொரு குழந்தையை பெற்றெடுத்தார்.
இச்சகோதரிகளின் தாய் பிரான்சிஸ்கா மரியாவும் ஒலிவேரியாவிடமிருந்து தப்பவில்லை. அவருக்கு ஒலிவேரியா மூலம் ஒரு குழந்தை பிறந்தது. தற்போது பிரான்சிஸ்காவுக்கு 89 வயதாகிறது.
வறுமையின் காரணமாக ஒலிவேரியாவின் சில பிள்ளைகள் உயிரழந்தன. ஏனைய பிள்ளைகள் மூலமாக லூயிஸுக்கு 100 பேரப்பிள்ளைகளும் 30 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
'எனது பிள்ளைகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும். ஏனெனில் எப்போதும் நான் பெண்களுடன் உறவுகொள்வதில் விருப்பம் கொண்டேன். அவர்கள் அனைவரின் பெயரும் எனக்குத் தெரியாது.
நான் இப்போது உடல் ஆரோக்கியத்துடன் உள்ளபோதிலும் அரிதாகவே உறவுகொள்கிறேன் என்று லூயிஸ் தெரிவித்துள்ளார்.
லூயிஸின் இரண்டாவது மனைவியான மரியா தெரிவிக்கையில் லூயிஸுக்கு எப்போதும் உறவுகொள்வதுதான் பொழுதுபோக்கு. ஆனால் அவர் ஒருபோதும் தவறாக நடத்தியதில்லை. அவர் எப்போதும் அவரது பிள்ளைகளை நன்றாக பார்த்துக்கொண்டார். எங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை' என்று கூறியுள்ளார்.
பிரபல கவர்ச்சி நடிகை சோனா, சரண் தனது மார்புகளை நசித்து மானபங்கப்படுத்தினார் என்று குற்றம்சாட்டியிருந்தார். அது தொடர்பான சோனா பச்சை பச்சையான வார்த்தைகளால் வழங்கிய பேட்டி கீழே தரப்படுகிறது.
ஐஐஎம் மாணவி மாலினி முர்மு பேஸ் புக் சமூக நெட்வொர்க்கில் 727 நண்பர்களுடன், பெரும்பாலும் நிறுவன நண்பர்கள் மற்றும் கல்லூரியில் மாணவ ,மாணவியர்களுடன் இணைப்பில் இருந்தார் போல் தெரிகிறது . இதில் ,மாலினி தனது காதலன் அபிஷேக் தண் புண்படுத்தக்கூடிய செய்தியே பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் அவர் தனது காதலி "டம்ப்" என்று தெரிவித்திருந்தார் . இதனை தொடர்ந்து மாலினி பெங்களூர் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ. எம்) தனது விடுதி அறையில் அன்று மாலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் . .
அவர் இறப்பதற்கு முன் அவரது அறையில் வெள்ளை போர்டில் எழுதிஉள்ளார் அதில் "அவர் என்னை ஏமாற்றிவிட்டார் . இது நான் அவனை பழிவாங்க செய்வது." இந்நிலையில் ஐஐஎம் வெளியிட்ட அறிக்கை இன்று "பெங்களூர் போலீஸ் தற்கொலை வழக்கு செய்துள்ளனர் .செல்வி மாலினி முர்மு , 23, ஜாம்ஷெட்பூர் சேர்ந்தவர் . தனது பி டெக் முடிந்தவுடன் இன்போசிஸ் வேலை நிலையில், கடந்த ஜூன் ஐஐஎம்பி இருந்து வந்தவர் . நாங்கள் ஒரு இளம் பெண்ணின் பிரகாசமான வாழ்கையே இழந்துள்ளோம் .
[ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 09:43.32 AM GMT ]
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் இரண்டாவது அதிகூடிய புள்ளிகளைப் (194) பெற்ற முல்லைத்தீவு, நெத்தலியாறு தமிழ் மகா வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன், கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் காலில் விழுந்து வணங்குவதற்கு மறுப்பு தெரிவித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
வட மாகாணத்தின் கல்வி நிலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆளுமை விருத்தி தொடர்பாக யாழ் நூலக கேட்போர் கூடத்தில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற மாநாட்டிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் வட மாகாணத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களான ப.சேதுராகவன், ம. நிதர்ஷிகா ரமேஷ், சர்மிகா சர்வானந்தன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது ஏனைய மாணவிகள் இருவரும் அமைச்சரின் காலில் விழுந்து வணங்கிய போதிலும் சேதுராகவன் மாத்திரம் அமைச்சரின் காலில் விழ மறுப்பு தெரிவித்து அவ்விடத்திலிருந்து அகன்றான்.
அமைச்சரின் காலில் விழுந்து வணங்குமாறு மாணவனின் தந்தை, தாயார் வலியுறுத்திய போதிலும் அம்மாணவன் பிடிவாதமாக நின்றுகொண்டிருந்தான். இதனால் அமைச்சர் சங்கடத்துக்கு உள்ளான போதிலும் அவர், தொடர்ந்தும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.
இது குறித்து அம்மாணவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, 'நான் முல்லைத்தீவில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் கல்வி கற்றேன். முகாம்களில் இருந்து படித்துள்ளேன். நான் எனது தந்தை, தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன்' என கூறினான்.
இவ்வைபவத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர். ஜி.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் யாழ் மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக ஒரு பெண் பேய் உலவி வருவதாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது! பலரின் செல்போன்களிலும் இந்த பேய் வீடியோ காட்சிகள்தான் இப்போது முதலிடம்.
ஐடா ஸ்கடர் என்ற வெளிநாட்டுப் பெண் இந்தியா வந்தபோது, சரியான மருத்துவ வசதி இல்லாமல் பலர் மடிகிறார்களே என்ற நல்லெண் ணத்தில் 1901-ல் ஆரம்பிக்கப்பட்டதுதான் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை. இங்கு அனைத்து நோய்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதால், உலக அளவில் பிரபலம். எனவே, உள்ளே நோயாளிகளுக்குத் தங்க இடம் இல்லாதபோது, பெரும்பாலானோர் அருகில் இருக்கும் லொட்ஜ்களில் மாதக்கணக்கில் தங்கி சிகிச்சை பெற்றுச் செல்வார்கள்.
இந்த நிலையில்தான் இந்த பீதி! செக்யூரிட்டி ஒருவர், ''சார் இங்க ஆறு வருஷமா கான்ட்ராக்ட்ல வேலை செய்றேன். நீங்கள் கேள்விப்பட்டது சத்தியமா உண்மை. இப்பக்கூட எனக்கு கை நடுங்குது பாருங்க. ரெண்டு நாள் முன்னாடி, எங்க செக்யூரிட்டி ஒருத்தர் 'ஏ’ பிளாக்கில் டூட்டி பார்த்தார். ராத்திரி கீழே உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்கும்போது, யாரோ பின்னாடி தட்டின மாதிரி இருந்திருக்கு. திரும்பிப் பார்த்தா... யாருமே இல்ல. சாப்பிட்டுட்டுக் கை கழுவப் போனா... பக்கத்துல ஒரு வெள்ளை உருவம் மட்டும் நின்னுருக்கு. அவர், பயந்துபோய் 'யாரு... யாரு?’ன்னு குரல் கொடுத்து இருக்கார். அது பதில் சொல்லாம, அப்படியே மறைஞ்சிருச்சு. அதைப் பார்த்ததில் இருந்து, அவருக்குத் தொடர்ந்து ஜுரம். எவ்வளவோ மருந்து-மாத்திரைகள் கொடுத்தும், நிக்கலை. வேலைக்கும் வர முடியாமக்கிடக்கார்.'' என்றார் பயத்தோடு.
ஒரு வார்டுபாய் நம்மிடம், ''சார், ஒரு நாள் நான் ரத்த பாட்டிலை எடுத்துட்டுப் போயிட்டு இருந்தேன். அப்போ என்னை யாரோ கூப்பிடுறது மாதிரி இருந்தது. திரும்பிப் பார்த்தேன். யாருமே இல்லை. திடீர்னு, 'நில்லுடா’ன்னு ஒரு பெண் குரல் அதட்டலாக் கேட்க, பயந்து திரும்பினேன். ஒரு அழகான பொண்ணு, வெள்ளை டிரெஸ்ல தலையை விரிச்சுப் போட்டு நின்னது. என் பக்கத்துல வந்து, 'எனக்கு ரொம்பப் பசி! குடிக்க அந்த பாட்டில் ரத்தத்தைக் குடு’ன்னுச்சு. நான் திடுதிடுன்னு அந்த இடத்தைவிட்டு ஓடி வந்துட்டேன்...'' என்றார் இன்னும் பயம் விடுபடாதவராய்.
இந்தப் பேய் காட்சியை யாரோ வீடியோவாக எடுத்ததாக, பலரின் செல் போனிலும் உலவுகிறது. அந்த காட்சியைப் பார்த்தோம். சரியாகப் புலப்படாத வெள்ளை உருவம், ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு ஊடுருவிச் செல்வது போன்று இருக்கிறது. அதை கம்ப்யூட்டர் நிபுணர் ஒருவரிடம் காட்டினோம். ''இது ஏதோ கிராஃபிக்ஸ் வேலை. ஆனால், அங்குள்ள ஊழியர்களும் நோயாளிகளும் பேயை நேரில் பார்த்த தாகச் சொல்வதுதான் குழப்புகிறது!'' என்றார்.
மருத்துவமனை பி.ஆ.ர்.ஓ. துரை ஜாஸ்பர் பதறுகிறார்.''இது யாரோ சி.எம்.சி. மருத்துவ மனைக்கு அவப் பெயரை உண்டாக்கச் செய்த சதி வேலை. இது 100 சதவிகிதம் கிராஃபிக்ஸ்தான். இதனால், எங்கள் மருத்துவமனைக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை!'' என்கிறார் உறுதியாக.
மருத்துவமனையின் 'ஏ’ பிளாக் செக்யூரிட்டிகளிடம் கேஷ§வலாகப் பேச்சுக் கொடுத்தபோது, ''நைட் டியூட்டியில் இருக்கும்போது சிறிது கண் அயருவோம். அப்ப எங்களை யாரோ உசுப்பி விடுவது போல் தெரியும். பதறி எழுந்து பார்த்தால், யாருமே இருக்க மாட்டார்கள். இதை, இங்குள்ள பெரும்பாலான செக்யூரிட்டிகள் உணர்ந்துள்ளோம். இது புதிய சம்பவம் அல்ல. இப்போது வேலூரில் பெரும்பாலான வர்களின் செல்போன்களில் உலவிவரும் காட்சிகளைப் பார்த்ததும் எங்களுக்கே பேய் பயம் வந்துவிட்டது. ஆனா, இதுவரை அது எங்களை யாரையுமே ஒன்றுமே செய்தது கி¬டாது!'' என்று பேய்க்கு நற்சான்றிதழ் கொடுத் தனர்.
மொத்தத்தில், சிகிச்சை பெற வந்த நோயாளிகள், நோயைப்பற்றி பேசுவதைவிட... பேயைப்பற்றி பேசுவதுதான் அதிகமாக இக்கிறது!
Facebook தளம் என்பது இணையத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய தளம்.தற்போது பேஸ்புக்கில் இன்னும் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது புதிய இரண்டு வசதிகளை காணலாம். Friend Lists: இதன் மூலம் நாம் தேவையான நண்பர்களின் செய்திகளை மட்டும் படிக்க முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் நம் நண்பர்களை சரியான List க்குள் நாம் சேர்க்க வேண்டும்.
Facebook ஆனது Default ஆக சில லிஸ்ட் கொண்டு இருக்கும். உதாரணமாக பெங்களூர் என்று ஒரு லிஸ்ட் அமைந்து உள்ளது என நினைத்துக் கொள்வோம். இதன் மூலம் நான் பெங்களூரில் உள்ள நண்பர்களின் Status மட்டும் தனியாக பார்க்க முடியும். இது போலவே மற்ற எல்லாம். இவற்றை மாற்ற நினைத்தால் Listபக்கம் சென்று மாற்றலாம்.
இதே போல குறிப்பிட்ட list நண்பர்களிடம் மட்டும் கூட நீங்கள் உங்கள் Status செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். Subscribe Option: இதுவரை நண்பர்களின் செய்திகளை மட்டுமே நாம் படித்து வந்தோம். ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர், நடிகர், நடிகைகள் போன்று நம் நண்பர்களாக இல்லாதவர் செய்திகளையும் இனி பெற முடியும்.
இதற்கு அவர்கள் subscribe என்பதை Activate செய்து இருக்க வேண்டும் அவ்வளவே. அவர்கள் Profile க்கு சென்று நீங்கள் subscribe செய்ய வேண்டும்.
நீங்கள் இதை activate செய்ய நினைத்தால் https://www.facebook.com/about/subscribe இங்கு செல்லவும்.
இன்னொரு விஷயம் ஏற்கனவே உங்களுக்கு நண்பர்களாக இருப்பவர்களுக்கு நீங்கள் subscribe செய்துள்ளதாக இருக்கும். உங்களை யாரெல்லாம் subscribe செய்துள்ளார்கள் என்று உங்கள் Profile பக்கத்தில் உங்கள் புகைப்படத்திற்கு கீழ் உள்ள subscribers Button மூலம் அறியலாம்
இணையதள வடிவமைப்பாளர்களுக்கும் புதிதாக இணையதளம் உருவாக்க விரும்புபவர்களுக்கும் சாம்பிள் Content கொடுத்து உதவுகிறது ஒரு தளம்.இணையதள உருவாக்க வடிவமைப்புக்கு சமயத்தில் என்ன Content நம் தளத்தில் கொடுக்க வேண்டும் என்று தெரியாது, அப்படி Content இல்லாத நேரத்தில் வடிவமைப்புக்கு இலவசமாக சாம்பிள் Content கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று எத்தனை Paragraphs வேண்டும் என்பதை எண்ணிக்கையில் கொடுத்து Give me bacon என்ற பொத்தானை சொடுக்கினால் போதும், அடுத்து வரும் திரையில் நமக்கு சாம்பிள் Content கொடுக்கும்.
இடத்தை நிரப்பி பார்ப்பதற்கு ஏதாவது வேண்டும் என்று தேடுபவர்களுக்கு ஒவ்வொரு முறை இத்தளத்திற்கு சென்று சாம்பிள் கேட்கும் போது ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு தகவலைக் கொடுக்கும்.
நமக்கு தேவையானது வரும் வரை நாம் இத்தளத்தில் சென்று தேடலாம். இணையதள முகவரி
இணையத்தில் பிரபல வீடியோ தளமான யூடியுப் பற்றி நாம் அறிந்திருப்போம். அந்த தளத்தில் லட்சக்கணக்கான வீடியோக்கள் குவிந்து காணப்படுகின்றன.இதில் வாசகர்களும் தங்கள் வீடியோக்களை பதிவேற்றம் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. இந்த தளத்தில் வீடியோ கோப்புகளை மட்டுமே பகிர முடியும். ஆனால் உங்களிடம் உள்ள ஓடியோவை மற்றவர்களுடன் யூடியூபில் பகிர ஒரு சுலபமான குறுக்கு வழி.
இதற்கு முதலில் இந்த தளத்தில் Mp3tou செல்லுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள Choose Background Image பகுதியில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
அதில் உங்கள் வீடியோவில் தெரியவேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
புகைப்படம் அதிகபட்சம் 5MB மேல் இருக்க கூடாது JPEG கோப்பாக இருக்க வேண்டும்.
புகைப்படத்தை தெரிவு செய்தவுடன் அந்த புகைப்படம் பதிவேற்றமாகி அந்த தளத்தில் சேர்ந்து விடும்.
அடுத்து Step 2 உள்ள Choose backsound file என்பதை கிளிக் செய்து உங்கள் MP3 பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதிக பட்சம் 35MB தான் இருக்க வேண்டும்.
MP3 கோப்பின் அளவை பொருத்து அது பதிவேற்றமாக நேரம் எடுக்கும் அதுவரை பொறுத்திருக்கவும். பதிவேற்றமாகி முடிந்ததும் ஒரு விண்டோ தோன்றும். அதில் உள்ள Go Create என்பதை கிளிக் செய்யவும.
Go Create கிளிக் செய்ததும் உங்கள் வீடியோ ரெடியாகும். அதில் இரண்டு லிங்க் இருக்கும் Download it என்பதை கிளிக் செய்தால் வீடியோ உங்கள் கணணியில் தரவிறக்கமாகி விடும்.
தரவிறக்கம் செய்த பிறகு யூடியுப் தளத்திற்கு சென்று upload பட்டனை அழுத்தி வீடியோவை யூடியூபில் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது இந்த தளத்தில் உள்ள Upload it to youtube லிங்கை கிளிக் செய்து நேரடியாக யூடியுப் தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
ஆனால் அந்த முறை பாதுகாப்பானது இல்லை என்பதாலும் நமது மின்னஞ்சல் முகவரிக்கு ஸ்பாம் மெயில்கள் அனுப்பப்படும் ஆபத்தும் உள்ளதால் அந்த முறையை உபயோகிக்க வேண்டாம்.
