Sunday, November 13, 2011

தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தைக் காட்டும் 'கொண்செப்ட் வீடியோ': நம்பமுடியாத நமது எதிர்காலம்



தொழில்நுட்பமானது நாளுக்கு நாள் நாம் நினைக்காத அளவு அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்துவருகின்றது.இதில் மணிக்கொரு புதுமையை மனிதன் நிகழ்த்திக் காட்டுகின்றான்.

மேலும் அதற்கு ஒரு படி மேலே போய் எதிர்காலம் இவ்வாறு தான் இருக்கப்போகின்றது என்பதனைக் காட்டவும் செய்கின்றான்.

குறிப்பாக பெரிய நிறுவனங்கள் தங்களது எதிர்கால உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் இவ்வாறுதான் இருக்கப்போகின்றது என்பதனைக் காட்டவும் செய்கின்றன.

இவை நிறுவனங்களுக்கு விளம்பரமாகவும் அமைகின்றன.

இவ்வாறு காட்டுவதற்கு தயார்படுத்தப்படும் காணொளிகள் பொதுவாக (Concept Videos) என அழைக்கப்படுகின்றன.

இவ்வகைக் காணொளிகள் மிகவும் சுவாரஸ்யமானவை என்பதுடன் பார்ப்பவர்களை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே அழைத்துச் செல்லக்கூடியவை.

இவ்வாறான காணொளிகள் பல உள்ளபோதிலும் குறிப்பிடத்தக்க சில சுவாரஸ்யமான காணொளிகளின் தொகுப்பே இது.

Nokia (HumanForm)

நொக்கியாவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அடுத்த தலைமுறையினருக்கான கையடக்கதொலைபேசி தொடர்பானதே இக் காணொளி.

நெனோ தொழில்நுட்பத்தை ( Nano Technology) பயன்படுத்தி உருவாக்கப்படும் கையடக்கத்தொலைபேசி இதுவாக இருக்குமென நொக்கியா தெரிவித்துள்ளது
.






No comments:

Post a Comment