![]() |
சில மீன்கள் 30 கிலோ மீற்றர் வேகத்தில் பறக்கக் கூடிய வல்லமை உடையனவாக இருக்கின்றன. இப்பறக்கும் மீன்கள் உஷ்ண வலயப் பிரதேசத்தில் உள்ள கடற்பகுதிகளில் காணப்படுகின்றன.
எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நீரிலிருந்து வெளியே கிளம்புவதுதான் எனக் கருதி அவை இவ்வாறு பறக்கின்றன என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
தங்களது இறகுகளை விரித்து ஏறக்குறைய 50 மீற்றர் வரை கடலின் மேல் உயரக் கிளம்பக் கூடிய சக்தியைக் கொண்டவை என தெரிவிக்கின்றனர்.
இவை 18 சென்றி மீட்டர் வரை நீளமுடையனவாக காணப்படும். சிறு கூட்டமாக விரைந்து செல்லும் இவை ஆகாயத்தில் 45 செக்கண்டுகள் தங்கி இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment