Sunday, July 3, 2011

நடிக்கத் தெரியாமலா 15 விருது வாங்கியிருக்கேன்? - சீறும் ஹன்ஸிகா

தெலுங்கில் நடிப்புக்காக
விருது வாங்கியவள் நான். வெறும் கவர்ச்சியை மட்டுமே நான்
நம்பியிருப்பதாகச் சொல்வதை மறுக்கிறேன். நடிக்கத் தெரியாமலா விருது
வாங்கினேன், என சீறியுள்ளார் நடிகை ஹன்ஸிகா மோத்வானி.

தொடர்ந்து தோல்விப் படங்கள் கொடுத்தாலும், ஹன்ஸிகா காட்டில் வாய்ப்பு மழை பலமாகவே உள்ளது.

இதற்குக் காரணம் அம்மணியின் அமோகக் கவர்ச்சிதான் என யாரோ சொல்லிவிட, கோபத்தில் கொந்தளித்துள்ளார் ஒரு பேட்டியில்.

அவர்
கூறுகையில், "எனக்கு நடிக்க தெரியவில்லை என்று விமர்சிப்பது வேதனை
அளிக்கிறது. இந்தியில் ஒரு சீரியலுக்காக 14 விருதுகள் வாங்கியவள் நான்.
தெலுங்கில் நான் நடித்த தேசமுத்ரா படத்துக்கும் விருது வாங்கியுள்ளேன்.

நடிக்கத் தெரியாமலா இந்த விருதுகளை வாங்கினேன். சினிமாவுக்கு நான் விருப்பப்பட்டுதான் வந்தேன். இதுவரை 15 படங்களில் நடித்து விட்டேன். நடிப்பதற்கு நான் கஷ்டப்படவில்லை. விஜய்யுடனும் உதய நிதி ஸ்டாலினுடனும் நடித்து வரும் படங்கள் வந்தால், எனது அடுத்த பரிமாணம் தெரியவரும்," என்றார்.

No comments:

Post a Comment