செயற்கைக் கால்களோடு கால்பந்தாட்டம் விளையாடும் சிறுமி |
[ Monday, 21 November 2011, 05:43.26 AM. ] |
![]() இந்த செயற்கை கால்கள் அசையும் மூட்டுக்களைக் கொண்டிருப்பதால் எலில் உற்சாகத்துடன் கால்பந்து விளையாடுகிறாள். மேலும் சக மாணவிகளுக்கு கால்பந்தாட்டப் பயிற்சியும் அளிக்கிறாள். 2005ம் ஆண்டு யூலை மாதம் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எல்லி கேலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை தொடங்கிய சில மணி நேரத்தில் அவளது இதயம் நின்றுவிட்டது.உடனே அவளின் தாயும் தந்தையும் கதறி அழுதனர். அவள் இறந்து விட்டாளோ என்று நினைத்த வேளையில் அவள் இதயம் துடிக்கத் தொடங்கியது. |
அடுத்த நான்கு நாட்களில் காலும் கையும் கருத்துவிட்டது. எனவே அவற்றை உடலிலிருந்து நீக்கிவிட்டனர். பின்பு சாதாரண செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன.

தினமும் அவற்றை 20 நிமிடம் பொருத்தி வலியோடு நடந்து பார்த்தாள். டிசம்பர் 2006ல் அசையும் மூட்டுக்களைக் கொண்ட செயற்கை கால் எல்லிக்குப் பொருத்தப்பட்டது.
பின்பு 2009 ஏப்ரல் மாதத்தில் கார்பன் இழைகள் கொண்ட எடை குறைவான மற்றும் விளையாடுவதற்கு வசதியான செயற்கைக் கால் பொருத்தப்பட்டது.

இதன் பின்பு இவள் மற்ற சிறுவர், சிறுமியரைப் போல் ஓடியாடி விளையாட முயன்றாள்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் பள்ளிக்கான கால்பந்தாட்ட விளையாட்டுக் குழுவில் சேர்ந்து மற்றவர்களைப் போல அற்புதமாக விளையாடுகிறாள். சக மாணவிகளுக்கு விளையாடப் பயிற்சியளிக்கிறாள்.
ஆர்செனல் என்ற கால்பந்தாட்ட குழு மீது இவளுக்கு ஆர்வம் அதிகம். தன் தந்தையோடு உட்கார்ந்து தொலைக்காட்சியில் கால்பந்தாட்டத்தை ரசித்து பார்ப்பாள். இப்போது நோய்த் தாக்குதலின் சவால்களைச் சந்தித்த சாதனையாளராகி விட்டாள்
No comments:
Post a Comment