பட்டாம் பூச்சி
ரெக்கை கட்டி பறந்தது
பள்ளி பருவத்து
துள்ளி திரிந்த காலம்
வட்ட பொட்டு
வகிடு பிரித்த கூந்தல்
குட்டை பாவாடை -அவள்
குமரியான நாட்பொழுது..
அரும்பு மீசை
ஆசைகள் ஆயிரம் சொல்ல
விரும்பதா -அவள்
இதயமென ஏங்கிய நாட்கள்
அர்த்தம் இன்றி
அவள் பாதங்களின்
சுவடுகளாய் பதிந்து
நீண்டுபோன நினைவலைகள்...
கொலுசு சத்தங்கள் வைத்து
குறி சொன்ன காலம்
குமரிகளுக்காக -குழுவாக
மோதிக்கொண்ட வேதனைகள்
என்னதான்
ஏங்கி தவித்தாலும்
திரும்புமா அந்த
மத்தாப்பு வீசிய காலம்....
தற்கால சூழ்நிலையில் அதுவும் யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் பாடசாலைகளை விட தனியார் கல்வி நிலையங்களிலேயே மாணவர்களும் பெற்றோர்களும் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இதனைக் காரணமாகக் கொண்டு தனியார் கல்வி நிலையங்களில் மாணவர் கூட்டம் அலைமோதுகின்றது.
ஆனால் அங்கு நடத்தப்படுகின்ற பாடங்கள் என்ன? அப் பாடங்களைக் கற்பிப்பதோடு மாணவர்களுக்குப் புகட்டப்படும் ஆபாசக் கருத்துக்கள் என்ன? இதனால் ஏற்படக் கூடிய கலாசாரச் சீரழிவுகள் என்ன என்பது தொடர்பில் பெற்றோர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தமது பிள்ளைகள் பரீட்சையில் சிறந்ததொரு புள்ளிகளைப் பெற வேண்டும், வாழ்க்கையில் சிறந்ததொரு நிலையை அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடும் இலட்சியத்தோடும் பெற்றோர்கள் செயற்படுவதால், ஏற்படுகின்ற பின்விளைவுகளை அவர்கள் சிந்திப்பதாக இல்லை.
இதனை அடிப்படையாகக் கொண்டு தனியார் கல்வி நிலையங்களின் பணம் பறி கொள்ளையும் தொடர்கின்றது.
இது இவ்வாறிருக்க தமது பாடங்களுக்கு அதிகளவான மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக இடையிடையே ஆபாச வார்த்தைகளையும், கதைகளையும் கூறி மாணவர்கள் மனதில் ஆபாச எண்ணங்களை விதைக்கின்றனர் இந்த தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள்.
அங்கு கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வயது எதற்கும் அஞ்சாத, யாருடைய கருத்துக்களுக்கும் மதிப்பளிக்காத வயதுடைய மாணவர்கள்.
இவர்கள் மத்தியில் இவ்வாறான ஆபாச வார்த்தைகள் ஆழமாகப் பதிய, அடுத்த மணித்தியாலயத்தில் அரங்கேறுகிறது கலாசாரச் சீரழிவு.
என்ன செய்வது? பாடம் புகட்டும் ஆசானின் ஆபாச வார்த்தைகளைக் கேட்டு தமிழர் கலாசாரத்தைத் தாரைவார்க்கிறது மாணவர் கூட்டம்.
இவ்வாறான ஆசிரியர்களின் செயற்பாடுகளை நிறுத்துவது தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களின் கட்டாய பொறுப்பாகும்.
இல்லை என்றால் எதிர்கால இளைஞர், யுவதிகளின் வாழ்க்கை கேள்விக் குறியாகி விடுவதை யாராலும் தடுக்க முடியாததாகி விடும்.
தீபாவளிக்கு வெளியாகவுள்ள ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 7 ஆம் அறிவு படத்திற்காக ஆயிரம் நடனக்கலைஞர்களுடன் சென்னையின் பிரதான வீதியில் நடனமாடியுள்ளார் நடிகர் சூர்யா.சூர்யாவின் ஆரம்பபாடலுக்காகவே இந்த பிரமாண்ட ஏற்பாடு. மக்களுடன் மக்களாக இணைந்து மக்கள் சனநெரிசல் அதிகமாக உள்ள பகுதியான ரங்கநாதன் வீதியில் இப்பாடல் காட்சியினை உயிரோட்டமாக 10 நிமிடங்களில் படமாக்கியுள்ளனர்.
இப்பாடலுக்கான நடன அமைப்பை நடன இயக்குனர் சோபி மாஸ்டர் அவர்கள் சிறப்பாக அமைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு விளையாட்டுச் சுற்றுலா மேற்கொண்டு வந்திருக்கும் ஆஸ்திரேலிய கிறிக்கெற் அணியினர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருக்கின்ற சிறுவர்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.
சிறுவர்களின் சுக நலன்களை மிகுந்த அக்கறையுடன் விசாரித்தனர். அத்துடன் இவ்வீரர்கள் கண்டியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றுக்கும் நேரில் விஜயம் செய்து உள்ளனர்.
அங்குள்ள சிறுவர்களுடன் சந்தோசமாக பொழுதை போக்கினர்.
உலகில் முதன் முறையாக குளோனிங் முறையில் ஆடுகள் உருவாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது பூனைகள் உருவாகியுள்ளன.அமெரிக்காவில் மின்னெ சோபாவில் உள்ள மயோ கிளினிக் மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் இச்சாதனை படைத்துள்ளனர். இது மனிதர்களை தாக்கும் உயிர்க்கொல்லியான "எய்ட்ஸ்" நோய்க்கு இணையானதாகும்.
இந்த பூனைகளின் பச்சை நிறம் ஒளிரும் ஜெல்லி மீன்களில் இருந்து எடுத்து செலுத்தப்பட்ட மரபணுவாகும். இதுதான் பூனைகளின் உடலில் பச்சை நிறத்திலான புரோட்டீனை உருவாக்கி ஒளிர செய்கின்றன.
இந்த பூனைகள் மரபணு மாற்றப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள பெரும்பாலான மரபணு குரங்கில் இருந்து எடுத்து செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு டிரிம்ஷிப் என்று பெயர். இவை விலங்குகளை தாக்கும் எப்.ஐ.வி எனப்படும் வைரஸ் தொற்றுநோயில் இருந்து இவற்றை பாதுகாக்கும்.
குளோனிங் முறையில் 3 பூனைகள் பிறந்துள்ளன. அவற்றுக்கு டிஜிகேட் 1, டிஜிகேட் 2, டிஜிகேட் 3 என பெயரிட்டுள்ளன. அவை பச்சை நிறத்தில் உள்ளன. இந்த ஆராய்ச்சியின் மூலம் மனிதர்களை எய்ட்ஸ் நோயில் இருந்து காப்பாற்றும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பூனைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள மரபணுக்களால் அவற்றுக்கு எப்.ஐ.வி வைரஸ் நோய் தாக்கும் வாய்ப்பு இல்லை. அதுபோன்று எச்.ஐ.வி வைரஸ் கிருமிகளில் இருந்து மனிதர்களை பாதுகாக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது.
ஓன்லைனில் பலதரப்பட்ட வீடியோக்களை பார்ப்பதற்கு சிறந்த தளமாக YOUTUBE தளம் விளங்குகிறது.அத்துடன் ஒவ்வொரு வீடியோ காட்சிகளையும் அதன் தொடக்க நேரம், முடிவு நேரம் என்பவற்றை மாற்றியமைத்து இணைக்க முடியும்.
அத்துடன் நீங்கள் இணைத்துக் கொண்ட வீடியோக்களை பகிர்வதன் மூலம் மற்றவர்களும் பார்வையிட வசதியளிக்கிறது இந்த தளம்.
இந்த தளத்தின் சேவையினை பெற இந்த தளத்தில் உங்களை பதிவு செய்ய வேண்டும். இணையதள முகவரி
நினைத்தவுடன் நன்றி சொல்ல உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.உடனடியாக நன்றி சொல்வதை ஊக்குவிப்பதாக அந்த தளம் உற்சாகம் அளிக்கிறது.நன்றி நவிலல் என்பது தனிப்பட்ட விஷயம்.எப்போது,யாருக்கு நன்றி சொல்வது என்று அவரவருக்கு தெரியாதா/இதற்காக எல்லாம் ஒரு இணைய தளமா என்று கேட்கலாம்?
ஆனால் எல்லாவற்றையும் இணையமயமாக்கி வாழ்க்கையை மேலும் எளிமையாக்கும் பல்வேறு இணைய சேவைகளின் வரிசையில் நன்றி சொல்வதையும் சுலபமாக்கி தரும் இந்த தளம் இணைய யுகத்தில் மிகவும் இயல்பானதே என்றே சொல்ல வேண்டும்.
தீபாவளி வாழ்த்துக்களையும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் சொல்ல வாழ்த்து அட்டைகள் இருப்பது போல தேங்க்யூஸ் என்னும் இந்த தளம் நன்றி சொல்வதற்காக அழகான அட்டைகளை உருவாக்கி வைத்திருக்கிறது.
நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் உடனடியாக நன்றி சொல்லுங்கள் என்று உற்சாகப்டுத்துகிறது இந்த தளம். இவ்வளவு ஏன் பிரபலங்களுக்கும், உங்கள் வாழ்க்கையின் சிறப்பான நபர்களுக்கும் நன்றி தெரிவியுங்கள் என்கிறது.
அதுவும் சரி தான் என்று ஒப்பு கொண்டு நன்றி நவிலலுக்கு தயாராகி விட்டீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் நன்றி குறிப்பை உருவாக்கி கொள்ள வேண்டியது தான்.
நன்றியை உருவாக்குங்கள் என்னும் பகுதியில் கிளிக் செய்தால் ஒரு கடித வாசகம் வந்து நிற்கிறது. நன்றிக்கான உடனடி வாசக அமைப்பான இதில் கோடிட்ட இடத்தை நிரப்புக என்பது போல இடை இடையே காலி இடம் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதில் நன்றிக்கு உரியவரின் பெயரையும்,நன்றி பெருக்கிற்கான காரணத்தையும், மேலும் சில விவரங்களையும் பூர்த்தி செய்து நன்றி செய்தியை தயார் செய்து விடலாம்.
ஆக யாருக்கு நன்றி சொல்வது என தீமானித்தால் போதும், எப்படி சொல்வது, எந்த வாசகங்களை எழுதுவது என்றெல்லாம் யோசித்து குழம்ப வேண்டாம். அதற்காக என்றே அழகான நன்றி படிவத்தை இந்த தளம் தயாராக வைத்திருக்கிறது.
நன்றி படிவத்தை பூர்த்தி செய்த பின் தான் இன்னும் சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. நண்பருக்கா, உறவினருக்கா, சக ஊழியருக்கா, யாருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்பதையும், நன்றி உணர்வின் வெளிப்பாடா, பரிசளிப்பா எந்த வகையை சேர்ந்தது என்பதையும் சுட்டிக்காட்டும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பொருத்தமானவற்றை கிளிக் செய்த பின் நன்றி சொல்பவரின் புகைப்படத்தையும் இனைக்கலாம். நன்றி சீட்டுக்கான விதவிதமான எழுத்துரு வடிவங்களும் இருக்கின்றன. அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த எழுத்துருக்கள் கைப்பட கடித்தம் எழுதியது போனர உணர்வை தர வல்லவை.
நன்றி குறிப்பை தயார் செய்த பின் பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் உரியவருக்கு அனுப்பி வைக்கலாம்.இமெயில் மூலமும் அனுப்பலாம். யோசித்து பார்த்தால் நாம் பலருக்கு நன்றி கடன்பட்டிருப்பது புரியும். பல நேரங்களில் அவற்றை வெளிப்படுத்தவும் செய்திருப்போம். சில நேரங்கள் தள்ளிப்போட்டிருப்போம். மறந்திருப்போம். சொல்லாமல் விட்டிருப்போம்.
ஆனால் நன்றி சொல்ல நினைத்ததும் அதனை செய்து முடிக்க இந்த தளம் உதவுகிறது. அதோடு யாருக்கெல்லாம் நன்றி சொல்லலாம் என யோசிக்கவும் வைக்கிறது. எதிர்பாராத நேரத்தில் லிப்ட் கொடுத்து உதவிய நண்பருக்கி நன்றி சொல்லலாம்.
நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்த நண்பருக்கு நன்றி சொல்லலாம்.காலையில் அத்தனை அவசரத்திலும் புன்னகையோடு வழியனுப்பும் மனைவிக்கு நன்றி சொல்லலாம்.
நண்பர்கள் இந்த நன்றி செய்தியை பார்த்து வியந்து மகிழ்வார்கள் அல்லவா?அதிலும் மோசமான மனநிலையில் இருக்கும் போது இந்த நண்றி செய்தி எட்டிப்பார்த்தால் மனது லேசாகி விடாது?
நன்றி என்பது ஒரு நல்ல உணர்வு அதை தள்ளிப்போடாமல் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கும் அன்பு பெருகட்டும். இணையதள முகவரி
இசைக்காக ஸ்பாட்டிபை செய்ததை இலக்கியத்திற்காக செய்ய வந்திருக்கிறது என்னும் வரணனையோடு அறிமுகமாகியிருக்கிறது 24 சிம்பல்ஸ் இணையதளம்.இலக்கியத்திற்கான ஸ்பாட்டிபை என்றும் சொல்லப்படக்கூடிய இந்த தளம் ஸ்பாட்டிபை எப்படி பாடல்களை கேட்டு ரசிக்க உதவுகிறதோ அதே போல புத்தகங்களை படிக்க உதவுகிறது.
புத்தகங்களை படிக்க உதவும் இணையதளங்கள் ஏற்கனவே ஏராளமாக உள்ள நிலையில் இதில் என்ன புதுமை இருக்கிறது என கேட்கலாம். இந்த தளத்தில் புத்தகங்களை தரவிறக்கம் செய்யாமலேயே படிக்கலாம் என்பதே விஷயம்.
பொதுவாக இணையத்தில் புத்தகங்களை இபுக் வடிவிலோ அல்லது பிடிஎப் உள்ளிட்ட கோப்பு வடிவிலோ தான் படிக்க முடியும். அநேகமாக அவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தரவிறக்கம் செய்யாமல் புத்தகங்களை படிப்பது மிகவும் கடினம். தரவிறக்கம் செய்வது என்பது சில நேரங்களில் புத்தகங்களை வாங்குவதையும் குறிக்கும். அதிலும் குறிப்பாக புதிய புத்தகங்கள் மற்றும் காப்புரிமை சிக்கல் உள்ள புத்தகங்களை அதற்குறிய கட்டணம் செலுத்தியே இபுக் வடிவில் பெற வேண்டும்.
இணையத்தில் இலவசமாக படிக்க கிடைப்பவை பெரும்பாலும் காப்புரிமையில் இருந்து விடுவிக்கப்பட்ட புத்தகங்களே. புதிய புத்தகங்கள் சுடச்சுட தேவை என்றால் வாங்குவதை தவிர வேறு வழியில்லை.
ஆனால் பெரும்பாலான பதிப்பாளர்கள் இன்னும் புதிய புத்தகங்களை இபுக் வடிவில் வெளியிட விருப்பம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். இபுக் அச்சு வடிவிலான விற்பனையை பாதிக்கும் என்றும் காசு கொடுக்க மனமில்லாத இலவச வாசிப்பை ஊக்குவிக்கும் என்ற அச்சமே இதற்கு காரணம். அதோடு காப்புரிமை சிக்கலும் இருக்கிறது.
இசை துறையிலும் இந்த பிரச்சனை இருக்கிறது. சொல்லப்போனால் இசை துறையில் தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே பெரும் போரே நடந்தது. புதிய பாடல்களை சீடியில் வாங்குவதை விட இணையம் வழியே தரவிறக்கம் செய்து கொண்டு தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் வழக்கம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்ததால் விற்பனையும் வருவாயும் பாதிக்கப்பட்ட நிலையில் இசை தயாரிப்பு நிறுவனங்கள் அவர்கள் மிது காப்புரிமை போர் தொடுத்தது.
அனுமதி இல்லாமல் பாடல்களை தரவிறக்கம் செய்வது சட்ட விரோதமாக கருத்தப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டன. இந்த போர் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
தரவிறக்க யுகம் இசை தயாரிப்பு நிறுவனங்களை இல்லாமல் செய்துவிடும் என்பதால் தொழில்நுட்பம் ரசிகர்களுக்கு திறந்து விட்ட வாயில்களுக்கு பூட்டு போடுவதில் மும்முரமாக இருக்கின்றன.
