லாரன்ஸ் ராகவேந்திராவின் காஞ்சனாவில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது. அனேகமாக அவர் முனி படத்தில் ராஜ்கிரண் நடித்த கேரக்டரில் நடித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
டான்ஸ் மாஸ்டராக அறியப்பட்ட லாரன்ஸ் ராகவேந்திரா முனி என்ற படத்தில் ஹீரோவாக கலக்கியிருந்தார். அப்படத்தின் அடுத்த பாகமான காஞ்சனாவை இப்போது எடுத்து வருகிறார். முனியில் லாரன்ஸுக்கு ஜோடியாக வேதிகா நடித்தார். காஞ்சனாவில் லக்ஷ்மி ராய் நாயகியாக நடிக்கிறார். முதலில் இந்த ரோலில் நடிப்பதாக இருந்தவர் அனுஷ்கா. ஆனால் திடீரென அவர் ஜகா வாங்கி விடவே லக்ஷ்மி உள்ளே வந்தார்.
இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவர் வரும் இறுதிக் கட்ட காட்சிகளை பெரும் பொருட்செலவில் படமாக்கியுள்ளனர்.
இது குறித்து லாரன்ஸ் கூறியதாவது,
முனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்க தீர்மானித்து அதற்கான திரைக்கதையை கடந்த ஆண்டே முடித்து விட்டேன். இந்த படமும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும். இந்த படத்தின் படிபிடிப்பை பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே நடத்தப்பட்டது. கோவளம் கடற்கரையில் 10 நாட்கள் இரவில் படபிடிப்பு நடத்தினோம். இதில் சரத் குமார் முக்கிய காதபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் வரும் இறுதிக் கட்ட காட்சிகளை பெரும் பொருட்செலவில் எடுத்துள்ளோம்.
முனி படத்தை விட இதில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். இதில் ஹாலிவுட் படங்களுக்கு இணையான திகில் காட்சிகள் இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment