நடிகை ஐஸ்வர்யா ராயுக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் பச்சனின் குடும்ப வாரிசை ஐஸ்வர்யா ராய் பெற்று எடுத்தார்.
குழந்தையும் தாயும் நலமாக உள்ளார் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளார்கள். பிரசவத்திற்காக திங்கள் கிழமை இரவு மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
அப்பாவான அபிஷேக் பச்சனும், தாத்தாவான அமிதாப் பச்சனும் இன்று காலை இந்த நற்செய்தியை ட்விட்டரில் தெரிவித்ததன் மூலம் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.
இந்த செய்தி கேட்டவுடன் ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினர் தங்களது மகிழ்ச்சியை உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளார்கள். அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராயும் 2007 ஏப்ரல் 20 -ம் திகதி அன்று தம்பதிகள் ஆனார்கள்.
No comments:
Post a Comment