Friday, July 15, 2011

பவுர்ணமி நிலவில் தாஜ்மஹாலை ரசிக்கும் தீபிகா


தாஜ்மஹாலைக் காதலிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா. ராணா நாயகி தீபிகா படுகோனேவும் இதற்கு விலக்கில்லை.
உலக அதிசயத்தில் ஒன்றாகவும், காதலின் சின்னமாகவும் கம்பீரமாக காட்சியளிக்கும் தாஜ்மஹாலுக்கு கடந்த ஆண்டில் மட்டும் தீபிகா 3 முறை சென்றுள்ளார். அதுவும் பவுர்ணமி அன்று தனியாகச் சென்று ரசித்திருக்கிறார்.
பவுர்ணமி நிலவே அழகு, அந்த அழகு நிலவின் வெளிச்சத்தில் தாஜ்மஹால் கொள்ளை அழகாகத் தெரியும். இதை பார்த்து ரசிக்கத்தான் தீபிகா தனியாகச் சென்றாராம். தீபிகாவின் இந்த ரகசிய தாஜ்மஹால் விசிட் அவர் நண்பர்களில் சிலருக்கு மட்டும் தான் தெரியுமாம்.
கடந்த ஆண்டு சூட்டிங்கிற்காக முதன்முதலாக தாஜ்மஹால் சென்றுள்ளார். அதன் அழகில் மயங்கி திரும்பத் திரும்ப சென்று கொண்டிருக்கிறார். தாஜ்மஹாலில் அப்படி என்னதான் பார்த்தாய்? என்று நண்பர் ஒருவர் கேட்டதற்கு தீபிகா கூறியதாவது, நிலா வெளிச்சத்தில் தாஜ்மஹாலை பார்த்துக் கொண்டே இருப்பது நிம்மதியைத் தருகிறது என்று பதிலளித்தாராம்.
இந்தக் கேள்வியை தீபிகாவிடம் கேட்டிருக்கவே வேண்டாம். காரணம் சித்தார்த் மல்லையாவை காதலிக்கும் அவர் நிலவொளியில் தனிமையில் என்ன மாதிரி மனநிலையில் இருந்திருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதல்லவா.

No comments:

Post a Comment