Friday, November 18, 2011

இளவரசர் வில்லியமின் மனைவி கர்ப்பம்


இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவி கேத் மிடில்டன் கர்ப்பமாக உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் மகன் இளவரசர் வில்லியம்- கேத் மிடில்டன் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் திகதி கோலாகலமாக நடந்தது.
தற்போது இவர்கள் கேம்பிரிட்ஜ் அரண்மனையில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கேத் மிடில்டன் 6 வாரம் கர்ப்பமாக இருப்பதாக லண்டனில் இருந்து வெளிவரும் இன்டச் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அக்குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என இளவரசர் வில்லியம் ஆசைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பே கேத் மிடில்டன் கர்ப்பம் அடைந்திருப்பதாக தகவல் வெளியானது. அப்போது அது வதந்தி என கூறப்பட்டது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment