Wednesday, July 27, 2011

பிரம்மாண்ட சுறாவிடம் இருந்து உயிர் தப்பிய நீச்சல் வீரர்

சுறாக்களில் பிரமாண்டமானது "திமிங்கல சுறா". சுமார் 40 அடி நீளம் வரை இருக்கும். எடை சுமார் 25 டன் முதல் 35 டன் வரை இருக்கும்.

வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள முஜரஸ் பகுதிக்கு திமிங்கல சுறாக்கள் ஜூன், ஜூலை மாதங்களில் கூட்டம் கூட்டமாக வரும். அங்குள்ள சிறிய மீன்களை மொத்தமாக விழுங்கும். வேட்டை முடிந்த பிறகு, மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு சென்றுவிடும்.

சமீபத்தில் 600க்கும் அதிகமான திமிங்கல சுறாக்கள் முஜரஸ் பகுதிக்கு வந்தன. இந்த நிகழ்வுக்காக காத்திருந்த நீச்சல் வீரர்கள், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் பலர் முன் அனுமதி பெற்று முஜரஸ் பகுதிக்கு வந்திருந்தனர்.

சுறாக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள் குறித்து விரிவான ஆய்வும் மேற்கொண்டனர். அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் சாகச வீரர் ஹேண்ட்லர்(49) என்பவரும் இந்த டீமில் இருந்தார். சுறாவின் வாயில் இருந்து நூலிழையில் தப்பிய அனுபவம் பற்றி அவர் விளக்குகிறார்.

ராட்சத உருவம் என்றாலும் திமிங்கல சுறாக்கள் மென்மையானவை. மெதுவாகத்தான் செல்லும். மணிக்கு 5 கி.மீ.தான் அதன் அதிகபட்ச வேகம். கொஞ்சம் பழக்கினால் நண்பன் போலவே நடந்துகொள்ளும். ஆனாலும் தண்ணீருக்கு அடியில் அதன் உருவம் நம்மை மிரள வைக்கும்.

இதுகுறித்து ஹேண்ட்லர் என்பவர் கூறியதாவது: ஆராய்ச்சிக்காக நான் நீந்திக் கொண்டிருந்த போது எதேச்சையாக திரும்பி பார்த்தேன். வாயை சுமார் 5 அடி அகலத்துக்கு திறந்து வைத்தபடி திமிங்கல சுறா நெருங்கி வந்து கொண்டிருந்தது.

நான் சற்று கவனிக்காமல் இருந்திருந்தாலும் அதன் வாய்க்குள் போயிருப்பேன். தன் உணவு தவிர வேறு பொருட்களை சுறா உள்ளே அனுமதிக்காது. உடனே வாயை மூடி என்னை வெளியேற்றியிருக்கும்.

அதன் வாய்க்குள் சின்னச் சின்னதாக 350 வரிசையில் பற்கள் இருக்கும். சுறா சற்று வாயை மூடித் திறந்தாலும் காயம் அதிகம் பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக தப்பினேன்.

No comments:

Post a Comment