Monday, November 14, 2011

உன் விழியும் என் விழியும் சந்தித்த நாள் .......... கவிஞர்:டீபா பிரசுரித்த திகதி:14, November 2011 Views 418 என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்! அன்று தான் உன்னை நான் நேரில் சந்தித்த நாள்! உன்னை நான் சந்தித்த அந்த நொடி இன்னும் என் கண்முன்னே நிற்கிறது! எனக்குள் காதல் என்ற அனுபவத்தை முதன் முதலில் கொடுத்த உன்னை நேரில் காண நான் ஏங்கி தவமிருந்த அந்த நொடிப்பொழுதை நான் சந்தித்தேன்! உன்னை கண்டதும் என் மனதில் வசந்தம் வீசுவதை உணர்ந்தேன்! நாம் எத்தனை பகல் எத்தனை இரவுகள் மணிகணக்காய் பேசி நம் உணர்வுகளை பரிமாறிக்கொண்டு காதலராய் வாழ்ந்து கொண்டு இருந்தாலும் உன்னை நேரில் கண்டதும் என்னால் உன் விழியை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் திணறினேன்!. அன்று தான் என் வாழ்வில் நான் இதுவரை அடைந்திராத எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன் ! அந்த மகிழ்ச்சி எப்படி இருந்தது என்றால் பாலைவனத்தில் கோடிகணக்கான மலர்கள் பூத்து குலுங்கியது போலிருந்தது ! உன்னுடைய அன்பு என் இறுதி மூச்சு வரை தொடர வேண்டுமென்று உன்னிடம் நான் கையேந்தி நிற்கிறேன் தருவாயா உன் அன்பை காதலை பாசத்தை



என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்!
அன்று தான் உன்னை
நான் நேரில் சந்தித்த நாள்!
உன்னை நான் சந்தித்த
அந்த நொடி இன்னும்
என் கண்முன்னே நிற்கிறது!
எனக்குள் காதல் என்ற
அனுபவத்தை முதன் முதலில்
கொடுத்த உன்னை நேரில் காண
நான் ஏங்கி தவமிருந்த அந்த
நொடிப்பொழுதை நான் சந்தித்தேன்!
உன்னை கண்டதும் என் மனதில்
வசந்தம் வீசுவதை உணர்ந்தேன்!
நாம் எத்தனை பகல் எத்தனை
இரவுகள் மணிகணக்காய்  பேசி
நம் உணர்வுகளை பரிமாறிக்கொண்டு
காதலராய் வாழ்ந்து கொண்டு இருந்தாலும்
உன்னை நேரில் கண்டதும் என்னால்
உன் விழியை நேருக்கு நேர்
சந்திக்க முடியாமல் திணறினேன்!.
அன்று தான் என் வாழ்வில்
நான் இதுவரை அடைந்திராத
எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன் !
அந்த மகிழ்ச்சி எப்படி இருந்தது என்றால்
பாலைவனத்தில் கோடிகணக்கான
மலர்கள் பூத்து குலுங்கியது போலிருந்தது !
உன்னுடைய அன்பு 
என் இறுதி மூச்சு வரை
தொடர வேண்டுமென்று
உன்னிடம் நான் கையேந்தி நிற்கிறேன்
தருவாயா உன் அன்பை காதலை பாசத்தை!

No comments:

Post a Comment