இதனிடையே ஐடியூன்ஸ் அறிமுகமானது. காப்புரிமை சிக்கல் இல்லாமல் புதிய பாடல்களை கட்டணத்திற்கு தரவிறக்கம் செய்து கொள்ள ஆப்பிளின் இந்த சேவை வழி செய்தது. இதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை.
இந்த நிலையில் தான் ஸ்வீடனில் இருந்து ஸ்பாட்டிபை உதயமானது. இந்த தளம் சந்தா அடிப்படையில் புதிய பாடல்களை தரவிறக்கம் செய்யாமலேயே கேட்டு ரசிக்க வழி செய்தது.
அதாவது இந்த தளம் பாடல்களை ஸ்டிடிமிங் முறையில் ஒலிபரப்பி கொண்டே இருக்கும். உறுப்பினர்கள் அதனை இணையத்தில் கேட்டு மகிழலாம். தரவிறக்கம் செய்யவும் முடியாது. மற்றவர்களோடு பகிரவும் முடியாது. பாடல்களை கிளிக் செய்தால் அவரை ஒலிபரப்பாகும், கேட்டு ரசிக்கலாம்.
காப்புரிமை உள்ள பாடல்களை கூட ஸ்பாட்டிபை அனுமதி பெற்று இந்த தளத்தில் வழங்குகிறது. ஆனால் அதனை கேட்டு ரசிக்க விளம்பரங்களை பொருத்து கொள்ள வேண்டும். விளம்பரம் வேண்டாம் என்றால் கட்டண சேவைக்கு போக வேண்டும்.
ஸ்வீடனில் துவங்கி ஐரோப்பாவில் பிரபலமான இந்த சேவை சமீபத்தில் அமெரிக்காவிலும் அறிமுகமானது. ஸ்பாட்டிபை போலவே 24 சிம்பல்ஸ் புத்தகங்களை ஸ்டிரிமிங் செயது இணையத்திலேயே படிக்க உதவுகிறது.
புதிய புத்தகங்களை கூட இதன் முலம் இணையத்திலேயே படிக்கலாம். தரவிறக்கம் செய்து படிக்க முடியாது. இலவசமாக படிக்க வேண்டும் என்றால் விளம்பரங்கள் இடம் பெற்றிருக்கும் இல்லை என்றால் சிறப்பு கட்டண சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். இபுக் சாதனங்களிலும் படிக்கும் வசதி உண்டு.
புதிய புத்தகங்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவையில்லாமல் அதெ நேரத்தில் காப்புரிமை பிரச்ச்னை இல்லாமல் படிக்க இந்த சேவை மிகவும் ஏற்றது. புத்தக பிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளது.
இப்போதைக்கு ஸ்பானிஷ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் மட்டுமே கிடைக்கின்றன. அதிலும் ஸ்பானிஷ் மொழி புத்தகங்களே அதிகம் உள்ளன. விரையில் மற்ற மொழிகளும் சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் புத்தகங்களை அப்படியே இணையத்தில் இருந்தபடியே படிப்பதோடு அவற்றை பேஸ்புக் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.
அதே போல நண்பர்கள் படித்து கொண்டிருக்கும் புத்தகத்தையும் பார்க்கலாம். இன்னும் ஒரு படி மேலே சென்று புத்தகத்தில் நாம் படித்த பகுதியில் விமர்சன குறிப்புகளை எழுதி அதையும் பகிர்ந்து கொள்ளலாம். இணையதள முகவரி
அஜித் குமார் சிறந்ததொரு மோட்டார் ஓட்டப்பந்தய வீரர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். அவருக்கு வாகனங்களின் மேலும் அதை ஓட்டுவதிலும் எப்போதுமே ஒரு அலாதி பிரியம் இருக்கும்.
வில்லன் திரைப்படத்தில் கூட ஜப்பானில் இருந்து பிரத்தியோகமான ஒரு மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்திருந்தார். இங்கே பாருங்கள் Boomerang விளையாட்டில் எப்படி சர்வசாதாரணமாக செயற்படுகிறார் என்று
அவ்வளவு சினிமா பிஸியிலும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது சூர்யாவிடமிருந்து. என் படம் ரிலீஸ் ஆவுது. கண்டிப்பா பாருங்க என்று அதில் செய்தி வந்திருந்தால், இந்த செய்திக்கு இடம் இல்லை. ஆனால் வந்தது அது அல்ல. வேறு…
ஹாய் நான் சூர்யா. இந்த குறுந்தகவலை படிச்சுட்டு உங்க நண்பர்களுக்கும் ஃபார்வேடு பண்ணுங்க என்று அறிமுகமாகிறார்.
அதன்பின் எழுதப்பட்டிருப்பதுதான் இந்த பிட் செய்தியிலிருக்கும் பிரதான விஷயம். வசதியின்மை காரணமாக தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிற மாணவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும். உங்கள் கல்வி தொடர நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு எழுதப்பட்டுள்ள அந்த தகவலில் சூர்யாவினால் நடத்தப்படும் அகரம் பவுண்டேஷன் நிர்வாகியின் தொலைபேசி எண் தரப்பட்டுள்ளது. அது 9841091000.
ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சொற்களை ஆரம்பகாலங்களில் நாம் கற்றதுண்டு. தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் அந்தக் கல்வி முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. இணையம், சமூக வலையமைப்புகள் என உலகம் மற்றுமொரு பரிணாமத்துக்குள் பயணித்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் இப்படித்தான் விரும்பிப் படிப்பார்கள் என்பதை சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டதையே இங்கு காண்கிறீர்கள்.
முக பக்கத்தில் தற்போது youtube வீடியோ மற்றும் mp3, Radio இசையினை நேரடியாக பகிரவும், கேட்கவும் +music வசதியளிக்கிறது.இந்த வசதியினை பெற + music இணை உங்கள் கூகுள் குரோம் உலாவியில் நிறுவிக் கொள்ள வேண்டும். இப்போது உங்கள் கூகுள் குரோம் உலாவியின் வலது பக்க மேல் மூலையில் ஒரு ஐகான் தோன்றும்.
அதனை கிளிக் செய்து நீங்கள் பாடல்களை தேடி உங்கள் உலாவியில் கேட்க முடியும், இப்போது உங்கள் முகப்பக்கத்தினை கூகுள் குரோம் உலாவியில் திறந்தால் உங்கள் முகப்பக்கத்தில் +music சேர்த்துள்ளதை காணலாம்.
அதனை கிளிக் செய்தால் இசையினை தேடுவதற்கான பாக்ஸ் தோன்றும். அதிலே YOUTUBE மற்றும் MP3, RADIO இசையினை தேடி பெறலாம். இப்போது ADD என்பதை கிளிக் செய்வதன் மூலம் YOUTUBE வீடியோக்களை நேரடியாக பகிரவும் முடியும்.
நாம் கூகுள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்டுமானால் அவர்கள் ஓன்லைனில் visible இல் இருந்தால் மட்டுமே முடியும்.அவர்கள் invisible இல் இருந்தால் சாட் செய்ய முடியாது என நினைக்கிறீர்களா? முடியும். invisible ஆனால் online இல் இருந்தால் அவர்களை எளிமையாக கண்டறியலாம். அதற்கு நீங்கள் GTALK ஐ install செய்திருக்க வேண்டும்.
இதனை நிறுவிய பின் GTALKஇல் INVISIBLEஇல் இருப்பவர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக xxx@gmail.com என்ற மெயில் ஐடியை வைத்துக் கொள்வோம். அந்த ஐடியில் கிளிக் செய்து தனி windowஆக ஓபன் செய்த பின்னர் அங்கு வலது மேல் மூலையில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்த பின்னர் go off the record என்பதையும் கிளிக் செய்யவும்.
இப்போது சாட் பாக்சில் xxx is offline. You can still send this person messages and they will receive them the next time they are online என காட்டும். இதை பார்த்தால் அந்த ஐடி offline இல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் onlineஇல் invisible ஆக இருக்கிறாரா என்பதை அறிய ஒரு hai good morning என என்டர் செய்து பார்க்கலாம். கீழே xxx@gmail.com is offline and can't receive messages right now என்ற செய்தி வந்தால் அந்த ஐடி உண்மையிலே offlineஇல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.
மேலே குறிப்பிட்டதை போன்ற செய்தி வரவில்லை என்றால் அவர் onlineஇல் ஆனால் invisibleஇல் இருக்கிறார். எனவே அந்த செய்தி காட்டவில்லை. அப்புறமென்ன உங்கள் சாட்-க்கு பதில் வந்தால் உங்கள் சாட்டை தொடரலாம். இணையதள முகவரி
, அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கமரா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த கமராவின் ஒளிக்கற்றைகளை முகத்தில் ஒளிரச் செய்வதன் மூலம் நபர் ஒருவர் பொய் சொல்கின்றாரா அல்லது மெய் சொல்கின்றாரா என்பதனை கண்டு பிடிக்க முடியும்.
அதி நவீன தேர்மல் இமாஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய கணனி முறைமையின் மூலம் இந்த கமரா இயங்குகின்றது.
இந்த அதி நவீன கருவி பாதுகாப்பு தரப்பினருக்கு மிகவும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கமராவின் மூலம் மூன்றில் இரண்டு வீதமான நபர்களின் முக பாவனையின் அடிப்படையில் உண்மை பேசுகின்றார்களா என்பதனை கண்டறிய முடியும் என பிரித்தானிய விஞ்ஞானி ஹசன் உகேய்ல் தெரிவித்துள்ளார்.
பிரட்போர்ட் மற்றும் அப்ரிஸ்ட்விச் ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்களினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னர் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கண் அசைவு, நகம் கடித்தல், உதடுகளை குவித்தல், மூக்கை சுருக்குதல், பலமாக மூச்சு விடல் உள்ளிட்ட பல்வேறு முக உணர்வு வெளிப்பாடுகளைக் கொண்டு நபர்கள் உண்மை பேசுகின்றார்களா அல்லது இல்லையா என்பதனை கண்டு கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
மைக்ரோசொப்ட்டுடன் இணையும் செம்சுங்?
தென்கொரிய நிறுவனமான செம்சுங் மற்றும் மைரோசொப்ட் நிறுவனங்கள் இணைந்து புதிய டெப்லட் கணனியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்புதிய கணனியானது மைக்ரோசொப்டின் விண்டோஸ் 8 இனைக் கொண்டியங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது இம்மாதம் 13- 16 வரையான திகதிகளில் நடைபெறவுள்ள (Microsoft's BUILD developers ) மாநாட்டில் அறிமுகம் செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
செம்சுங் கூகுளின் அண்ட்ரோயிட் இயங்குதளத்தினையே தனது டெப்லட் கணனிகளில் உபயோகித்து வந்தது.
இம்முறை விண்டோஸ் பாவனையாளர்களைக் கருத்திற்கொண்டு இதனை செம்சுங் உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காலத்தின் கோலத்தால் உலகம் சந்திக்கும் விந்தைகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. புதியஉலகத்தின் புதுமை விரும்பிகளுக்காக வருகிறது இன்னுமொரு வினோத தகவல்.
குழந்தை பிறந்தால் அதற்கு முதல் மருந்தும் உணவும் தாய்ப்பால்தான் என்று கூறுவார்கள்… ஆனால் கம்போடியாவில் 20 மாதக்குழந்தை நேரடியாக பசுவிடம் இருந்து மடிப்பால் உறிஞ்சிக்குடிக்கும் சம்பவம் அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:- கம்போடியாவில் பிறந்தது இந்த 20 மாதங்களே ஆனது ” தா சோபட்” எனும் குழந்தை.
இதனுடைய பெற்றோர்கள் வேலை தேடுவதற்காக தமது கிராமத்தினை விட்டு ஜூலை மாதம் தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
செல்லும் போது தனது 20 மாதமான குழந்தையை தங்களது பெற்றொருடன் விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதன் பின்னர் குறித்த குழந்தை அங்குள்ள பசுவின் கீழ் தானே சென்று அதன் மடியினை கவ்வி பால் அருந்தியுள்ளது.
பசுவும் தாய்மைக்கு பறைசாற்றும் முகமாக எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படுத்தாமல் குழந்தைக்கு பால் கொடுத்து வருகின்றது.
தமது பேரக்குழந்தையின் செயற்பாட்டை கண்ட ” செய்ம் றீப்” இதை கண்டித்துள்ளார். இருந்தும் குழந்தை தொடர்ச்சியாக அடம்பிடித்து மறுத்துள்ளது.
எனவே குழந்தையை அப்படியே விட்டுள்ளார்கள். எனினும் இதுபற்றி கருத்து தெரிவித்த குழந்தையின் தாத்தா பாட்டி குழந்தை தனது மடிப்பாலை குடிப்பது பற்றி பசு கவலைப்படவில்லை இருந்தாலும் குழந்தையின் ஆரோக்கியத்தை நினைக்கும் போது எங்களுக்கு கவலையாக இருக்கிறது என்றார்கள்.
சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம் பொலிவியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர்பிழைத்த நபர் ஒருவர் தான் தனது சிறுநீரைக் குடித்தும் , பூச்சிகளை உண்டுமே மூன்று நாட்கள் உயிர் வாழ்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.
35 வயதான மைனர் விடல் என்ற அந் நபர் ஒரு விற்பனைப் பிரதிநிதி ஆவார். இவர் பொலிவியன் எயார்லைன் எய்ரோகொன் விமானத்தில் செண்டா குரூஸிலிருந்து டிரினிடார்ட் நோக்கிப் பயணித்துள்ளார்.
இதன்போது விமானத்தில் சுமார் 9 பேர் வரை பயணித்துள்ளனர்.
இவர்கள் பயணித்த விமானம் இரவு நேரத்தில் காடொன்றினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் பயணித்த மற்றைய அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
எனினும் மைனர் விடல் மட்டும் உயிர்பிழைத்துள்ளார்.
கடும் காயங்களுக்குள்ளாகியுள்ள இவர் இவரது சிறுநீரைக் குடித்துள்ளதுடன் பூச்சி இனங்களை உண்டு சுமார் 62 மணித்தியாலங்கள் இவர் காட்டுக்குள் இருந்துள்ளார்.
அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட அந்நாட்டு கடற்படையினரே இவரை மீட்டுள்ளனர்.
இவர் சாரணராக இருந்ததாகவும் அதன்போது தான் பெற்ற அனுபவங்களே தன்னை மூன்று நாட்கள் உயிர் வாழ உதவியதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
"வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்" என்பது பழமொழி. மன அழுத்தமே பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக உள்ளது.அதாவது, மன அழுத்தம் உடையவர்கள் ஆல்கஹால், போதை மருந்து மற்றும் சிகரெட் புகைத்தல் போன்ற கெட்ட பழக்கவழக்கத்துக்கு ஆளாகின்றனர். அதுவே அவர்களுக்கு மிக கொடிய நோய்களை ஏற்படுத்துகிறது.
எனவே மன அழுத்தம் உள்ளவர்கள் அதுபோன்ற கெட்ட பழக்கத்தை விட்டு தினமும் 15 நிமிடம் சிரித்தாலே போதும். உடல் நலம் மேம்படும். அவர்களை நோய் அண்டாது என இருதய நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வாய்விட்டு சிரிப்பது தான் நல்லது. வாய்க்குள்ளேயே சிரிக்கும் நமட்டு சிரிப்பும், மூச்சு வாங்க சிரிக்கும் சிரிப்பும் உடல் நலத்துக்கு கேடானது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
நாள் ஒன்றுக்கு ஒரு குழந்தை 300 முதல் 400 தடவை சிரிக்கிறது. பெரியவர்கள் 15 தடவை சிரிக்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
கூகுள் மிகச்சிறந்த தேடியந்திரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும் கூகுளை விட வேறு தேடியந்திரம் தேவையில்லை என்று சொல்வதற்கில்லை.இணைய உலகில் பெரும்பாலானோரின் தேடல் கூகுளில் துவங்கி கூகுளிலேயே முடிவடைகிறது என்ற போதிலும் பல்வேறு சூழலில் கூகுளைத்தவிர வேறொரு தேடியந்திரத்தில் தேட வேண்டிய நிலை ஏற்படலாம்.
அதற்கேற்ப பல்வேறு மாற்று தேடியந்திரங்களும் இருக்கவே செய்கின்றன. கூகுள் போல் அல்லாமல் தேடப்படும் குறிப்பிட்ட வகையில் மட்டும் தேட விரும்பினால் ஸ்லேஷ் போட்டு அதற்குறிய குறிச்சொல்லை பயன்படுத்தி முடிவுகளை வடிக்கட்டி கொள்ளும் தேடியந்திரமாக பிளக்கோ திகழ்கிறது.
டக் டக் கோ தேடியந்திரம் கூகுளைவிட சிறந்த முறையில் முடிவுகளை முன்வைக்கிறது. பலரும் அறிந்திருக்ககூடியது போல ஆஸ்க் தேடியந்திரம் கேள்விகள் மூலம் தகவல்களை பதில்களாக தேட உதவுகிறது.
விக்கி தகவல்களை விக்கி பீடியாவிலேயே தேடிக்கொள்ளலாம். விக்கி தகவல்களுக்கென்று தனி தேடியந்திரமும் உள்ளது. திரைப்படம் சார்ந்த தகவல்கள் தேவை என்றால் இண்டெர்நெட் மூவி டேட்டாபேஸ் தளம் இருக்கவே இருக்கிறது.
புகைபடங்களுக்கென்று தனியே தேடியந்திரங்கள் உள்ளன. இப்போது ஆர் எஸ் எஸ் எனப்படும் செய்தியோடை தகவல்களை தேடித்தரவும் தனி தேடியந்திரங்கள் வந்து விட்டன.
இவற்றை தவிர குறிப்பிட்ட வகையான இணையதளங்களில் மட்டும் தேட கைகொடுக்கும் தேடியந்திரங்கள், வெர்டிகல் தேடியந்திரங்கள், மெட்டா தேடியந்திரங்கள், காட்சிரீதியிலான தேடியந்திரங்கள் என்று பலவகை தேடியந்திரங்கள் இருக்கின்றன.
இவற்றோடு கூகுளின் பிரதான போட்டியாளர் என்று சொல்லப்படும் பிங் மற்றும் நீண்ட நாள் போட்டியாளரான யாஹூ ஆகியவையும் இருக்கின்றன. கூகுளில் தேடியும் எதிர்பார்த்த தகவல்கள் கிடைக்காத போது அல்லது கூடுதல் விவரங்கள் தேவைப்படும் போது இந்த மாற்று தேடியந்திரங்களின் பக்கம் தான் போகவேண்டும்.
இணைய தேடல் என்பது கூகுளோடு முடிந்து விடுவதில்லை என்று அறிந்தவர்கள் தங்கள் தேவைக்கேற்ப வேறு தேடியந்திரங்களையும் பயன்படுத்துவதுண்டு. ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப்பார்க்கும் வசதியை கொண்ட தேடியந்திரங்களும் கூட இருக்கின்றன.
கூகுள் முடிவுகளோடு மற்ற தேடியந்திர முடிவுகளளை ஒப்பிட்டி பார்க்க உதவும் தேடியந்திரங்களும் இருக்கின்றன. மாற்று தேடியந்திரங்களில் என்ன பிரச்சனை என்றால் அவற்றை அடிக்கடி மறந்துவிட நேரலாம். அதோடு ஒரே நேரத்தில் பல தேடியந்திரங்களில் தேடிப்பார்ப்பது சிக்கலானதாகவும் இருக்கலாம்.
இந்த குறையை போக்கும் வகையில் பவுன்ஸ் என்னும் புதிய தேடியந்திரம் அறிமுகமாகியுள்ளது. பவுன்ஸ் தேடியந்திரத்தை தேடல் பட்டாம்பூச்சி என்றும் சொல்லலாம். காரணம் இது ஒரு தேடியந்திரத்தில் இருந்து இன்னொரு தேடியந்திரத்திற்கு தாவிச்சென்று எல்லா தேடிய்ந்திரங்களிலிம் தேடிப்பார்க்க உதவுகிறது.
அதிலும் ஒரே பக்கத்தில் இருந்தபடு தேடல் உலகம் முழுவதும் உலா வர கைகொடுக்கிறது. இத்தனைக்கும் பவுன்ஸ் தேடியந்திரத்தை தனியே பயன்படுத்த வேண்டிய தேவையில்லை.
டூல் பார் போல இதனை டவுண்லோடு செய்து கொண்டால் போதும் இது உங்கள் பிரவுசருக்குள் குடி புகுந்துவிடும். அதன் பிறகு எப்போதெல்லாம தேடுகிறீர்கள் அபோதெல்லாம் இது தலையை காட்டும். இல்லை இல்லை கீழிலிருந்து எட்டிப்பார்க்கும்.
அதாவது தேடல் முடிவுகளின் கீழ் எட்டிப்பார்க்கும். அதில் பல்வேறு தேடியந்திரங்களின் ஐகான்கள் வரிசையாக இருக்கும். கூகுள் முடிவுகள் கீழ் இந்த ஐகான்களை காணலாம். கூகுள் முடிவு தவிர வேறு எந்த தேடியந்திர முடிவு தேவைப்பாலும் சரி அதற்கான் ஐகானில் கிளிக் செய்தால் போதும் அந்த முடிவுகள் தோன்றும்.
இப்படியாக ஒரு தேடியந்திரத்தில் இருந்து இன்னொரு தேடியந்திரத்துக்கு தாவிக்கொண்டே இருக்கலாம். அவரவர் தேவைக்கேற்ப எந்த தேடியத்திற்கு வேண்டுமானாலும் தாவலாம். தேடியந்திர முடிவுகளை ஒப்பிட்டும் பார்த்து கொள்ளலாம்.
இணையவாசிகள் தங்கள் தேவைக்கேற்ற வகையான தேடியந்திரங்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதற்காக இணைய உலகில் உள்ள அநேக தேடியந்திரங்களையும் பட்டியலிட்டு வைத்துள்ளனர்.
கூகுள் உட்பட எந்த தேடியந்திரமும் ஒரு சதவீத்திற்கு மேலான இணைய தகவல்களை பெற்றிருக்கவில்லை என்று சொல்லப்படும் நிலையில் இந்த தேடியந்திர பட்டாம்பூச்சியின் முக்கியத்துவத்தை தானாகவே புரிந்து கொள்ளலாம். இணையதள முகவரி
இன்றைய இணைய உலகில் கணணி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.ஒரு சின்ன மென்பொருளின் மூலம் நம் கணணியின் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். இந்த மென்பொருளை பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் கணணியின் அனைத்து தகவல்களும் அதில் வந்து விடும். இதில் மேல்புறம் சிறு சிறு ஐ-கான்கள் இருக்கும். இதில் 18 விதமான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
நமது கணணியில் உள்ள டிரைவ்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். சிபியு தகவல்களை அறிந்து கொள்ளலாம். இன்புட் டிவைச்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
இதன் மேல்புறம் பார்த்தீர்களேயானால் File, Edit, View, System, Control Panel, Programs, Hardware, Options என நிறைய டேப்புகள் இருக்கும். இதன் ஒவ்வொன்றின் மூலமும் கணணியின் எந்தவொரு செயலையும் நீங்கள் எளிதில் அணுக முடியும்.
உதாரணமாக நீங்கள் Control Panel -Add & Remove ப்ரோகிராம் செல்ல வேண்டுமானால் இதன் மூலமாகவே எளிதில் செல்ல முடியும்.
மேலும் உங்கள் கணணியில் நீங்கள் பொருத்தியுள்ள அனைத்து மென்பொருள் விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். கணணி பழுது பார்ப்பவர்களுக்கு இந்த மென்பொருள் மிக அவசியமான ஒன்றாகும்.
இதன் விவரங்களை பிரிண்ட் எடுக்கும் வசதி உள்ளதால் ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். தரவிறக்க சுட்டி
மனிதர்களுக்கு உண்டாகும் பல்வேறு உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளில் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் ஒன்று.இதன் தாக்குதல் ஒவ்வொரு மனிதனுக்கும் பாதிப்பை உண்டாக்குவதோடு அல்லாமல் அவர்களின் தலைமுறைகளையும் கடுமையாக பாதிக்கிறது.
இத்தைகைய பாதிப்புகளால் அவர்களின் தலைமுறைகளுக்கு நிறம், பாலினம் ஆகியவற்றில் கூட பல மாறுதல்கள் உண்டாகின்றன.
இவ்வாறு மனிதர்கள் தங்கள் அன்றாட வாழ்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு வளர்ந்து வரும் அறிவியல் பல எளிமையான தீர்வுகளை மனிதன் காண வழி வகுத்திருக்கின்றது.
அவைகளில் பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை முறை மிக பயனுள்ள ஒரு தீர்வாக அமைகிறது.
ஆயுர்வேத சிகிச்சை முறை ஒரு பழமையான அறிவியல் சிகிச்சை முறை, இது தொன்றுதொட்டு பல்வேறு நோய்களை குணப்படுத்தி வருகிறுது. பல் நோய்களை கூட மிக எளிமையாக குணப்படுத்த முடியும்.
பல் பிரச்சனைகள் உள்ளவர்கள் "அஸாடிரக்தா இண்டிகா" அதாவது வேம்பு பயன்படுத்தி வந்தால் பல் பிரச்சனைகளிலிருந்து நல்ல ஆறுதல் பெற முடியும்.
