Sunday, July 24, 2011

பாம்புகளை மாலையாக அணிந்த யாழ் மாணவர்கள் (படங்கள் இணைப்பு)

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இலங்கையில் யாழ்ப்பாண மாணவர்கள் பாம்புகளை கைகளில் பிடித்தும் - கழுத்தில் சுற்றிப் போட்டும் வைத்திருந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றது. தெகிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவின் ஏற்பாட்டில் யாழ். மகாஜனா கல்லூரியில் பாம்புகள் தொடர்பான விழிப்புணர்வூட்டல் பிரசாரம் ஒன்று 18 ஆம் திகதி இடம்பெற்றது.

துறை சார்ந்த அதிகாரிகள் பாம்புகளை கொண்டு வந்து மாணவர்களுக்கு காண்பித்தனர். பாம்புகள் மீதான பயத்தைப் போக்குகின்றமைக்காக தைரியம் கொடுக்கின்ற வார்த்தைகள் பேசினார். பாம்புகளுடன் நட்புடன் பழக வேண்டும் என்றார்கள். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உயிரியல் பல்லினத்துவ பாதுகாப்புக்கான கல்வித் திட்டத்தின் கீழ் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.








No comments:

Post a Comment