Tuesday, November 8, 2011

பிளாஸ்ரிக்கால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் விமானம்( படங்கள் இணைப்பு)



பிளாஸ்ரிக்கால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் விமானம்( படங்கள் இணைப்பு) பிளாஸ்ரிக்கால் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது விமானமானது தனது கன்னிப் பயணத்தை ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள நரிடா விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை ஆரம்பித்தது. இந்த போயிங் ட்றீம்லைனர் விமானமானது நிறை குறைந்தது என்பதால் ஏனைய விமானங்களை விட எரிபொருன் பயனுறுதிப்பாடுமிக்கதாகும். பெரிய ஜன்னல் கண்ணாடிகளையும் அகலமான ஆசனங்களையும் கொண்ட இந்த விமானம் ஏனைய விமானங்களுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் குறைவான சத்தத்தை மட்டுமே எழுப்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
-
 பிளாஸ்ரிக்கால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் விமானம்( படங்கள் இணைப்பு)
இந்நிலையில் டோக்கியோவிலிருந்து கொங்கொங்கிற்கு கன்னிப்பயணத்தை மேற்கொண்ட இந்த விமானத்தில் 200 விமான நிபுணர்களும் ஆர்வலர்களும் பயணித்தனர். மேற்படி விமானத்தின் நீளம் 186 அடியும் உயரம் 56 அடியும் இரு இறக்கைகளுக்கிடையேயான நீளம் 197 அடியும் ஆகும். அத்துடன் இந்த விமானம் மணிக்கு சுமார் 650 மைல் வேகத்தில் பறக்கக்கூடியது. பயணிகள் மற்றும் சரக்குகள் உட்பட 502, 500 இறாத்தல் நிறையுடைய இந்த விமானத்தின் விலை 193.5 மில்லியன் அமெரிக்க டொலராகும்.

No comments:

Post a Comment