Saturday, November 5, 2011

பக்ரீரியாவிலிருந்து சருமத்தை பாதுகாக்கும் கிறீம்! விஞ்ஞானிகள் அதிரடி

பக்ரீரியாக்கள் பொதுவாக உடலுக்கு தீங்கு விளைவிப்பவை என்று நம்பப்படுகிறது. ஆனால் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கக் கூடிய கிறீம் ஒன்று பக்ரீரியாவில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
சூரியவெப்பம் நேரடியாக தாக்கும்போது தோல் புற்றுநோய் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதை தவிர்ப்பதற்காக சூரியப் பாதுகாப்பு (Sun Protection Cream) கிறீம்தடவிக் கொள்வது நல்லது என கூறப்படுகிறது.
ஒவ்வாமை ஏற்படுத்தாத கிரீம் தயாரிப்பது தொடர்பாக ஸ்வீடனின் கோதன்பெர்க் மற்றும் சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். அங்கு முக்கியமான ஆய்வு முடிவு ஒன்று எடுக்கப்பட்டது.
அதாவது வெப்ப பகுதிகளில் மட்டுமே வாழும் சியானோபாக்டீரியா என்ற பாக்டீரியாவி உள்ள ஸ்கைடோனியம் என்ற மூலப்பொருள் புற ஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாப்பளிப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பக்ரீரியாவில் இருந்த சரும பாதுகாப்பு கிறீமை உருவாக்கியுள்ளனர்.
இது அதிக வெப்பத்தை தாங்கி, சருமத்தை பாதுகாப்பது முதல்கட்ட சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மனிதர்களின் எதிரி நண்பனாகின்றான்.

No comments:

Post a Comment