வேம்பு சுள்ளி மற்றும் வேம்பு எண்ணெய் இவற்றை பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்தால் மூச்சு பிரச்சனைகள் கூட எளிதில் குணமாகும்.
மேலும் ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட "பபுள்" என்று அழைக்கப்படும் பற்பசையை பயன்படுத்துவதன் மூலம் ஈறுகள் மற்றும் பற்களில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்
மனிதா சிந்தனையை மாற்று ...!
வாழ்த்துவதும் இலகே அவ்வகை வாழ்தலே
வையகத்தில் வலிது மிக வலிது
பிறர் குறை பேசும் மூடனே உன் புறமுதுகு
நீ அறியாதது ஏனோ விந்தைதான்
யாரேனும் காதலித்தால் கதை பேசும் நீ
உன் பிள்ளைஎன்றால் ஊமையாய் போவதேனோ ?
குருக்கள் கூடினால் குற்றம் இல்லையோ ?
ஒருவனை காதலித்து அவனையே கைப்பிடித்தலில்
எங்கு கண்டாய் அவர் வாழ்வில் இழுக்கு ?
பலரோடு கூடி உன்பிள்ளை திளைப்பதில்
இங்கு என்ன பெருமை கொண்டாய் ?
சாதி சொல்வாய் மதம் சொல்வாய் இனம் மாறியதாய்
இழிவு சொல்வாய் மதி கெட்டாய் மடையனே
மனித மனம் ஒன்று இருப்பதை ஏன் மறந்தாய் ?
வண்டி மட்டுமல்ல வண்டிக்காரனும் இங்கு ஓடத்தில்
ஏறும் காலமிது உன்னை உன் உளுத்தல் சிந்தனையை மாற்று
இல்லையேல் இந்த உலகத்தில் ஆவாய் நீ தீட்டு ...
நீங்கள் சப்பாத்து போட்டுக் கொண்டதும் சப்பாத்தின் நூல் தானாகவே காலுடன் கட்டிக் கொண்டால் எப்படி இருக்கும். கற்பனை செய்து மட்டுமல்ல வாங்கி அணிந்து கூட உங்களால் பார்க்க முடியும். இப்போது சுயமாக நூலைக் கட்டும் சப்பாத்துக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
1980களில் திரைப்பட நடிகர் மைக்கல் ஜே பொக்சினால் அணியப்பட்டது போல உருவாக்கும் படி திரைப்பட ரசிகர்களால் வருடக்கணக்காகக் கேட்கப்பட்டதற்கு இணங்க இந்த சுயமாகக் கட்டும் சப்பாத்தினை Nike நிறுவனம் உருவாக்கியுள்ளது.
தற்போது வரைக்கும் இவற்றின் 1500 சோடிகளை நைக் நிறுவனம் வெளியிடவுள்ளது. இதுபற்றி இந்நிறுவனம் eBay இல் தெரியப்படுத்தும் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன
தங்களுடைய பிறந்த குழந்தை ஒரு வயதிற்கு முன்னதாக இறக்கும் போது அதனை தாங்க முடியாத பெற்றோர் முன்கூட்டியே மரணம் அடைவது அதிகரித்துள்ளது.
இந்த அதிர்ச்சி உண்மையை யார்க் மற்றும் ஸ்டிர்லிங் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். குழந்தையின் பிரிவை தாங்க முடியாத பெற்றோர் மரணம் அடைவது 4 மடங்கு அதிகரித்துள்ளது. குழந்தை இறந்த 10 ஆண்டுகளுக்குள் அவர்களது மரணமும் நிகழ்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிரிவை தாங்க முடியாமல் இதயம் நொறுங்கி வாழ்க்கை துணைகள் உயிழப்பதாக முந்தய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கை பிரிட்டன் மெடிக்கல் இதழான சப்போர்டிவ் மற்றும் பாலேடிவ் கேர் இதழில் வெளியாகி உள்ளது.
இது குறித்து மேலும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டி உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தற்கொலை அல்லது மன அழுத்த பிரச்சனை காரணமாக இறந்தவர்கள் விவரங்களை ஆய்வு செய்த போது குழந்தை இறப்பை தாங்க முடியமால் அவர்கள் உயிரிழக்கிறார்கள் என்பது தெரியவந்தது.
உலகில் இன்று எத்தனையோ குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்து கொண்டு ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வசதியில்லாம் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த உலகம் எவ்வளவுதான் தொழில்நுட்பத்தை யும் விஞ்ஞானத்தையும் நோக்கி பயணித்தாலும் வறுமை என்பதை ஒழிக்க முடியாத ஒன்றாகி விட்டது.
இதையொட்டிய ஒரு குறும்படம் ஒன்றை அண்மையில் பார்வையுற்ற போது நெஞ்சம் நெகிழ்வடைந்துவிட்டது. உண்மையில் இதன் தாயரிப்பாளர்களை பாராட்டியே ஆகவேண்டும் வார்த்தைகள் இல்லாத சம்பவங்களாக எடுக்கப்பட்ட இந்த படம் மூலம் நாம் உணர்ந்து கொள்ளக்கூடிய விசயங்கள் நிறையவே இருக்கின்றன.
எனவே இதனை நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டியது எமது கடமை அல்லவா? குறும்படத்தை முழுமையாக பாருங்கள் நிச்சயம் உங்கள் இதயமும் படபடக்கும்
விபத்துக்கள் என்பது எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் எதிர்பாராமல் இடம்பெறும் ஒரு சம்பவம் என வரைவிலக்கணம் சொல்லி முடிக்கலாம்.
நீங்கள் இதுவரை எத்தனையோ விதமான விபத்துக்களை நேரில் பார்த்த அனுபவம் இருந்திருக்கும். Compose
ஆனால் இங்கு காணொளியில் தரப்பட்டுள்ள விபத்தை பாருங்கள் நான் ஏற்கனவே கூறிய வரைவிலக்கணம் சாலப்பொருந்தும் என்பது புரியும்.
சினிமாவில் எடுக்கப்படும் காட்சிகள் போலவே அடங்கியுள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிகிறது ஒரு மயிர் கூச்செரியும் சம்பவம்… பார்த்து ரசியுங்கள்.
பூமியில் உயிரினங்களின் தோற்றம் மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி குறித்து விஞ்ஞானிகளிடையே பல விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் பிராசியர் தலைமையிலான குழுவினர் உயிரினங்கள் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களின் ஆய்வின் முடிவில் மிதக்கும் எரிமலை பாறைகளில் இருந்து ஆதிகால உயிரினங்கள் தோன்றியிருக்கக்கூடும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளன.
சுமார் கடந்த 3,500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரில் மிதக்கும் தன்மையுள்ள எரிமலை பாறைகள் உருவாக்கியிருக்கலாம். அவற்றின் மீது மின்னல் தாக்கியதால் அவை நொறுங்கி பலவித ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம்.
அதிலிருந்து எண்ணை வடிவிலான ஹைட்ரோ கார்பன்கள் மற்றும் உலோகங்கள் உருவாகி அதன் மூலம் உயிரினங்கள் தோன்றி இருக்கக்கூடும் என பேராசிரியர் மார்ட்டின் பிராசியர் தெரிவித்துள்ளார்
கடந்த சில ஆண்டுகளாக, வெள்ளக்காடாகச் சூழ்ந்து விடுகின்ற மழைத்தண்ணீர் சலிப்பை உண்டாக்கியிருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்குத் தண்ணீர் அன்றாடம் இரண்டு லீட்டர் குடிக்க வேண்டும் என்பது அவசியம். அதைப் பருகும் விதம் எப்படி என்பது இதோ இங்கே கூறப்படுவது சரிதானோ என்று யோசிக்க வைக்கின்றது.
டம்ளர் கணக்கில் தண்ணீர் குடியுங்கள் என்று கூறப்படுகிறது. எப்படிக் குடிக்க வேண்டும் ?
தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.
டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.
தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது, மூக்கு, தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன. ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.
ஒருவர் குடித்த டம்ளரில் மற்றொருவர் குடிப்பது சுகாதாரக் கேடு என நீங்கள் கூறலாம்.
இதற்கும் மாற்று வழி உண்டு. ஒவ்வொருவருக்கும் டூத் பிரஷ் இருப்பதுபோல தனித்தனியே டம்ளர் வைத்துக் கொள்ள வேண்டும். விருந்தினர்க்குக் கொடுக்கப்பட்ட டம்ளரை உடனுக்குடன் அலசிக் கழுவி வைத்துக் கொள்ளலாமே !