Saturday, July 2, 2011

உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி-'ஜோசியம்' சொல்லும் ஆக்டோபஸ் பாவ்லா

Octopus Paula


பெர்லின்: உலகக் கோப்பை மகளிர் கால்பந்தாட்டப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், வெல்லப் போவது எந்த அணி என்பது குறித்து ஆருடம் சொல்ல ஆரம்பித்துள்ளது ஆக்டோபஸ் பாவ்லா.

கடந்த உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளின்போது ஒவ்வொரு போட்டியின்போதும் வெல்லப் போகும் அணியை மிகச் சரியாகச் சொல்லி உலகளவில் பிரபலமானது ஆக்டோபஸ் பால். ஆனால், உலகக் கோப்பை போட்டிகள் முடிவடைந்த சில மாதங்களில் பால் இறந்தது.

இந் நிலையில் பெண்கள் கால்பந்தாட்டப் போட்டி நாளை பெர்னிலில் தொடங்குகிறது. இந்தப் போட்டிகளில் ஜோதிடம் சொல்ல வந்துவிட்டது புதிய ஆக்டோபஸ்சான பாவ்லா.

முதல் போட்டி ஜெர்மனிக்கும் கனடாவுக்கும் இடையே நடக்கவுள்ள நிலையில், இந்தப் போட்டியில் கனடா தான் வெல்லும் என்று கூறி ஜெர்மனியை திகிலில் ஆழ்த்தியுள்ளது பாவ்லா. காரணம், உலகக் கோப்பை மகளிர் போட்டியில் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து வென்று வரும் அணி ஜெர்மனி. மேலும் கனடாவுடன் நடந்த கடந்த 9 போட்டிகளில் இதுவரை எந்தப் போட்டியிடும் ஜெர்மனி தோற்றதும் இல்லை.

இந் நிலையில் கனடாவுக்கே முதல் வெற்றி என்கிறது பாவ்லா.

ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் இரு நாடுகளின் கொடிகள் அச்சிடப்பட்ட பேழையில் எதை பாவ்லா முதலில் தொடுகிறதோ அந்த நாடே வெல்லும் என்பது நம்பிக்கை. ஆக்டோபஸ் பால் இதே போலத்தான் ஆருடன் சொன்னது. அது சொன்னது எல்லாம் மிகச் சரியாகவும் நடந்தது.

இந் நிலையில் பாவ்லா களமிறங்கியுள்ளது.

No comments:

Post a Comment